கடைசி 3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த ஆர்.சி.பி! – மும்பை அணிக்கு 172 ரன்கள் இலக்கு #MIvRCB

0 6

மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்ததுமும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் 31-வது லீக் போட்டியில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மா ஃபீல்டிங்கைத் தேர்வுசெய்தார் மும்பை அணியில் ஒரே ஒரு மாற்றமாக காயமடைந்த அல்சாரி ஜோசப்புக்குப் பதிலாக மலிங்கா அணிக்குத் திரும்பியிருக்கிறார் பெங்களூரு அணி கடந்த போட்டியில் களமிறங்கிய அதே லெவனுடன் களம் காண்கிறது இன்றைய போட்டியில் தென்னாப்பிரிக்க வேகம் ஸ்டெயின் பெங்களூரு அணியில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கவில்லை பெங்களூரு அணியின் இன்னிங்ஸை விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேல் மற்றும் கேப்டன் கோலி ஆகியோர் தொடங்கினர் நிதானமாக இன்னிங்ஸைத் தொடங்கிய இந்த ஜோடி 3-வது ஓவரில் பிரித்தார் பெஹ்ரண்டார்ஃப் மூன்றாவது ஓவரின் முதல் பந்தில் 8 ரன்களுடன் நடையைக் கட்டினார் விராட் கோலி இரண்டாவது விக்கெட்டுக்கு பார்த்திவ் படேலுடன் டிவிலியர்ஸ் கைகோத்தார் பவர் பிளே ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி ஒரு விக்கெட்டை இழந்து 45 ரன்கள் சேர்த்தது 28 ரன்கள் சேர்த்த நிலையில் பாண்ட்யா வீசிய 7-வது ஒவரில் பார்த்திவ் படேல் ஆட்டமிழக்க டிவிலியர்ஸுடன் மொயின் அலி ஜோடி சேர்ந்தார்நிதானமாக ரன் குவிக்கத் தொடங்கிய இந்த ஜோடி பின்னர் ரன் குவிப்பு வேகத்தை டாப் கியருக்கு மாற்றியது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மொயின் அலி 32 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 95 ரன்கள் சேர்த்தது மலிங்கா வீசிய 18-வது ஓவரின் முதல் பந்தில் அவர் ஆட்டமிழக்க அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் ஸ்டாயினிக்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார் மறுமுனையில் அதிரடி காட்டிய டிவிலியர்ஸ் பொலார்டின் துல்லிய த்ரோவில் வெளியேறினார் அவர் 51 பந்துகளில் 75 ரன்கள் குவித்தார் கடைசி ஓவரில் டிவிலியர்ஸின் விக்கெட் தவிர அக்ஷ்தீப் நாத் மற்றும் நெகி ஆகியோரின் விக்கெட்டுகளை ஆர்சிபி இழந்தது 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்தது மும்பை தரப்பில் மலிங்கா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்  

Leave A Reply

Your email address will not be published.