பிளேயிங் லெவனுக்குத் திரும்பிய மலிங்கா! – மும்பை சவாலை சமாளிக்குமா ஆர்.சி.பி #MIvRCB

0 6

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி ஃபீல்டிங்கைத் தேர்வுசெய்தது மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் 31-வது லீக் போட்டியில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மா ஃபீல்டிங்கைத் தேர்வுசெய்தார் மும்பை அணியில் ஒரே ஒரு மாற்றமாக காயமடைந்த அல்சாரி ஜோசப்புக்குப் பதிலாக மலிங்கா அணிக்குத் திரும்பியிருக்கிறார் பெங்களூரு அணி கடந்த போட்டியில் களமிறங்கிய அதே லெவனுடன் களம் காண்கிறது இன்றைய போட்டியில் தென்னாப்பிரிக்க வேகம் ஸ்டெயின் பெங்களூரு அணியில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கவில்லை தொடர்ந்து 6 போட்டிகளில் தோல்வியைத் தழுவிய பெங்களூரு அணி 7-வது போட்டியில் அஷ்வின் தலைமையிலான கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தி நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியைப் பதிவுசெய்தது பிளே ஆஃப் வாய்ப்பைத் தக்கவைத்துக்கொள்ள எஞ்சிய போட்டிகளில் வெற்றிபெறவேண்டிய கட்டாயத்தில் பெங்களூரு களம்காண்கிறது அதேநேரம் 7 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி 4 வெற்றிகளைப் பெற்றிருக்கிறது  

Leave A Reply

Your email address will not be published.