“இப்போ இவ்ளோதான்… மீதி, ஓய்வுக்குப் பின்னர் பார்க்கலாம்!” – ப்ளே ஆஃப் ரகசியம் பகிர்ந்த தோனி

0 4

மீண்டும் சென்னை சேப்பாக்கம் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி இரண்டு தோல்விகளுக்குப் பின்னர் சொந்த மண்ணில் மீண்டும் வெற்றி நடப்பு ஐபிஎல் தொடரில் தோனி தலைமையில் சென்னை மண்ணில் சிஎஸ்கே அணி பெறும் 5 -வது வெற்றி இது  இந்த வெற்றியின்மூலம் மீண்டும் முதலிடம் பிடித்திருக்கிறது சிஎஸ்கே  இந்தத் தொடரில் தொடர்ந்து சொதப்பிவந்த தொடக்க வீரர் வாட்சன் நேற்றைய போட்டியில் மாஸ் காட்டினார் ஆட்டநாயகன் விருது வென்ற வாட்சன் “கேப்டன் தோனி மற்றும் ஃபிளெம்மிங் என்மீது வைத்த நம்பிக்கைக்கு என்னால் நன்றி என்ற ஒற்றைச் சொல்லை மட்டும் சொல்ல முடியாது நான் பல அணிகளில் விளையாடியுள்ளேன் நான் இந்தத் தொடரில் விளையாடியதுபோல விளையாடி இருந்தால் நிச்சயம் கழற்றி விடப்பட்டிருப்பேன் ஆனால் என்மீது அவர்கள் தொடர்ச்சியாக நம்பிக்கை வைத்தனர்” என்றார் பாசத்துடன் ப்ரஸன்டேஷனில் தோனியிடம் வாட்சனுக்கு தொடர்ச்சியாக வழங்கப்பட்ட வாய்ப்புகுறித்து கேட்கப்பட்டது அதற்குப் பதிலளித்த தோனி “வாட்சன் எங்களுக்கு எப்போதுமே மேட்ச் வின்னர்தான் கடந்த சில போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடாமல் இருந்திருக்கலாம் பெரிய ஸ்கோர் செய்யாமல் இருந்திருக்கலாம் இந்த நேரத்தில்தான் ஒரு அணியாக அவர் பின்னால் இருக்க வேண்டும் வலைப்பயிற்சியில் அவர் தொடர்ச்சியாகக் கடுமையான பயிற்சிகள் மேற்கொண்டார் அணி நிர்வாகமும் அவருக்கு முடிந்த வரை வாய்ப்பு வழங்க நினைத்தது அணி தொடர்ச்சியாக வெற்றிபெறும்போது இதுபோன்று வாய்ப்புகள் வழங்க முடியும் ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு வீரர் சிறப்பாகச் செயல்பட்டது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார் Photo Credit TwitterIPLநேற்றைய வெற்றியின்மூலம் மீண்டும் ஒருமுறை சென்னை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெற்றிருக்கிறது சென்னை அணி விளையாடிய அனைத்துத் தொடரிலும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது இந்தச் சாதனையைச் செய்த ஒரே அணி நம்ம சிஎஸ்கே தான் இந்த ப்ளே ஆஃப் ரகசியம்தான் என்ன என்ற கேள்வி தோனியிடம் கேட்கப்பட்டது புன்னகையுடன் பேச ஆரம்பிக்கிறார் தோனி “அதை நான் சொல்லிவிட்டால் என்னை யாரும் வாங்க மாட்டார்களே அது வியாபார ரகசியம் ரசிகர்களின் ஆதரவும் சென்னை அணி நிர்வாகத்தின் ஆதரவும் கண்டிப்பாக குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும் மற்ற உதவியாளர்களும் (supporting staffs) எங்களின் வெற்றியில் முக்கியப் பங்காற்றினர் இதற்கு மேல் எதுவும் நான் ஓய்வுபெறும் வரை சொல்ல முடியாது” என்றார் மேலும் உலகக்கோப்பை குறித்துப் பேசிய தோனி “யெஸ் உலகக்கோப்பை தொடர் வருகிறது நான் இப்போது அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் உலகக்கோப்பைதான் முதல் முக்கியம்” என்றார் 

Leave A Reply

Your email address will not be published.