`இன்னும் எத்தனை காலம் எனத் தெரியாது; ஆனால் சாதிப்பார்’ – தோனி குறித்து சிலாகிக்கும் கபில்தேவ்

0 5

உலகக்கோப்பை போட்டிகள் குறித்தும் தோனி குறித்தும் முன்னாள் கேப்டன் கபில்தேவ் பேசியுள்ளார்பெங்களூரு – சென்னை அணிகள் மோதிய நடப்பு ஐபிஎல் தொடரின் 39-வது போட்டியில் பெங்களூரு அணி 1 ரன்னில் வெற்றிபெற்றது கடைசிவரை போராடிய தோனி தலைமையிலான சென்னை அணி தோல்வியைத் தழுவியது கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவை என்ற சூழல் உருவானது உமேஷ் யாதவ் வீசிய அந்த ஓவரின் முதல் 5 பந்துகளில் 3 சிக்ஸர்கள் ஒரு பௌண்டரி மற்றும் 2 ரன்கள் என 24 ரன்கள் எடுத்தார் தோனி கடைசிப் பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில் பந்து தோனியின் பேட்டில் படாமல் விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேலிடம் சென்றது அந்தப் பந்தில் நான் ஸ்டிரைக்கர் பேட்ஸ்மேனான தாக்கூரை பார்த்திவ் ரன் அவுட் செய்ய ஒரு ரன் வித்தியாசத்தில் பெங்களூரு த்ரில் வெற்றிபெற்றது இந்த இன்னிங்ஸின்போது மறுமுனையில் பிராவோ நின்றிருந்த சூழலிலும் சிங்கிள் எடுப்பதை தோனி தவிர்த்தார்அந்த சிங்கிள்களை தோனி எடுத்திருந்தால் சிஎஸ்கே வெற்றிபெற்றிருக்கும் என்ற விமர்சனம் எழுந்தது விமர்சனங்களைத் தாண்டியும் தோனியின் அதிரடியை வெகுவாக ரசித்ததாக ரசிகர்கள் கூறிவருகின்றனர் இந்த நிலையில் தோனி குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் பேசியுள்ளார் இதில் “தோனி இன்னும் எத்தனை காலம் விளையாட விரும்புகிறார் இன்னும் எத்தனை காலம் வேலைப்பளுவை அவரது உடல் தாங்கும் என யாருக்கும் தெரியாது ஆனால் தோனியைப் போல இந்திய அணிக்காக எந்த ஒரு கிரிக்கெட்டரும் இந்த அளவுக்கு பங்களிப்பு கொடுத்ததில்லை அவசியம் நாம் அனைவரும் அவரை மதிக்க வேண்டும் அவரை வாழ்த்தவும் வேண்டும் இந்த உலகக்கோப்பையை அவர் வென்று தருவார் என நான் நம்புகிறேன் உலகக்கோப்பையைப் பொறுத்தவரை இந்திய அணி சிறப்பான அணியாகத்தான் இருக்கிறது ஆனால் இந்த முறை உலகக்கோப்பையை வெல்வது அவ்வளவு எளிதானது கிடையாது ஒரு அணியாக நன்றாக விளையாட வேண்டும் நமது அணி வீரர்களுக்கு தற்போது எந்தக் காயமும் இல்லை என நான் நம்புகிறேன் என்றவர் ரிஷப் பன்ட் அணிக்குத் தேர்வு செய்யாதது குறித்தும் பேசினார் அதில் “தேர்வுக்குழுத் தலைவர்கள் அவர்களது பணியைச் செய்துள்ளனர் இதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் மதிக்க வேண்டும் ரிஷப் பன்டுக்குப் பதிலாக தினேஷ் கார்த்திக்கை எடுத்துள்ளார்கள் எனில் அது சரியாகத்தான் இருக்கும் தேர்வுக்குழுவின் பணியை நாம் நம்ப வேண்டும் எனக் கூறியுள்ளார்

Leave A Reply

Your email address will not be published.