`திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’ – மெரினா ஏரியாவில் மெர்சல் காட்டிய வாட்சன்! #CSKvSRH

0 8

கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டிருந்த சென்னை அணி திங்கள்கிழமைதான் டெல்லியிடம் அதைப் பறிகொடுத்தது மறுபக்கம் தடுமாறிக்கொண்டிருந்த ஹைதராபாத் அணி இப்போதுதான் டாப் 4-க்குள் நுழைந்தது சென்னை அணிக்கு கடந்த இரண்டு போட்டிகளும் தோல்வி முகம் ஹைதராபாத்திற்கோ கடைசி இரண்டு ஆட்டங்கள் தம்ப்ஸ் அப் காட்டின இந்த நிலையில்தான் நேற்று தமிழ்நாட்டு பரோட்டா – சால்னாவும் ஹைதராபாத் பிரியாணி – வெங்காய பச்சடியும் உக்கிரமாக மோதிக்கொண்டனமெரினாவில் பஜ்ஜியும் சேப்பாக்கத்தில் பாஜியும் இல்லாமல் எப்படி ஷர்துலுக்குப் பதில் உள்ளே வந்தார் ஹர்பஜன் பெர்சனல் காரணங்களுக்காக சன்ரைஸர்ஸ் கேப்டன் கேன் நியூசிலாந்து பறந்துவிட்டதால் புவனேஷ்வர் மீண்டும் கேப்டனானார் கேனுக்குப் பதில் ஷகிப் நதீமுக்கு பதில் மனிஷ் பாண்டே ஸ்பின்னர்களுக்குக் கைகொடுக்கும் பிட்ச்சில் நபியை இறக்கியிருக்கலாம்தான் ஆனால் மிடில் ஆர்டர் வீக்காக இருக்கும் லைன் அப்பில் ஷகிப் பேட்ஸ்மேனாக கைகொடுப்பார் என நினைத்தார்களோ என்னவோடாஸை வழக்கம்போல ஜெயித்தது தோனிதான் வழக்கம்போல சேஸிங்தான் இந்த சீசனில் 11 ஆட்டங்களில் ஒன்பது முறை சென்னை டாஸ் ஜெயித்திருக்கிறது சீசனின் டேஞ்சரஸ் டைனமோக்களான வார்னரும் பேர்ஸ்டோவும் களமிறங்கினார்கள் சஹாரின் ஸ்விங்கில் முதல் ஓவரில் நான்கு ரன்கள்தாம் பாஜியின் இரண்டாவது ஓவரில் பந்தை தொட்டுவிட முயன்று தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் பேர்ஸ்டோ சிம்பிளாக முடிந்தது பார்ட்னர்ஷிப் ஒன் டவுனில் இறங்கினார் மனிஷ் பாண்டே `மூணு வருஷத்துக்கு ஒருதபா தான் நல்லா ஆடுவேன்39 என முடிவு செய்து ஒவ்வொரு சீசனுக்கும் இறங்குவது அன்னாரின் வழக்கம் இந்த சீசனில் இதுவரை பெரிதாக அடிக்காவிட்டாலும் ஒன்டவுனில் ஆட ஆளில்லாமல் இறக்கிவிட்டார்கள் நோட்டாவை முந்திய பாஜகபோல இட் வாஸ் எ மெடிக்கல் மிராக்கிள் ரவுண்டு கட்டி வெளுத்தார் பாண்டே முதல் பாலிலேயே பௌண்டரி ஒருபக்கம் காட்டடி வார்னர் மறுபக்கம் சுளீர் சுளீர் என அடிக்கும் மனிஷ் என பந்து படாதபாடுபட்டது சிஎஸ்கே பௌலர்களும்தாம் பவர்ப்ளே முடிவில் 54 ரன்கள் சென்னை பிட்ச்சில் பெங்களூருவிலிருந்து கிளம்பியபோது கூடவே சின்னச்சாமி ஸ்டேடியத்தின் பிட்ச்சையும் பிய்த்து எடுத்து வந்து வைத்துவிட்டார்கள் போல என யோசிக்கும்படி ரன்ரேட் பறந்தது ஓவருக்கு ரெண்டு மூன்று சிங்கிள்கள் ஒரு டூஸ் கேப்பில் ஒரு பௌண்டரி அது சிக்காவிட்டால் `அடி ஒரு சிக்ஸை39 என அலட்டிக்கொள்ளாமல் ஆடினார்கள் இருவரும் 39எப்படி வந்தது39 என யோசிப்பதற்குள்ளாகவே நூறைக் கடந்தது ஸ்கோர் 12 ஓவர்களில் 103 ரன்கள் சென்னை பிட்ச்சில் இந்த சீசனில் நடந்திடாத அதிசயம் இதுசென்னை பௌலர்களையும் சும்மா சொல்லக்கூடாது Wide of off stump பந்துகளாக போட்டுக்கொடுத்துக்கொண்டே இருந்தார்கள் பேட்ஸ்மேன்களும் அலேக்காக அடித்துக்கொண்டே இருந்தார்கள் வார்னருக்கு முந்தி அரைசதம் அடித்தார் மனிஷ் ஸ்ட்ரைக் ரேட் 200 `வளர்ற புள்ள அதான் பீஸை எல்லாம் அதுக்குப் போட்டுட்டு குஸ்காவை மட்டும் நான் சாப்பிட்டேன்39 ரேஞ்சுக்கு நிதானம் காட்டினார் வார்னர் 39 பந்துகளில் அவரும் அரைசதம் அடித்தார் இந்த சீசனில் அவரின் எட்டாவது 50+ ஸ்கோர் இது அதுவும் இது தொடர்ந்து ஐந்தாவது அரைசதம்இந்த இணையைப் பிரிக்கவும் பாஜிதான் வரவேண்டியதாக இருந்தது ஏகப்பட்ட சிங்கிள் டூஸ் என வார்னர் ஏகத்துக்கும் டயர்டாகி இருந்தார் எனவே தூக்கியடிக்க ஆசைப்பட்டு முன்னால் வர பளிச் ஸ்டம்பிங் ஸ்கோர் 14 ஓவரில் 124 ரன்கள் ஈஸியாக 200-ஐத் தொட்டுவிடுவார்கள் என நினைத்தநேரத்தில் திரும்ப ஆட்டத்திற்குள் வந்தார்கள் சென்னை பௌலர்கள் இறுதி ஓவர்களில் இறுக்கிப்பிடிக்க ரன்ரேட் தள்ளாடியது மனிஷ் பாண்டேவும் டயர்டாகிப் போனார் கடைசி 2 ஓவர்களில் வெறும் 15 ரன்கள்தாம் ஸ்கோர் 175 ராஜஸ்தானோடு மோதிய ஆட்டத்தில் சென்னை எடுத்த அதே ஸ்கோர் டார்கெட்டை சேஸ் செய்தால் இந்த சீசனில் இதுதான் சேப்பாக்கத்தில் பதிவான ஹை ஸ்கோராக இருக்கும் வாட்சனும் டுப்ளெஸ்ஸியும் களத்தில் இறங்கினார்கள் வாட்சன் கடைசியாக பாகிஸ்தான் லீக்கில் ஆடியது ஐபிஎல்லில் ஸ்ட்ரீட் கிரிக்கெட்டில் தொட்டுக்கொடுத்து அவுட்டாகும் டபுள்சைட் போலத்தான் ஆடிக்கொண்டிருந்தார் அதை நிரூபிப்பது போலவே புவி வீசிய முதல் ஓவர் மெய்டன் `சரி டுப்ளெஸ்ஸி அடிப்பாரு39 என ரசிகர்கள் அந்தப் பக்கம் திரும்ப 39வெவ்வவ்வே39 காட்டி அவரும் கட்டை வைத்தார் சென்னையின் முதல் ரன் 11வது பந்தில்தான் வந்தது அடுத்த ஓவரிலேயே சிங்கிள் ரன்னுக்கு ஆசைப்பட்டு விக்கெட்டைவிட்டார் டுப்ளெஸ்ஸி 3 ஓவர்களில் 8 ரன்கள் 39ரைட்டு அதே டிசைன்39 என முக்காடு போட்டுக்கொண்டார்கள் ரசிகர்கள்ஆனால் கலீலின் இரண்டாவது ஓவரில் ஒரு சிக்ஸ் ஒரு பௌண்டரி அடித்து `நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு39 என பாடி லாங்குவேஜில் உணர்த்தினார் வாட்சன் மறுபக்கம் நான்கு பௌண்டரி ஒரு சிக்ஸ் என சந்தீப் ஓவரில் சடுகுடு ஆடினார் ரெய்னா விண்டேஜ் சென்னை பேட்டிங் அதன்பின் பைபாஸில் பறக்கும் ஆம்னிபஸ் போல வேகத்தைக் குறைக்கவே இல்லை இருவரும் ஆளானப்பட்ட ரஷித் ஓவரையே காலி செய்தார்கள் புவி பாவம் என்ன செய்வார் ரஷித்தை மட்டுமே நம்பினார் ரஷித்தும் சொன்னதுபோலவே ரெய்னாவைத் தூக்க உடைந்தது பார்ட்னர்ஷிப் 45 பந்துகளில் 77 ரன்கள் எடுத்த பார்ட்னர்ஷிப்அதன்பின் களம் கண்ட ராயுடு `நீ அடி பங்காளி நானும் இறங்கினா ரொம்பப் பெரிய கேங்வார் ஆயிடும்39 என ஒதுங்கிக்கொள்ள ஒன்மேன் ஷோவை காட்டு காட்டெனக் காட்டினார் வாட்சன் அதுவும் பச்சைப்பிள்ளை சந்தீப்பை அவர் அடித்த அடி இருக்கிறதே மறுபடியும் ஒரே ஓவரில் 19 ரன்கள் பௌலிங்கில் ஃபிப்டியை நெருங்கினார் சந்தீப் அடுத்து ரஷித் போட்ட ஓவரில் இரண்டு பௌண்டரி ஒரு சிக்ஸ் அவருக்கு வசதியாக சன்ரைஸர்ஸ் பௌலர்கள் ஷார்ட் பாலாக போட்டுக்கொடுக்க பளார் பளாரெனப் பறக்கவிட்டார் வாட்சன் கடலில் விழுந்த பந்தை கழுவி எடுத்துக்கொண்டுவந்து பௌலிங் போட்டு திரும்ப பறக்கவிட்டு விளையாடினார்கள் நைஸ் கேம்ரஷித்தின் கடைசி ஓவரிலும் ஒரு சிக்ஸ் ஒரு பௌண்டரி 39யோவ் நான் லெஜெண்டுய்யா39 – 39லெஜெண்டுன்னா போய் ஓரமா நில்லு போ39 – இப்படித்தான் இருந்தது வாட்சன் வெர்சஸ் ரஷித் ஆட்டம் உலகின் முன்னணி பௌலராக இருந்தும் வாட்சனுக்கு எக்கச்சக்க பந்துகள் போட்டும் இதுவரை ஒருமுறைகூட அவரை அவுட்டாக்கியது இல்லை ரஷித் கடைசியில் வாட்சனாகப் பார்த்து அவுட்டானபோது சென்னை ஸ்கோர் 160 17 பந்துகளில் 16 ரன்கள் தேவை சப்ப மேட்டர்தான் ஆனால் சென்னை அணியின் ரூல் புக்கில் கடைசி ஓவருக்கு முந்தி மேட்ச் முடியக்கூடாது என்று இருக்கிறதே போலவே குட்டிக்கரணம் எல்லாம் அடித்து ஸ்டம்ப்பை எல்லாம் பறக்கவிட்டு சிங்கிள் தட்டி கடைசியாக ஜெயித்தார்கள்மனிஷ் பாண்டே ரெய்னா வாட்சன் என இந்த ஆட்டம் `ஃபார்ம் அவுட் ஆனவர்கள் ஃபார்மை மீட்டெடுக்கும் ஆட்டம்39 புள்ளிப்பட்டியலில் முதலிடம் ஏறக்குறைய உறுதியாகிவிட்ட ப்ளே ஆஃப் வாய்ப்பு ஃபார்முக்குத் திரும்பும் முக்கிய வீரர்கள் இந்த சீசனில் சென்னையில் தோல்வியே காணாத ரெக்கார்டு என சிஎஸ்கே பையில் போட்டு எடுத்துப்போக ஏகப்பட்ட விஷயங்கள் இருந்தன இந்த கேமில் சன்ரைஸர்ஸுக்கோ பிரஷர் எகிறிக்கிடக்கிறது பிரசன்டேஷனில் மேன் ஆஃப் தி மேட்ச் வாங்கிய வாட்சன் `நான் இங்க உங்க முன்னாடி நிக்கிறேன்னா அதுக்குக் காரணம் தோனியும் ப்ளெமிங்கும்தான்39 எனப் பாசமழை பொழிந்தார் ஆமா சார் இது டீமில்ல விக்ரமன் சார் படம்  

Leave A Reply

Your email address will not be published.