ட்விட்டரில் சர்ச்சை போஸ்ட்! – கேரள பேட்மின்டன் வீரருக்கு 2 ஆண்டுகள் தடை

0 7

சமூக வலைதளமான ட்விட்டரில் கேரள பேட்மின்டன் சங்கத்தை விமர்சித்து பதிவு ஒன்றை இட்ட வீரருக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது கேரளாவைச் சேர்ந்தவர் என்ஜிபாலசுப்ரமணியன் மாநில அளவிலான பேட்மின்டன் போட்டிகளில் விளையாடி வந்த பாலசுப்ரமணியன் இந்தாண்டு நடைபெற்ற இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் இந்த நிலையில் கர்நாடகாவில் நடைபெற்ற பேட்மின்டன் போட்டிகளின் பரிசளிப்பையும் கேரள பேட்மின்டன் சங்கம் அளித்த பரிசையும் ஒப்பிட்டு அவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் அந்தப் பதிவில் கர்நாடகாவில் பேட்மின்டன் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர்களுக்குப் பரிசுக் கோப்பையுடன் ரூ14000 ரொக்கப் பரிசு அளிக்கப்பட்டதாகவும் ஆனால் கேரளாவில் அவ்வாறு ஊக்கத் தொகை எதுவும் அளிக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டிருந்தார்இந்த விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து 14 நாள்களுக்குள் விளக்கமளிக்குமாறு பாலசுப்ரமணியனுக்கு கேரளா பேட்மின்டன் சங்கம் கடந்த 16-ம் தேதி நோட்டீஸ் அனுப்பியிருந்தது இதையடுத்து கேரள பேட்மின்டன் சங்கத்துக்கு அவர் விளக்கமளித்திருந்தார் ஆனால் விளக்கம் திருப்தியளிக்கவில்லை என்று கூறி பாலசுப்ரமணியனுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதித்து கேரள பேட்மின்டன் சங்கம் உத்தரவிட்டிருக்கிறது மேலும் அந்தத் தொடர் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்பவரைத் தேர்வு செய்வதற்காகவே நடத்தப்பட்டதாகவும் பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்படவில்லை என்றும் கேரள பேட்மின்டன் சங்கம் தெளிவுபடுத்தியிருக்கிறது 4112018 முதல் 3112020 வரை மாவட்ட மாநில மற்றும் தேசிய அளவிலான பேட்மின்டன் போட்டிகளில் பங்கேற்க அவருக்குத் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Leave A Reply

Your email address will not be published.