வெல்டன் புஜாரா; 8 பேர் சொதப்பல்!- அடிலெய்ட் டெஸ்ட்டில் ஆஸி. பவுலர்கள் ஆதிக்கம்

0 8

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 250 ரன்கள் குவித்துள்ளது விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது முதலில் டி20 தொடர் நடைபெற்ற நிலையில் அது 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது இதற்கிடையே இன்று 4 போட்டிகள்கொண்ட டெஸ்ட் தொடர் அடிலெய்டில் தொடங்கியது முதலில் டாஸ் வென்ற இந்திய அணிக் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்இந்திய அணியில் முரளி விஜய் கேஎல் ராகுல் புஜாரா விராட் கோலி (கேப்டன்) ரஹானே ரோஹித் ஷர்மா ரிஷப் பண்ட் அஸ்வின் இஷாந்த் ஷர்மா முகமது ஷமி ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் ஆடும் லெவனில் இடம்பெற்றனர் தொடக்க வீரர்களாக களம்புகுந்த முரளி விஜய் – கேஎல்ராகுல் இணை அதிர்ச்சி கொடுத்தது இரண்டாவது ஓவரின் கடைசி பந்தில் இரண்டு ரன்களில் நடையைக்கட்டினார் கேஎல்ராகுல்அவரைத் தொடர்ந்து விஜய் 11 ரன்களுக்கும் கேப்டன் கோலி 3 ரன்களுக்கும் அவுட் ஆகி வெளியேறினர் இருப்பினும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இந்தியாவுக்கு தனது வழக்கமான பொறுமையான ஆட்டத்தால் அணிக்கு உயிர்கொடுத்தார் புஜாரா இவருக்கு ரோஹித் ஷர்மா ரிஷப் பான்ட் அஸ்வின் ஆகியோர் புஜாராவுக்கு பாட்னர்ஷிப் கொடுத்தனர் இவர்கள் மூவரும் முறையே 37 25 25 ரன்கள் எடுத்து அவுட் ஆகினர் அதேநேரம் பொறுமையாக ஆடி வந்த புஜாரா  சதம் அடித்து அசத்தினார் 231 பந்துகளில் சதத்தை நிறைவு செய்த அவர் இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது 16-வது சதத்தை எட்டி சாதனை படைத்தார் அதேபோல் இந்தப் போட்டியின்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 5000 ரன்கள் என்ற மைல்கல்லையும் எட்டினார்தொடர்ந்து 123 ரன்களுக்கு புஜாரா அவுட் ஆக இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 250 ரன்கள் எடுத்தது  முதல்நாள் ஆட்ட நேரம் முடிவுக்கு வந்தது ஷமியும் பும்ராவும் களத்தில் உள்ள நிலையில் நாளை இரண்டாவது நாள் ஆட்டம் நடைபெறுகிறது 

Leave A Reply

Your email address will not be published.