மிதாலி, பொவார், ஹர்மன், பி.சி.சி.ஐ – அனைவருமே தவறு செய்திருக்கிறார்கள்!

0 6

அசாருதின் – சித்து கங்குலி – சேப்பல் கும்ப்ளே – கோலி என ஆடவர்களால் மட்டுமே சர்ச்சைகளையும் சங்கடங்களையும் பார்த்துவந்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இப்போது மகளிர் கிரிக்கெட்டும் தன் பங்கிற்கு ஒரு பெரும் பிரச்னையைப் பரிசளித்திருக்கிறது மிதாலி – பொவார் விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்திச் சென்றுவிட்டதை நிச்சயம் மறுக்க முடியாது ரமேஷ் பொவாரின் ஒப்பந்தத்தைப் புதிக்காததால் மிதாலி ராஜ் – ரமேஷ் பொவார் இடையிலான பனிப்போர் ஒருவழியாக ஓய்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் ஹர்மன்ப்ரீத் கௌர் ஸ்மிரிதி மந்தனா இருவரும் தலைமையிடத்துக்கு மெயில் அனுப்பியுள்ளது இது மிதாலி பொவார் இருவர் சம்பந்தப்பட்ட பிரச்னை இல்லை என்பதை உணர்த்தியிருக்கிறது என்ன நடக்கிறது இந்திய கிரிக்கெட்டில்இது மிதாலி ரமேஷ் பொவார் ஹர்மன்ப்ரீத் ஸ்மிரிதி ஆகியோருடன் மட்டும் முடியும் பிரச்னை இல்லை முன்னாள் பயிற்சியாளர் துசார் அரோத் COA உறுப்பினர் டயானா எடுல்ஜி ஃபீல்டிங் பயிற்சியாளர் பிஜு ஜார்ஜ் வீடியோ அனலிஸ்ட் புஷ்கர் சாவந்த் டீம் மேனேஜர் துருப்தி பட்டாச்சார்யா மிதாலியின் மேனேஜர் முன்னாள் இந்திய வீராங்கனை நூஷின் என பல பெயர்கள் இந்த இடைப்பட்ட ஒருவார காலத்தில் செய்திகளில் இடம்பிடித்துள்ளனர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மிகச் சிறப்பாக விளையாடினோம் அதனால் அந்த அணியில் எந்த மாற்றமும் செய்யாமல் வெற்றி பெற்ற அணியையே மீண்டும் களமிறக்குகிறோம்ஹர்மன்ப்ரீத் கௌர்மிதாலி vs பொவார்- என்ன நடந்தது  (function (d) { var js id genially-embed-js ref dgetElementsByTagName(script)[0] if (dgetElementById(id)) { return } js dcreateElement(script) jsid id jsasync true jssrc httpsviewgeniallystaticembedembedjs refparentNodeinsertBefore(js ref) }(document))இந்த விஷயத்தை ஒவ்வொரு படியாக ஆராய்ந்தால் ஒவ்வொருவரின் பங்களிப்பையும் ஆராய்ந்தால் இந்திய மகளிர் அணி எப்படி இயங்கிக்கொண்டிருக்கிறது என்கிற மோசமான உண்மை புரியும் இன்னும் சற்று வெளிப்படையாகப் பார்த்தால் இது இந்திய மகளிர் அணியை மட்டும் சூழ்ந்திருக்கும் பிரச்னை இல்லை என்பதும் புரியும் இந்திய கிரிக்கெட் எப்படி இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதை நாம் கிரிக்கெட்டை எப்படி அணுகுகிறோம் என்பதை மீண்டும் உணர்த்தியிருக்கிறது இந்தப் பிரச்னை மிதாலி பொவார் ஹர்மன் என அவர்கள் பேசியது எல்லாமே உண்மை என்று எடுத்துக்கொண்டே இந்த விஷயத்தை அலசுவோம்மிதாலி டாப் ஆர்டர் மிடில் ஆர்டர்இந்தப் பிரச்னை தொடங்கிய இடத்தில் இருந்தே நாமும் அலசுவோம் மிதாலி இங்கிலாந்துக்கு எதிரான அணியில் சேர்க்கப்படாததையும் அதற்கு பொவார் சொன்ன காரணங்களையும் ஆராய்வது அவசியம் ஏனெனில் அந்த முடிவு வெறும் ஒரு நாளில் எடுக்கப்படவில்லை அதுமட்டுமல்லாமல் அந்த முடிவுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்ததும் மிதாலிதான் டி-20 உலகக் கோப்பையின் முதல் போட்டி நியூசிலாந்து எதிராக முதலில் களமிறங்கிய இந்திய அணிக்காக ஸ்மிரிதி மந்தனா – தானியா பாடியா ஜோடி களமிறங்கியது மிதாலி வரவில்லை இரண்டாவது ஓவரிலேயே முதல் விக்கெட் ஆனாலும் களமிறங்கியது ஜெமிமா ராட்ரிக்யூஸ் நான்காவது இடத்தில் ஹேமலதா அடுத்து கேப்டன் ஹர்மன்ப்ரீத் வேதா கிருஷ்ணமூர்த்தி களமிறங்கினர் ஐந்தாவது விக்கெட் விழுகிறது மிச்சம் இருக்கும் ஒரே புரொஃபஷனல் பேட்ஸ்மேன் மிதாலி மட்டுமே ஆனால் களமிறங்கியது ராதா யாதவ் மிகப்பெரிய அதிர்ச்சி மிதாலி களமிறங்கவேயில்லை ஹர்மன் தன் 39அட்டாக்கிங் கிரிக்கெட்39 பாணியில் உறுதியாக இருந்தார் அதுதான் பலமான நியூசிலாந்து அணியை வீழ்த்தக் காரணமாகவும் அமைந்தது ஆனால் அட்டாகிங் கிரிக்கெட்டில் மித்தாலிக்கு இடமில்லையா என்னவெஸ்ட் இண்டீஸ் கிளம்புவதற்கு முன்பு விளையாடிய கடைசி 10 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே மிதாலி அரைசதம் கடந்தார் 209 என்ற சராசரி வைத்திருந்தாலும் 9330 என்ற அவரது ஸ்ட்ரைக் ரேட் கொஞ்சம் உறுத்தத்தான் செய்தது அதிலும் சேஸிங் செய்த கடைசி 5 ஆட்டங்களில் அவரது சராசரி 6625 கடைசியாக விளையாடிய இலங்கை தொடரில் 3 ஒருநாள் போட்டிகளில் 177 ரன்கள் (சராசரி 17700) குவித்தவர் 4 டி-20 போட்டிகளில் 53 ரன்கள் (சராசரி 106) மட்டுமே எடுத்திருந்தார் அந்நிலையில் வெஸ்ட் இண்டீஸில் ஆடப்பட்ட 3 பயிற்சி ஆட்டங்கள் மிதாலிக்கு எமனாக அமைந்தன ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 9 பந்துகளில் 7 ரன்கள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக இரண்டாவது பந்தில் டக் இங்கிலாந்துக்கு எதிராக 25 பந்துகளில் 18 என மிகவும் மெதுவாகவும் சுமாராகவுமே விளையாடினார் நியூசிலாந்தை வீழ்த்தினால்தான் அரையிறுதி வாய்ப்பில் நீடிக்க முடியும் 2016-ல் முதல் இரண்டு போட்டிகளில் வென்றும் குரூப் சுற்றோடு வெளியேற நேர்ந்தது இம்முறை அது நடக்காமல் இருக்க பலமான நியூசிலாந்து அணியை வெல்வது முக்கியம் முதலில் பேட் செய்தால் பெரிய ஸ்கோர் எடுக்கவேண்டும் அதற்கு வேகமாக ஆடவேண்டும் இந்தத் தேவைகள் புரிந்துதான் முன்னரே மிதாலி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என்று முடிவு செய்யப்பட்டது இந்தியா 194 ரன்கள் எடுத்ததேஇதுதான் மிதாலி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகக் காரணம் என்றால் அதை அவர் ஒப்புக்கொண்டிருக்கவேண்டும் தான் அதிரடியாக ஆடுவதில்லை என்பதை அவர் ஏற்றுக்கொண்டிருக்கவேண்டும் கேப்டனும் பயிற்சியாளரும் அணிக்காக ஒரு திட்டம் வைத்திருக்கிறார்கள் என்றால் அதை மதித்திருப்பதே சரி அதை விட்டுவிட்டு ஓப்பனராக ஆடவிட்டால் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றிருப்பேன் என்று சொல்லியிருக்கிறாரென்றால் அது எந்த வகையில் சரி ஒரு சீனியர் இத்தனை ஆண்டுகள் கேப்டனாக இருந்தவர் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தது ஏன்சச்சின் ஃபின்ச் மோர்கன் ரூட்இந்திய ஆண்கள் அணி 2007 உலகக் கோப்பையில் எவ்வளவு களேபரங்களுக்கு இடையே களமிறங்கியது அப்போது உலகக் கோப்பையில் 39உத்தப்பா ஓப்பனிங் சச்சின் மிடில் ஆர்டர்39 என்பதில் பிடிவாதமாக இருந்தார் பயிற்சியாளர் கிரெக் சேப்பல் சேப்பல் – கங்குலி பிரச்னை வீரர்களுக்கு மத்தியில் பல சங்கடங்களை ஏற்படுத்தியிருந்தது மற்ற சீனியர் வீரர்களுமே பயிற்சியாளர்மீது வெறுப்பில்தான் இருந்தார்கள் 39பிளேயிங் இட் மை வே39 என்ற தன் சுயசரிதையில் சச்சினும் சமீபத்தில் வெளிவந்த 39281 அண்ட் பியாண்ட்39 என்ற தன் சுயசரிதையில் விவிஎஸ் லட்சுமணும்கூட அதைச் சொல்லியிருந்தனர் ஆனால் அப்போது சேப்பல் பயிற்சியாளராக இருந்தபோது சச்சின் அவரது முடிவை மதித்தார் மிடில் ஆர்டரில் களமிறங்கினார் பெர்முடாவுக்கு எதிரான உலகக் கோப்பைப் போட்டியில் ஆறாவது வீரராகவும் களமிறக்கப்பட்டார் அப்போது இந்திய அணி இருந்ததும் அதே வெஸ்ட் இண்டீஸில்தான் சச்சின் நினைத்திருந்தால் மிதாலி செய்ததுபோல் அங்கிருந்து ஒரு ஃபோன் கால் மெயில் செய்து பிரச்னையை போர்டு வரை எடுத்துச் சென்றிருக்கலாம் அவருக்கு இருந்த செல்வாக்குக்கு அவர் நினைத்ததெல்லாம் நடந்திருக்கும் ஆனால் அவர் செய்யவில்லையே பயிற்சியாளருடன் மாற்றுக்கருத்து இருந்தாலும் அவரைப் பிடிக்கவில்லை என்றாலும் அவரது முடிவை மதிக்கத்தானே செய்தார் உலகின் தலைசிறந்த ஓப்பனர் பிடித்ததோ பிடிக்கவில்லையோ பயிற்சியாளரை மதித்து ஆறாவது பேட்ஸ்மேனாகக் களமிறங்கினார் நிகழ்கால எடுத்துக்காட்டுகளையே எடுத்துக்கொள்வோம் ஆரோன் ஃபின்ச் – ஆஸ்திரேலிய ஒருநாள் அணியின் கேப்டன் டெஸ்ட் அணியிலும் ஓப்பனராகிவிட்டார் டெஸ்ட் தொடர் தொடங்கும் முன் sheffied shield தொடரில் விக்டோரியா அணிக்காக ஃபின்ச் ஆடினார் 39ஃபின்ச் வருகைக்காக ரெகுலர் ஓப்பனர்களை மாற்ற முடியாது39 என்பதில் உறுதியாக இருந்தார் விக்டோரியா பயிற்சியாளர் மெக்டொனால்ட் ஃபின்ச் – ஆஸ்திரேலிய ஒருநாள் அணியின் கேப்டன் சர்வதேச வீரர் முதல்தர வீரர்கள் ஓப்பனிங் ஆட அமைதியாக மூன்றாவது வீரராக விளையாடினார் 39ஓப்பனிங் இறங்கினால்தான் இந்திய தொடரில் சிறப்பாக ஆடமுடியும்39 என்று பிடிவாதம் பிடிக்கவில்லை தேசிய அணி பயிற்சியாளர் போர்டு ஆகியோரின் உதவியை நாடவில்லை தான் அப்போது ஆடும் பயிற்சியாளரின் முடிவை மதித்தார் ஜோ ரூட் – இப்போதைக்கு கிரிக்கெட்டின் டாப் – 4 பேட்ஸ்மேன்களில் ஒருவர் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் ஆனால் இந்தியாவுக்கு எதிரான டி-20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் 09 என அவுட்டாக மூன்றாவது போட்டிக்கான அணியிலிருந்து நீக்கப்பட்டார் இத்தனைக்கும் கடைசி 10 டி-20 இன்னிங்ஸ்களில் 7 முறை 25+ ஸ்கோர் அடித்திருந்தார் ஆனால் அவரது ஸ்லோ கேம் இங்கிலாந்துக்கு செட்டாகவில்லை தொடரை வெல்லவேண்டிய முக்கியமான மூன்றாவது போட்டிக்கு ரூட் இல்லாமல் களமிறங்கியது அந்த அணி இலங்கைக்கு எதிரான டி-20 போட்டிகளிலும் ஆடவில்லை ஜோ ரூட் டி-20 போட்டிகளில் சேர்க்கப்படுவதில்லை ஆனால் அவர் அதைப் பற்றி மீடியாவில் பேசுவதில்லை ஒருநாள் போட்டிகளில் முன்பைப் போல் ஆடுகிறார் டெஸ்ட் அணியை வெற்றிகரமாக வழிநடத்துகிறார்  39டி-20 போட்டிகளில் எடுக்காவிட்டால் டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக செயல்படமாட்டேன்39 என்று அவர் மிரட்டவில்லை பயிற்சியாளர் டிரெவர் பெய்லிஸ் கேப்டன் இயான் மோர்கன் எடுத்த முடிவுக்குக் கட்டுப்பட்டுள்ளார்மோர்கனுமே ஒரு நல்ல எடுத்துக்காட்டுதான் அவர் டெஸ்ட் கிரிக்கெட் ஆடி 6 ஆண்டுகள் ஆகிவிட்டது சமீபத்தில் இலங்கை டெஸ்ட் தொடர் வெற்றிக்குப் பிறகு அவரிடம் 39டெஸ்ட் போட்டிகளுக்கு கம்பேக் கொடுப்பீர்களா39 என்று கேட்கப்பட்டது ஒருசிலர் வாய்ப்பு கிடைக்காதபோது 39நல்ல அணியில் விளையாடியிருந்தால் நான் ஜொலித்திருப்பேன்39 என்று நினைப்பார்கள் ஆனால் நான் மிகச் சிறந்த அணியில் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் என்ற மிகச்சிறந்த கேப்டனின் கீழ் மிகச்சிறந்த சூழலில்தான் கிரிக்கெட் விளையாடினேன் அது எனக்கான ஃபார்மட் இல்லை நான் மீண்டும் டெஸ்ட் விளையாடப்போவதில்லை தனக்கு எது வரும் வராது என்பதை ஒப்புக்கொள்வதுமே மிகப்பெரிய விஷயம் இரண்டாவது முறையாக இங்கிலாந்தை உலகக் கோப்பையில் வழிநடத்தப்போகும் ஒரு கேப்டன் இப்படி வெளிப்படையாக தன் இயலாமையை ஒப்புக்கொள்வது எவ்வளவு பெரிய விஷயம் ஏன் மிதாலியால் தன் டி-20 பிரச்னையை ஏற்றுக்கொள்ள முடியவில்லைவீரர்கள் பயிற்சியாளர்களுக்கு நடுவே எத்தனையோ சண்டைகள் நிகழ்ந்துள்ளன ஆனால் பெரும்பாலும் அது அணியின் நலனை பாதிக்காமல் இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார்கள் அப்படி இருப்பதுதான் அவர்களுக்கும் அந்த அணிக்கும் நல்லது மிதாலி இதை உணர மறந்தது ஏன் 3920 ஆண்டுகளில் இதுபோல் நான் வருந்தியதில்லை39 என்று வருந்துகிறார் மிதாலி 20 ஆண்டுகளில் ஒருமுறை கூடவா பயிற்சியாளருடன் பிரச்னை ஏற்பட்டிருக்காது 20 ஆண்டுகளில் அணிக்குள்ளான பிரச்னையை அவர்களுக்குள்ளாகவே எப்படித் தீர்த்துக்கொள்வது என்பதைக் கற்றுக்கொள்ளாமல் விட்டுவிட்டாரா நிச்சயமாக இந்த விஷயத்தில் மிதாலி செய்தது தவறு அவர் மிடில் ஆர்டரில் விளையாடியிருக்கவேண்டும் அதற்கு சம்மதித்திருந்தால் நிச்சயம் அரையிறுதியில் அவர் விளையாடியிருப்பார் அது நடக்காததற்குக் காரணம் மிதாலிதான் மிதாலி உள்ளே வெளியேரமேஷ் பொவார் – மிதாலியை அணியில் எடுப்பது எடுக்காமல் இருப்பது போன்ற டெக்னிக்கல் முடிவை எடுக்கும் உரிமை அவருக்கும் இருக்கிறது டி-20 அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சுமுகமாக முடிவெடுக்கச் சம்மதிக்கிறார் என்றார் அவர் தாராளமாக அந்த முடிவை எடுக்கலாம் ஆனால் அதை அவர் எப்படி செயல்படுத்தியிருக்கவேண்டும் கண்ணியமான முறையிலல்லவா அது நடந்திருக்கவேண்டும் இங்கிலாந்து அணிக்கெதிரான அரையிறுதியின்போது எப்போதும் போல் இந்திய அணியின் ஜெர்சி அணிந்துதான் அமர்ந்திருந்தார் மிதாலி தான் அணியில் இல்லை என்ற கேப்டன் மற்றும் பயிற்சியாளரின் முடிவு போட்டிக்கு முந்தைய நாள் அவருக்குச் சொல்லப்படவில்லை என்பது அதில் தெளிவாகத் தெரிகிறது 19 ஆண்டுகள் இந்திய அணிக்காக ஆடியவரை இப்படியா டீல் செய்வது அவர் அரையிறுதியில் ஆடவில்லை என்பதை டாஸ் போடுவதற்கு முன்புவரை சொல்லாமல் இருந்ததையெல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியாது பொவார் நிச்சயம் பிரச்னைகளை சரியாகக் கையாண்டிருக்கவேண்டும் என்னதான் ஒரு வீரர் பிடிவாதமாக இருந்தாலும் இவர் அதை சரிசெய்திருக்கவேண்டும் அதுதான் அவர் பணியும்கூட அதைவிட்டுவிட்டு மிதாலி வலைப்பயிற்சிக்கு வந்தால் அங்கிருந்து செல்வது முகம் பார்க்காமல் நடந்துகொள்வது அணிக்கு ஆரோக்கியமான விஷயம் இல்லை   Created with SketchCreated with Sketchgenially-view-eye-point{animationeye-point ease-in-out 10s infiniteanimation-delay2s}genially-view-eye-circle{animationeye-circle ease-in-out 10s infiniteanimation-delay2stransform-origin40% 40%}@keyframes eye-point{0%100%15%{transformtranslate(00)}3%6%{transformtranslate(-7px-5px)}12%9%{transformtranslate(-8px4px)}40%42%43%45%{transformtranslate(00)clip-pathellipse(100% 100%)}41%44%{transformtranslate(00)clip-pathellipse(100% 0)}}@keyframes eye-circle{0%100%15%{transformtranslate(00)}3%6%{transformtranslate(-2px-2px) rotate(-15deg)}12%9%{transformtranslate(-25px25px) rotate(15deg)}40%42%43%45%{transformtranslate(00)clip-pathellipse(100% 100%)}41%44%{transformtranslate(00)clip-pathellipse(100% 0)}}Created with Sketch15Created with SketchCreated with Sketch  மிதாலி அறிமுகமானபோதுஇந்திய மகளிர் அணி வீராங்கனைகளின் வயது–மிதாலிஅறிமுகமான நாள்ஜூன் 26 1999CLICK THE IMAGESInteractive by sHarif Mohamed  (function (d) { var js id genially-embed-js ref dgetElementsByTagName(script)[0] if (dgetElementById(id)) { return } js dcreateElement(script) jsid id jsasync true jssrc httpsviewgeniallystaticembedembedjs refparentNodeinsertBefore(js ref) }(document))இந்த பிரச்னை பற்றி சமீபத்தில் பேசிய முன்னாள் வீரர் சந்தீப் பாடில் நான் தேர்வாளராக இருந்தபோது சச்சின் சேவாக் யுவ்ராஜ் ஜஹீர் கான் கம்பீர் என பல சீனியர் வீரர்களை அணியில் தேர்வு செய்யாமல் இருந்ததுண்டு வீரர்களுக்குக் கடும் அதிருப்தியாக இருக்கும் ஆனால் அதை யாரும் பிரச்னையாக்கியதில்லை இந்தியா போன்ற ஒரு மிகப்பெரிய அணியில் பொறுப்பிலிருக்கும்போது மிகப்பெரிய நட்சத்திரங்களைக் கையாளும் ஆற்றல் வேண்டும் என்று கூறினார் சரிதான் இந்தியா போன்ற அணியை நிர்வகிக்க கூடுதல் சிரத்தை எடுத்துக்கொள்ளவேண்டும் ரமேஷ் பொவார் இந்திய அணிக்கு அறிமுகமாவதற்கு 5 ஆண்டுகள் முன்பே இந்திய உடையணிந்து ஆடியவர் மிதாலி ஜெமிமா ராட்ரிக்யூஸ் ராதா யாதவ் போன்ற வீராங்கனைகள் பிறப்பதற்கு முன்பே தேசிய அணிக்காக ஆடத் தொடங்கியவர் பலருக்கும் ரோல் மாடலாக இருப்பவர் சர்வதேச அளவில் பல சாதனைகளைத் தன்வசம் வைத்திருப்பவர் நிச்சயம் மரியாதையை எதிர்பார்ப்பார் அவர் எதிர்பார்க்காவிட்டாலும் அந்த இடத்தில் அது கொடுக்கப்பட்டிருக்கவேண்டும் ஆனால் பொவார் அதைத் தரவில்லை 39அவர் அடம்பிடிக்கிறார் என்பதற்காக மிதாலி பார்த்தால் முகத்தைத் திருப்பிக் கொள்வது அவர் நெட் பிராக்டீஸ் போனால் அங்கிருந்து வெளியேறுவது இதுபோன்ற செயல்களைச் செய்வது எந்த வகையில் சரி பொவார் செய்தது மிகப்பெரிய தவறுமிதாலி vs ஹர்மன் + ஸ்மிரிதி + இந்தப் பிரச்னையை மிதாலி பொவார் கையாண்டது மட்டுமல்ல ஹர்மன்ப்ரீத் ஸ்மிரிதி ஆகியோர் கையாளும் விதமும் தவறுதான் மிதாலியை அரையிறுதியில் எடுக்கக்கூடாது என்பதைக் கூடி முடிவு செய்துவிட்டனர் மிதாலியுடன் இருந்த ஈகோ பிரச்னையால் பொவார் அதைச் சொல்லவில்லை ஹர்மன் ஸ்மிரிதி இருவரில் ஒருவரேனும் சொல்லியிருக்கலாமே அவர்களும் மித்தாலியை ஓரம் கட்ட நினைத்துவிட்டனரா ஒருவேளை மிதாலி மீண்டும் 39ஓய்வு பெறுகிறேன்39 என்று சொல்லிவிடுவாரோ என நினைத்திருக்கலாம் சரி ஆனால் பிரச்னை ஓய்வதற்கு முன்பே 39பொவார் பயிற்சியாளராக வேண்டும்39 என்று மெயில் அனுப்புவதன் அவசியம் என்ன இரண்டு கேப்டன்கள் இரண்டு சீனியர் பிளேயர்கள் தெரிந்தோ தெரியாமலோ பிரச்னையின் எதிர்த் துருவங்களில் நிற்கிறார்கள் அதைச் சரிசெய்திருக்கவேண்டாமா அரையிறுதி முடிந்ததும் மிதாலியின் மேனேஜர் அன்னிஷா குப்தா ஹர்மன்ப்ரீத் ஒரு மோசமான பொய் சொல்லும் வளராத லாயக்கற்ற கேப்டன் அணியில் அரசியல் செய்துகொண்டிருக்கிறார் என்று ட்வீட் செய்கிறார் அப்படியொரு ட்வீட் செய்ததற்கு மிதாலி வருத்தம் தெரிவிக்கவில்லை தன் மேனேஜரையும் வருத்தம் தெரிவிக்கச் சொல்லவில்லை இந்தியா வந்தபிறகு I don39t regret that decision என்று படார் என்று பேசுகிறார் ஹர்மன் இரு சீனியர் வீராங்கனைகளுக்கு இடையில் என்னதான் நடக்கிறது20 ஆண்டுகளில் இதுபோல் நான் மனம் வருந்தியதில்லை என்று சொல்லும் மிதாலி யாருமே இல்லாததுபோல் உணர்ந்தேன் என்கிறார் அரையிறுதி முடியும்வரை அவர் அமைதியாக தனியாகவே இருந்ததைக் காண முடிந்தது அவர் அப்படி நினைக்கிறார் என்பதில் வீராங்கனைகளுக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது என்பது வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது கங்குலியைப் பற்றி சேப்பல் முதலில் குற்றம் சாட்டியது இ-மெயில் மூலமாகத்தான் அவர் அந்த மெயிலை டிரஸ்ஸிங் ரூமில் டைப் செய்துகொண்டிருந்தபோது அந்தப் பக்கம் வந்த சேவாக் அதைப் பார்த்திவிட்டார் உடனே அந்த மெயில் பற்றிய விஷயம் கங்குலியின் காதுகளுக்குச் செல்கிறது பிரச்னை அதன்பிறகுதான் பெரிதானது ஆனால் சேவாக் அந்த இடத்தில் செய்தது – தன் கேப்டனுக்கு சீனியர் வீரருக்கு  உண்மையாக இருந்தது அப்படியான உறவு இந்த அணியில் மிதாலிக்கு இல்லையோ என்றுதான் தோன்றுகிறது அப்படிப்பட்ட உறவு மிதாலிக்கு இந்த அணியில் இல்லையா பிளேயிங் லெவன் பற்றி அறிந்திருந்த ஒருவர் கூடவா மிதாலியிடம் சொல்ல நினைக்கவில்லை அப்படியெனில் யாரிடம் பிரச்னை இந்தச் சந்தேகத்தை மிதாலி பயன்படுத்திய ஒரு வார்த்தை வலுப்படுத்துகிறது பிசிசிஐ-க்கு முதலில் அனுப்பிய மெய்லில் ஹர்மன்ப்ரீத் பொவாரின் திட்டத்துக்கு சம்மதித்தற்காக வருத்தம் தெரிவித்தார் மிதாலி மேலும் அந்தக் கடிதத்தில் 39என்ன இருந்தாலும் ஒருநாள் கேப்டனாக ஹர்மனை முக்கியமான வீராங்கனையாகப் பார்க்கிறேன்39 என்று ஒரு வரி எழுதியிருக்கிறார் நடக்கும் பிரச்னைகளுக்குச் சம்பந்தம் இல்லாத அந்த வரி 39இன்னும் நான்தான் ஒருநாள் அணியின் கேப்டன்39 என்ற தொனியில் இருப்பதுபோல் தெரிகிறது இந்தப் போக்கைக் கடைப்பிடித்தால் சக வீராங்கனைகள் எதிர்ப்பக்கம்தானே நிற்பார்கள்இப்படி இருவரும் இரண்டு பக்கம் நின்றால் அந்த அணியின் நிலைமை என்ன ஜூனியர் வீராங்கனைகளுக்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டியவர்கள் வெளிப்படையாகவும் பேசாமல் தங்களுக்குள்ளும் பிரச்னையை முடித்துக்கொள்ளாமல் இருப்பது அணிக்கு நல்லதல்ல இந்த இடத்தில் மீண்டும் மோர்கன் ரூட் கதைக்கே போவோம்மூன்றாவது டி-20 போட்டியில் ரூட்டை நீக்கவேண்டும் என்று எடுத்தது மிகவும் கடினமான முடிவு அதை அவரிடம் சொல்வது ரொம்பவுமே கடினமாக இருந்தது அவருக்கு அதில் ஒப்புதல் இல்லையென்றாலும் அணியின் முடிவு என்பதால் ஏற்றுக்கொண்டார் என்று சொன்னார் மோர்கன் ரூட் மோர்கன் மீது அதிருப்தி கொண்டிருக்கலாம் அது வெளிப்பட்டிருக்கலாம் வெளிப்படாமலும் இருந்திருக்கலாம் ஆனால் அது இங்கிலாந்து டிரஸ்ஸிங் ரூமை விட்டு வெளியேறவில்லை ஆனாலும் மீடியா கதைகள் கட்ட வாய்ப்பிருக்கிறதேஇல்லை அதற்கு அவர்கள் இடம் தரவில்லை ஒருவாரத்துக்குள் அந்த சந்தேகங்களைக் களைத்தார்கள் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் 3-வது போட்டி இருவரும் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை நெருங்கிக்கொண்டிருக்கிறார்கள் 42-வது ஓவர் முடிவில் மோர்கன் 85 ரூட் 91 வெற்றிக்குத் தேவை 13 ரன்கள் ரூட் சதமடிப்பதற்காக ரன் எடுக்கும் வேகத்தைக் குறைத்தார் மோர்கன் அதன்பிறகு அவர் சந்தித்த 8 பந்துகளில் மூன்றே சிங்கிள்கள் ஷர்துல் தாகூர் வீசிய ஒரு ஓவரில் 4 டாட் பால்கள் வைத்தார் ரூட் சரியாக 100 ரன் எடுக்க ஆட்டம் முடிந்தது கமென்டரியில் Morgan helping Root for his hundred மீடியாவுக்கு எந்த வாய்ப்பும் வழங்கவில்லை மோர்கன் அணியின் கெமிஸ்ட்ரி சரியாக இருக்கவேண்டும் என்பதில் தெளிவாக இருப்பவர்கள் அவர்கள் மேலே சொல்லப்பட்ட மோர்கன் பேட்டியில் இன்னொரு கேள்வியும் கேட்கப்பட்டது டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து வென்றதற்கு ஒருநாள் டி-20 தொடர்களில் பெற்ற வெற்றிகள் காரணம் என்று நினைக்கிறீர்களா மிக நுட்பமாகப் பதில் சொன்னார் மோர்கன் நான் அப்படி நினைக்கவில்லை ஒருநாள் தொடர் வெற்றி மனதளவில் உதவியதா என்பதை ரூட்டிடம்தான் நீங்கள் கேட்கவேண்டும் டெஸ்ட் வீரர்கள் கேப்டன் ரூட் ஸ்டைலிலும் அந்த டெஸ்ட் அணியின் ஸ்டைலிலும்தான் விளையாடினார்கள் என்றார் எப்படியெல்லாம் எங்கெல்லாம் ஈகோ மோதல்களைத் தவிர்க்காமல் இருக்கும் கருத்துவேறுபாடுகளைச் சரிசெய்யவேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார் அந்தத் தெளிவு மிதாலி ஹர்மன் இருவருக்குமே இல்லாதது பெரும் சோகம் துசார் அரோத் – முதல் விக்கெட்39ஏதோ ஒரு முறை பிரச்னை நடந்துவிட்டது அதை ஏன் பெரிதுபடுத்தவேண்டும்39 என்று சிலர் கேட்கலாம் இதைப் பெரிதுபடுத்தியாகவேண்டிய சூழ்நிலை இருக்கிறது ஏனெனில் இதுதான் இந்திய மகளிர் அணிக்குள் நடக்கும் முதல் பிரச்னையா என்றால் இல்லை ஆனால் சில மாதங்களுக்கு முன்பே அணியின் பயிற்சியாளருடன் வீராங்கனைகளுக்கான பிரச்னை நடந்தது அந்தப் பிரச்னை நடந்தபோது இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தவர் துஷார் அரோத் அப்போது அது பெரிய சர்ச்சையாகப் பார்க்கப்படவில்லை இப்போது உலகக் கோப்பை என்பதால் மிதாலி – பொவார் மோதல் மீடியா வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது ஆஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் தொடர் முத்தரப்புத் தொடர் ஆசிய கோப்பை ஆகியவற்றில் இந்தியா சொதப்ப பயிற்சியாளர் அணுகுமுறையில் அதிருப்தி தெரிவித்தார்கள் இந்திய வீராங்கனைகள் ஒரு நாளுக்கு காலை இரண்டை மணி நேரம் மாலை இரண்டரை மணி நேரம் என இரண்டு செஷன்களாக வீராங்கனைகளைப் பயிற்சிக்கு வரச்சொல்லியிருக்கிறார் அரோத் 39இரண்டு செஷன்களாக பயிற்சி நடப்பதால் ஜிம் ஸ்விம்மிங் போன்றவற்றில் கவனம் செலுத்தமுடியவில்லை பிராக்டீஸை ஒரே செஷனாக முடிக்கவேண்டும்39 என்று பயிற்சியாளரிடம் வீராங்கனைகள் தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது அதை அவர் மாற்றிக்கொள்ள மறுத்திருக்கிறார் பிரச்னையை போர்டுக்கு சீனியர் வீராங்கனைகள் எடுத்துச்சென்று நெருக்கடி ஏற்படுத்த ஜூலை மாதம் பதவி விலகினார் அரோத்ஆக பயிற்சியாளருடன் கருத்து வேறுபாடு ஏற்படுவது இது முதல் முறையல்ல கடந்த 4 மாதங்களில் இது இரண்டாவது முறை கிட்டத்தட்ட இது கும்ப்ளே – கோலி விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னைதான் ஆண்கள் அணியில் எழுந்த பிரச்னை என்பதாலும் கும்ப்ளே நன்கு அறியப்பட்டவர் என்பதால் அது தொலைக்காட்சிக்கும் சமூக வலைதளங்களுக்கும் செய்தியானது அதே போன்றதொரு பிரச்னையால் அரோத் என்ற அறியப்படாத ஒரு பயிற்சியாளர் விலகியது தினசரிக்கான செய்தியானது அவ்வளவுதான் தொடக்கம் எங்கேமிதாலி ராஜ் ஹர்மன்ப்ரீத் கௌர் ரமேஷ் பொவார் துசார் அரோத் இவர்களில் யார்மீது தவறு என்று ஆராய்வது ஒருபுறம் இருக்கட்டும் அதைவிட முக்கியமான ஒரு விஷயம் எதனால் இந்தப் பிரச்னைகள் கிளம்புகிறது என்பதில்தான் நிர்வாகத்துக்குள் பேசி முடிக்கவேண்டிய விஷயம் காற்றில் உலாவிக்கொண்டிருக்கிறது 4 மாத இடைவெளியில் இரண்டு பயிற்சியாளர்கள் மாற்றப்பட்டிருக்கிறார்கள் என்ன நடந்துகொண்டிருக்கிறது இந்திய கிரிக்கெட்டில்வீரர்கள் நட்சத்திர அந்தஸ்து அடையும்போதெல்லாம் இப்படியான ஈகோ பிரச்னைகள் இந்திய கிரிக்கெட்டில் தலைதூக்கிக்கொண்டுதான் இருக்கிறது 2017 உலகக் கோப்பை தொடருக்கு முன் இந்திய மகளிர் கிரிக்கெட்டில் இப்படியான பிரச்னைகள் எழவில்லை மிதாலி ஹர்மன் ஸ்மிரிதி என வீராங்கனைகளைக் கொண்டாடத் தொடங்கினோம் மீண்டும் கோலி – கும்பிளே நிகழ்வுபோல் கிரெக் சேப்பல் – கங்குலி நிகழ்வுபோல் ஒன்று நிகழ்ந்துள்ளது39பயிற்சி முறைகள் எங்களுக்கு ஒத்துவரவில்லை39 – கும்பிளேவைப் பற்றி கோலி சொன்னது 4 மாதங்கள் முன் அரோத் பற்றி இந்திய சீனியர் வீராங்கனைகள் சொன்னது39அவர் நான் எதிர்பார்க்கும் ஒத்துழைப்பைக் கொடுக்கவில்லை39 – கங்குலி பற்றி சேப்பல் சொன்னது இப்போது மிதாலி பற்றி பொவார் சொல்வது39அவர் எனக்கான மரியாதையைக் கொடுக்கவில்லை என்னை ஒழித்துக்கட்டப் பார்க்கிறார் – சேப்பல் பற்றி கங்குலி சொன்னது இப்போது பொவார் பற்றி மிதாலி சொல்வது தவறான புரிதல் டெக்னிக்கல் பிரச்னை அணிக்காக எடுக்கப்பட்ட முடிவு என்பதெல்லாம் இங்கு சிக்கல் இல்லை முழுக்க முழுக்க எல்லாமே ஒவ்வொருவரின் ஈகோவாலும் எழுந்த பிரச்னைகளே பொவார் மிதாலியிடம் முகத்தைத் திருப்பிக்கொள்ளாமல் இருந்திருந்தால் மிதாலி மிடில் ஆர்டரில் ஆடியிருந்தால் ஹர்மன் ஸ்மிரிதி போன்றவர்கள் மிதாலியிடம் வெளிப்படையாக நடந்திருந்தால் இந்தப் பிரச்னைகள் எழுந்திருக்காது இது இந்திய கிரிக்கெட் ஒவ்வொரு வீரருக்கும் நிர்வாகிக்கும் தண்ணீர் ஊற்றி வளர்த்துக்கொண்டிருக்கும் குணம் கொஞ்சம் பெயரெடுத்துவிட்டால் இங்கு தனி மரியாதை கொடுக்கப்பட்டே ஆகவேண்டும் இல்லையென்றால் கேப்டன் மாற்றம் பயிற்சியாளர் மாற்றம் எல்லாமே நிகழும் உண்மையில் ஈகோவைத் தவிரு இங்கு வேறு எந்தப் பிரச்னையும் இல்லை யார் தலைவலிஇவ்வளவு பிரச்னைகளையும் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருக்கிறது பிசிசிஐ உலகக் கோப்பை முடிந்ததும் முதலில் இரண்டு தரப்பிடமும் தனியாகப் பேசிவிட்டு அடுத்து ஒன்றாக இணைந்து அதைப் பற்றி ஆலோசனை செய்திருக்கவேண்டும் அதைச் செய்யவில்லை தனியாகப் பேசியதோடு பொவாரின் ஒப்பந்தத்தை முடித்துக்கொண்டார்கள் அத்தனை பிரச்னைகளைப் பற்றியும் முன்பே தெரிந்திருந்தும் வாய் திறக்காமல் இருந்தார் COA உறுப்பினர் டையானா எடுல்ஜி பொவார் – மிதாலி இடையிலான ஈகோ மோதல் சைலன்ட்டாக நிகழ்ந்துகொண்டிருக்க 39அணித் தேர்வில் நாங்கள் தலையிட முடியாது அது எங்கள் தலைவலி இல்லை39 என்று அறிக்கைவிட்டார் எடுல்ஜி அணி நிர்வாகத்தில் இருக்கும் ஒருவர் இப்படியா பதில் சொல்வது இவர் அப்படிச் சொன்னதும் 39இப்போது இப்படிப் பேசும் எடுல்ஜி ஆசிய கோப்பையில் அணியில் பூஜா வஸ்த்ராகரை தேர்வு செய்யாதது பற்றி என்னை ஏன் கேள்விகேட்டார்39 என்று கிளம்பினார் முன்னாள் பயிற்சியாளர் அரோத் அதற்கு எடுல்ஜியிடம் பதில் இல்லை போதாதற்கு தொடருக்கு இடையே வீரர்கள் நேரடியாக போர்டு உறுப்பினர்களிடம் பேசும் அளவிற்கு இடம் தரப்பட்டுள்ளது வீரர்கள் விளையாட்டை எப்படி அணுகவேண்டும் என்ற வரைமுறை இல்லையா டீம் மேனேஜர் என்று ஒருவர் எதற்காக அணியோடு பயணிக்கிறார் மிதாலியும் சர் பொவாரும் சரி நேராகத் தேர்வுக்குழுவிடம் பேசியிருக்கிறார்கள் இது சரியா இப்போதுமட்டுமல்ல இது காலம் காலமாகத் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது டால்மியா பதவியில் இருந்த காலத்தில் கங்குலி அனுபவித்த சுதந்திரம் உலகக் அறிந்ததே எந்த போர்டிலும் இப்போதுவரை இல்லாத ஒரு விஷயம் 15 ஆண்டுகள் முன்பிருந்தே இருப்பதுதான் பெரும் கொடுமைஇப்படித்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது பிசிசிஐ நிர்வாகம் இது போதாதென்று மிதாலி ஹர்மன் ஸ்மிரிதி என அனைவரின் இ-மெயில்களும் உடனடியாகக் கசிந்துகொண்டிருக்கின்றன உலகின் மிகப்பெரிய விளையாட்டு அமைப்பில் எத்தனை சிக்கல்கள் எத்தனை ஓட்டைகள் கிரிக்கெட் தெரிந்தவர்கள் முக்கியமான நாற்காலிகளில் அமரும்வரை இப்படித்தான் இருக்கும்என்னதான் செய்வதுமிதாலி தொடங்கி இந்தப் பிரச்னையில் சம்பந்தப்பட்ட அத்தனை பேர் மீதும் தவறு இருக்கிறது எல்லோருமே ஒரு இடத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாமல் நடந்துள்ளனர் பொவாரை பதவி நீக்கம் செய்தால் மட்டும் எல்லாம் ஓய்ந்துவிடாது ஒவ்வொருவரின் பிரச்னையையும் சரிசெய்தால் மட்டுமே மகளிர் கிரிக்கெட் அணி சுமுகமாக ஆட முடியும் இந்த விஷயத்தில் நான் பொவாரை ஆதரிக்கிறேன் மிதாலி இன்னும் மெச்சூர்டாக நடந்துகொள்ளவேண்டும் பிடிவாதம் பிடிக்காமல் குற்றம் சொல்லாமல் இனி அவர் தன்னை நிரூபிக்கவேண்டும் என்று கூறியிருந்தார் மதன் லால் ஆம் மிதாலி அதைத்தான் செய்யவேண்டும் டி-20 போட்டிகளில் நீக்கப்பட்ட ரூட் அடுத்த நடந்த 3 ஒருநாள் போட்டிகளில் 2 சதங்கள் அடித்துத் தொடர் நாயகன் ஆனார்தன் பெயரை மீண்டும் பாசிடிவ் செய்தியாக்கினார் மிதாலி செய்யவேண்டியது – தன்னை நிரூபித்து மீண்டும் பாசிடிவான தலைப்புச் செய்தி ஆவதுதான்  பொவார் ஹர்மன் ஸ்மிரிதி – மிதாலியுடன் அமர்ந்து பேசவேண்டும் வெளிப்படையாக ஆலோசிக்கவேண்டும் அந்தப் பிரச்னையை அங்கேயே முடித்துக்கொள்ளவேண்டும் அன்னிஷா குப்தா ஹர்மனிடம் வருத்தம் தெரிவிக்கவேண்டும் பிசிசிஐ வீரர்களுக்கான எல்லையை வரையறுக்கவேண்டும் தங்கள் ரகிசியத்தைப் பாதுகாக்கவேண்டும் ரசிகர்கள் – ஒரு வெற்றிக்காகக் கொண்டாடாமல் தோல்விக்காக பழிக்காமல் விளையாட்டை விளையாட்டாக ரசிக்கவேண்டும்

Leave A Reply

Your email address will not be published.