`மிகச்சிறந்த சதங்களில் ஒன்று அது’ – புகழ் மழையில் புஜாரா!

0 6

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம்செய்து விளையாடிவருகிறது இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் சமனில் முடிந்த நிலையில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆரம்பித்துள்ளது முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நேற்று தொடங்கியது டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார் முதல் செஷனிலேயே இந்திய அணியை அலறவிட்டார்கள் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள்  கம்மின்ஸ் ஹேசில்வுட் ஸ்டார்க் கூட்டணி மும்முனைத் தாக்குதல் நடத்தியது முரளி விஜய் கேஎல்ராகுல் விராட் கோலி ஆகிய இந்திய பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்து பெவிலியனுக்கு அனுப்பிவைத்தனர் ஒரு கட்டத்தில் 127 – 6 என்ற நிலையில் பரிதாபமாக இருந்தது இந்தியா அப்போது ஆபத்பாந்தவனாக மாறினார் புஜாரா அனல்பறக்கும் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சை சமாளித்து சதமடித்தார்  புஜாரா புண்ணியத்தில் இந்திய அணி முதல்நாள் முடிவில் 250 – 9 ரன்களை எடுத்தது இந்த நிலையில் புஜாராவின் அடிலெய்ட் சதத்திற்கு லைக்ஸ் குவிந்துவருகிறது முன்னாள் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் ”அட்டகாசமான சதம் கடினமான சூழலை புஜாரா அபாரமாகக் கையாண்டார்” என்று பாராட்டியிருக்கிறார் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டேரன் லீமென் ”அடிலெய்டில் அடிக்கப்பட்ட மிகச்சிறந்த சதங்களில் ஒன்று புஜாரா அடித்த சதம்  6 விக்கெட்களை இழந்த நிலையில் பெரிய ஷாட்டுகள் அடிக்காமலே இந்த சதத்தை அடித்திருக்கிறார் ஆச்சர்யம்தான்” என்று சொல்லியிருக்கிறார் அசரடிக்கும் ஆட்டத்தை ஆடியிருக்கிறார் புஜாரா” என்று ஷேன் வார்னேவும் பாராட்டியிருக்கிறார் இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடக்கிறது முகமது ஷமியும் பும்ராவும் ஆட்டத்தைத் தொடங்க உள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.