169 போட்டிகளுக்குப் பின்னர் களமிறங்கும் ஆஸி., வேகம்; டாஸ் வென்ற பின்ச் பேட்டிங் தேர்வு செய்தார்! #AusvInd

0 6

இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது சிட்னியில் நடைபெறும் முதலாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது முதலில் நடைபெற்ற டி20 தொடரில் ஒரு போட்டி மழையால் கைவிடப்பட மற்ற இரு போட்டியில் தலா ஒரு அணி வெற்றி பெற தொடர் 1-1 எனச் சமனில் முடிவடைந்தது அதன் பின்னர் தொடங்கிய டெஸ்ட் தொடரில் இந்திய அணி வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்தது இப்போது அதே உற்சாகத்துடன் ஒருநாள் தொடருக்கு தயார் ஆகிவிட்டது இந்திய அணி அதே நேரத்தில் டெஸ்ட் தொடரை சொந்த மண்ணில் இழந்த சோகத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் கடும் பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறது இந்திய அணிக்கு கடும் சவால் அளிக்கத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக சிட்னியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார் அந்த அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் ஒருநாள் போட்டி தொடர் தொடங்கும் முன்னதாக பாண்ட்யா ராகுல் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பெண்கள் தொடர்பாக கூறிய கருத்துகள் இந்திய அணியில் சர்ச்சையை கிளப்பியது “அது அவர்களின் தனிப்பட்ட கருத்து அதை கிரிக்கெட் வீரர்களாக நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை எனினும் இது டிரெஸ்ஸிங் ரூமில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது” என இந்திய அணியின் கேப்டன் கோலி தெரிவித்தார் அவர்கள் இருவரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் விசாரணை முடிந்து நடவடிக்கை எடுக்கும் வரையில் அவர்கள் விளையாட முடியாது இந்த நிலையில் இன்று சிட்னியில் நடைபெறும் முதலாவது ஒருநாள் போட்டிக்கான டாஸை வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனில் வேகப்பந்துவீச்சாளர் பீட்டர் சிடில் சேர்க்கப்பட்டுள்ளார் அவர் 169 ஒருநாள் போட்டிகளுக்குப் பின்னர் தற்போது மீண்டும் ஒருநாள் அணியில் இடம் பிடித்துள்ளார் கடைசியாக அவர் 2010-ம் ஆண்டில் ஒருநாள் போட்டியில் விளையாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இந்திய அணியைப் பொறுத்தவரை மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் இரண்டு ஸ்பின்னர்களுடன் களமிறங்குகிறது ஜடேஜா குல்தீப் யாதவ் சுழற்பந்துவீச்சை கவனித்துக்கொள்ள புவனேஷ்வர் குமார் ஷமி கலீல் அகமது ஆகியோர் வேகப்பந்துவீச்சைக் கவனிக்க உள்ளனர் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளது நடுவரிசையில் இந்திய அணியின் பேட்டிங்கை பலப்படுத்தும் போட்டி இந்திய நேரப்படி 750 -க்கு தொடங்கும்

Leave A Reply

Your email address will not be published.