சேஸிங் கிங் கோலி; தோனியின் ஃபினிஷிங் – ஆஸி.,க்கு எதிராக சிறப்பான சம்பவம் செய்த இந்தியா!

0 5

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை சமன்செய்தது PC ICCஇந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 2 -வது ஒருநாள் போட்டியானது அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்றது முதலாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றதால் தொடரில் நீடிக்க இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது இந்தியா டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கிய பின்ச் இந்தப் போட்டியிலும் சொதப்பினார் 6 ரன்களில் அவர் புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் அடுத்த ஓவரிலே அலெக்ஸ் கேரியை ஷமி வீழ்த்த இந்திய அணிக்கு நல்ல தொடக்கமாக இருந்தது ஆனால் அடுத்து வந்த மார்ஷ் கவாஜா ஜோடி நேர்த்தியாக விளையாடியது மோசமான பந்துகளை பவுண்டரிக்கு விரட்டிய இந்த இணை ரன் ரேட்டையும் உயர்த்தியது சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த கவாஜா ஜடேஜாவின் அற்புதமான த்ரோ -வால் ரன் அவுட் செய்யப்பட்டார்  அதன் பின்னர் களமிறங்கிய ஹேண்ட்ஸ்கோம்ப் மற்றும் ஸ்டொனிஸ் முறையே 20 மற்றும் 29 ரன்களில் ஆட்டமிழந்தனர் ஒருபுறம் விக்கெட் விழுந்தாலும் மார்ஷ் தனது அபாரமான ஃபார்மை தொடர்ந்தார்PC ICC மேக்ஸ்வெல்லும் தனது பங்குக்கு கம்பெனி கொடுக்க மார்ஷ் தனது 7 வது ஒருநாள் சதத்தைப் பூர்த்தி செய்தார் சதம் அடித்தப் பின்னர் மார்ஷ் மற்றும் மேக்ஸ்வெல்  டாப் கியயரில் அடித்து விளையாடினர்  தொடர்ந்து மோசமான ஃபார்மில் தவித்து வந்த மேக்ஸ்வெல் இந்தப் போட்டியில் அதிரடி காட்டினார் இந்தியாவின்  அறிமுக வீரர் சிராஜ் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தார் அதிரடி காட்டிய மேக்ஸ்வெல் 48 ரன்களில் ஆட்டமிழந்தார்  அதே ஓவரில் மார்ஷையும் புவனேஷ்வர் குமார் காலி செய்ய இந்திய ரசிகர்கள் கொண்டாடினர் 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்தது அதிக பட்சமான மார்ஷ் 131 ரன்கள் எடுத்தார் இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகளும் ஷமி 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்PC ICC299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் ஷர்மா ஷிகர் தவான் இணை துவக்கம் கொடுத்தது பொறுமையாக ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி 48 ரன்னில் தவான் விக்கெட்டை இழந்தது  ரோஹித்துடன் கோலி கைகோர்த்தார் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த இணையை மார்கஸ் தனது பந்துவீச்சில் பிரித்தார் பீட்டர் ஹென்ஸ் கம்மிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ரோஹித் அடுத்து வந்த அம்பதி ராயுடுவும் பெரிய அளவில் ரன்களை சேர்க்காமல் ஆட்டமிழந்தார் இதையடுத்து களமிறங்கிய தோனி- கோலியுடன் இணைந்து ஆஸி பவுலர்களுக்கு டஃப் கொடுத்தது பந்துகளை நாலபுறமும் சிதறடித்த கோலி சதமடித்து அசத்தினார் இது ஒருநாள் போட்டியில் அவர் அடிக்கும் 39 சதம் என்பது குறிப்பிடத்தக்கது இலக்கை நோக்கி ரன்களை விரட்டிய இந்த இணையை ரிச்சர்ட்ஸன் பிரித்து இந்திய ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமளித்தார்கோலி  104 ரன்களுடன் வெளியேற களத்தில் தினேஷ் கார்த்திக்கும் தோனியும் இணைந்தனர் அதிரடி காட்டிய இந்த இணை பந்துகளை வீணாக்காமல் ரன்களை சேர்த்தனர் கடைசி நேரத்தில் சிக்ஸ் அடித்தும் சிங்கள் ஓடியும் வெற்றியை சாத்தியமாக்கினார்  தோனி 

Leave A Reply

Your email address will not be published.