கடைசி நிமிடம் வரை போராட்டம்… ஆசியக் கோப்பையில் இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்த பஹ்ரைன்! #AsianCup2019

0 5

ஆசியக் கோப்பை கால்பந்து தொடரில் இந்திய அணி பஹ்ரைன் அணிக்கு எதிரானப் போட்டியில் கடைசி நிமிடம் வரைப் போராடி தோற்றது ஏஎஃப்சி ஆசியக் கோப்பை கால்பந்து தொடர் அரபு நாடுகளில் நடைபெற்று வருகிறது ஏ குரூப்பில் இடம் பிடித்துள்ள இந்திய அணி நேற்று பஹ்ரைன் அணியுடன் மோதியது ஆட்டத்தின் தொடக்கம் முதலே பஹ்ரைன் அணி அதிரடியான தாக்குதல் ஆட்டத்தில் கவனம் செலுத்த இந்திய அணி தடுப்பு ஆட்டத்தில் கவனம் செலுத்தியது இந்திய அணியின் தடுப்பு ஆட்டத்துக்கு நல்ல பலனும் கிடைத்தது முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை இரண்டாவது பாதியிலும் இந்தியாவில் தடுப்பாட்டம் தொடர பஹ்ரைன் அணியின் கோல் முயற்சிகள் தடுக்கப்பட்டது90 நிமிடங்கள் முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை ஆனால் இஞ்சுரி டைம்( Injury time) -ல் இந்திய வீரர் செய்த தவற்றால் பஹ்ரைன் அணிக்கு பெனால்டி வழங்க இந்திய வீரர்கள் மட்டுமல்ல ரசிகர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர் பெனால்டி வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி பஹ்ரைன் வீரர் ரஷத் கோல் அடிக்க முடிவில் பஹ்ரைன் அணி 1-0 என இந்திய அணியை வீழ்த்தியது இதன் மூலம் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இந்திய அணி இழந்து வெளியேறியது இந்திய அணி முன்னதாக தாய்லாந்து அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இருந்தது தொடரை நடத்தும் அரபு நாடுகள் அணிக்கு எதிராக 0-2 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வியை சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.