`ரசிகரின் ஆர்வக்கோளாறு; தேசியக்கொடியைக் கீழே விழாமல் தாங்கிப்பிடித்த தோனி’ – வைரல் வீடியோ!

0 6

மகேந்திர சிங் தோனி செய்த காரியம் ஒன்று மீண்டும் அவரை ட்ரெண்டிங்கில் கொண்டுவந்துள்ளதுphoto credit @ICCகேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகும் மகேந்திர சிங் தோனி மீது இருக்கும் கிரேஸ் ரசிகர்களுக்குக் குறையவே இல்லை அதற்குக் காரணம் அவரின் செயல்கள்தான் கேப்டனாக இல்லாவிட்டாலும் கோலிக்கு ஐடியா கொடுப்பது ஆக்டிங் கேப்டன் போல் பௌலர்களுக்கு ஐடியா கொடுத்து விக்கெட் எடுப்பது விரைவாக ஸ்டெம்பிங் செய்வது அவ்வப்போது தவறு செய்யும் வீரர்களைக் கண்டிப்பது ஜூனியர் வீரர்களுடன் ஜாலியாக விளையாடுவது என அவர் செய்யும் விஷயங்கள் அனைத்தும் ட்ரெண்டிங்தான் அந்தவகையில் தோனி நேற்று செய்த காரியம் ஒன்று ட்ரெண்டிங் என்பதைத் தாண்டி அவர் மீதான நன்மதிப்பை அதிகரித்து பாராட்டுகளைப் பெற்றுத்தந்துள்ளது நியூஸிலாந்து அணிக்கு எதிராக நேற்று நடந்த மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பீல்டிங் செய்துகொண்டிருக்கும்போது இந்திய ரசிகர் ஒருவர் அத்துமீறி மைதானத்துக்குள் நுழைந்தார் நேராக தோனி கீப்பிங் செய்துகொண்டிருக்கும் பகுதிக்குச் சென்ற அந்த ரசிகர் தான் கொண்டுவந்திருந்த இந்திய தேசியக்கொடியுடன் தோனியின் கால்களில் விழுந்தார் பேரார்வத்தில் தான் வைத்திருந்த தேசியக் கொடியுடன் தோனியின் கால்களில் விழும்போது கொடியையும் கீழேபோட்டு ஆசி பெற முயன்றார் ஆனால் கணநேரத்தில் தேசியக் கொடி கீழே விழும் முன்பாகவே கொடியை தன் கைகளில் எடுத்துக்கொண்டார் தோனி தேசியக் கொடி அவமதிக்கப்பட்டுவிடக் கூடாது என தோனி செய்த இந்தச் செயல் வீடியோவாக வைரல் ஆகி வருகிறதுThis video has separate Fan Base and Patriotism tooNZvIND Dhoni300 TeamIndia Bluerising MSDhoni MSD Dhoni pictwittercomqIHRRzmssY— Dhoni300 (@Sharukh_Msd) February 10 2019

Leave A Reply

Your email address will not be published.