`நாடு திரும்பும் நேரத்தில் இது சிறு வருத்தமே’ – வெற்றிகரமான தோல்வி குறித்து ரோஹித்!

0 6

நியூஸிலாந்து உடனான தோல்வி குறித்து ரோஹித் ஷர்மா பேசியுள்ளார் இந்தியா – நியூஸிலாந்து இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி நேற்று நடந்தது 1-1 எனச் சமநிலையில் இருந்த தொடரை வெல்ல இரு அணிகளும் போட்டி போட்டதால் நேற்றைய போட்டியில் விறுவிறுப்புக்குப் பஞ்சம் இல்லாமல் இருந்தது முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான கோலின் முன்ரோ 72 (40) டிம் செய்ஃபெர்ட் 43 (25) ரன்கள் குவித்தனர் இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 208 மட்டுமே எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் போராடித் தோற்றது இந்திய அணியில் இளம் வீரர் விஜய் சங்கர் 43 (28) ரோகித் ஷர்மா 38 (32) ரன்கள் குவித்தனர் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று நியூஸிலாந்து அணி கோப்பையைக் கைப்பற்றியது இதனால் ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய மகிழ்ச்சியோடு நாடு திரும்புகிறது இந்த வெற்றிகரமான தோல்வி குறித்து கேப்டன் ரோஹித் ஷர்மா பேசுகையில் “212 ரன்கள் இலக்கு என்பது மிகவும் கடினமானது இருந்தாலும் போட்டி முடியும் வரை நாங்கள் சரியாக நம்பிக்கையுடனே ஆடினோம் ஆனால் போட்டி முடியும் நேரத்தில் ஒரு சிறிய ஏமாற்றம் அதேநேரம் நியூஸிலாந்து வீரர்கள் அவர்களின் நம்பிக்கையை இழக்கவில்லை இந்த வெற்றிக்குத் தகுதியானவர்கள்தான் நாங்கள் ஒருநாள் தொடரை கைப்பற்றினோம் ஆனால் டி20 தொடரை இழந்தது சிறிய ஏமாற்றம்தான் போட்டியில் சில தவறுகள் நடந்துவிட்டன ஆனால் அதைத் தாண்டி முன்னேறிச் செல்வதற்கு நிறைய அனுபவங்கள் கிடைத்துள்ளன ஆஸ்திரேலியாவை வென்றுவிட்டு தாயகம் திரும்புவது மகிழ்ச்சியானது ஆனால் ஊருக்குத் திரும்பும் நேரத்தில் இந்தத் தொடரில் தோல்வி அடைந்தது சிறு வருத்தமே என்று கூறினார்

Leave A Reply

Your email address will not be published.