வீரர்கள், மேனேஜர், நிர்வாகம்… யார் மீது தவறு… செல்சீ சொதப்புவது ஏன்?! #MCICHE

0 5

எதிஹாட் மைதானத்தில் மான்செஸ்டர் சிட்டி செல்சீ அணிகள் நேருக்கு நேர் மல்லுக்கட்டத் தயாரானபோது ஒட்டுமொத்த பிரீமியர் லீக் ரசிகர்களும் காத்திருந்தனர் இந்த சீசனின் முடிவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய போட்டியாக இந்த ஆட்டம் கருதப்பட்டது செல்சீ அர்செனல் மான்செஸ்டர் யுனைடட் அணிகளின் சாம்பியன்ஸ் லீக் வாய்ப்புக்கு லிவர்பூல் சிட்டி அணிகளின் கோப்பைக் கனவுக்கு இந்த 3 புள்ளிகள் முக்கியமானதாக விளங்கின அதனால் அந்த 5 அணிகளின் ரசிகர்களுமே இந்தப் போட்டியை எதிர்பார்த்தனர் மான்செஸ்டர் யுனைடட் அணியின் இடைக்கால மேனேஜர் சோல்ஸ்கர் எதிஹாட் மைதானத்துக்கே வந்திருந்தார் யாரும் எதிர்பாராத விதமாக ஸ்டாம்ஃபோர்ட் பிரிட்ஜில் சிட்டி அணியை 2-0 என செல்சீ தோற்கடிக்க எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாகக் கூடியிருந்தது அந்தத் தோல்விக்கு கார்டியோலா எப்படி ரியாக்ட் செய்யப்போகிறார் என்று எதிர்பார்த்திருந்தனர் கால்பந்து ரசிகர்கள் அனைத்து எதிர்பார்ப்புகளும் 25 நிமிடங்களில் காற்றில் கரைந்தன இரண்டாம் தர லீகில் ஆடும் கத்துக்குட்டி அணியைப் பந்தாடுவதுபோல் செல்சீயைக் கதறவிட்டது மான்செஸ்டர் சிட்டி 25 நிமிடங்களில் 4 கோல்கள் இரண்டாம் பாதியில் 2 கோல்கள் 6-0 28 ஆண்டுகளில் தங்களின் மோசமான தோல்வியைச் சந்தித்தது செல்சீ ஒரு முன்னணி அணிக்கு எதிராக 6 கோல்கள் அடிக்கும் அளவுக்கு என்னதான் செய்தது சிட்டி அவர்கள் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை வழக்கம்போல் தங்களின் அதிரடி அட்டாகிங் கேமை விளையாடினார்கள் 25 நிமிடத்தில் 4 கோல்கள் அடித்தபோதும் கொஞ்சம் கூட தாகம் குறையாமல் கோல் நோக்கிப் பயணித்துக்கொண்டே இருந்தார்கள் அவர்களின் வழக்கமான ஆட்டம்தான் ஆனால் இந்த மோசமான முடிவு முழுக்க முழுக்க செல்சீயின் ஆட்டத்தின் காரணமாக கிடைத்ததுதான் டிஃபண்டர்களின் மிக மோசமான பொசஷனிங் கோல் கீப்பரின் சுமாரான செயல்பாடு ஹசார்ட் அலான்சோ இணையிடம் மிஸ்ஸான கெமிஸ்ட்ரி பார்க்லி செய்த ஒரு பெரும் தவறு ஜார்ஜினியோவின் தொடர் சொதப்பல் பிளான் – பி இல்லாதது என நேற்றைய போட்டிக்கு செல்சீ அணியின் தோல்விக்கு ஆயிரம் காரணங்கள் சொல்லலாம் ஆனால் இது நேற்று ஒருநாளோடு முடிந்துவிடும் ஒன்றல்ல கடந்த சில நாள்களாகவே தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது 2019-ம் ஆண்டில் ஆடிய 4 39Away39 கேம்களில் நான்கிலும் தோற்றிருக்கிறது அந்த அணி முதலில் வெம்ப்ளி மைதானத்தில் நடந்த லீக் கோப்பை அரையிறுதியில் 1-0 எனத் தோற்றது அடுத்து எமிரேட்ஸ் மைதானத்தில் அர்செனலிடம் 2-0 எனத் தோற்றது அடுத்து டீன் கோர்ட் அரங்கில் கத்துக்குட்டி போர்ன்மௌத் அணியிடம் 4-0 எனப் பேரடி இப்படி 124 என ஒவ்வோர் ஆட்டத்துக்கும் மோசமாகிக்கொண்டிருக்க இப்போது 6 கோல்கள் இந்த 4 `அவே39 ஆட்டங்களில் 13 கோல்கள் வாங்கிய அந்த அணி 1 கோல்கூட அடிக்கவில்லை சரி அவே ஆட்டங்கள்தான் இவர்களுக்குப் பிரச்னையா என்றால் நிச்சயம் அதுவும் இல்லை பின் இந்த அணிக்கு என்னதான் பிரச்னை இந்த அணியே பிரச்னைதான் அணி நிர்வாகம் பயிற்சியாளர் வீரர்கள் என எல்லோருமே மிகமோசமாக செயல்பட்டுக்கொண்டிருந்தால் அந்த கிளப் எப்படிச் சிறப்பாகச் செயல்படும் சாரி சர்ரிபயிற்சியாளர் மரிசியோ சர்ரி இந்தத் தோல்விக்கு நிச்சயம் பொறுப்பேற்கவேண்டும் தொடர்ந்து ஹோல்டிங் மிட்ஃபீல்ட்39 ரோலில் சொதப்பிக்கொண்டிருக்கும் ஜார்ஜினியோவை இன்னும் களமிறக்குவது அந்த பொசிஷனில் உலகின் தலைசிறந்த வீரர்களுள் ஒருவரான என்கோலோ கான்டேவை வேறு இடத்தில் ஆடவைப்பது என நடுகளத்தில் மொத்த கெமிஸ்ட்ரியையும் கெடுத்து வைத்திருக்கிறார் பல போட்டிகளில் இதனால் சிக்கல்கள் வந்தாலும் `எனக்குப் பிடித்ததைத்தான் செய்வேன்39 என்ற மனநிலையில்தான் இருக்கிறார் போதாக்குறைக்கு இவரிடம் எந்த ஆட்டத்துக்கும் பிளான் – பி இருப்பதாகத் தெரியவில்லை டிஃபன்ஸ் மோசமாக இருந்தாலும் சரி அட்டாக் மோசமாக இருந்தாலும் சரி ஒரே டெம்ப்ளேட்தான் கோவசிச்சுக்குப் பதிலாக பார்க்லி வருவார் வில்லியனுக்குப் பதிலாக பெட்ரோ வருவார் இன்னொரு மாற்றம் மட்டும் கொஞ்சம் புதிதாக இருக்கும் ஆட்டத்தின் அணுகுமுறை பிளேயர்களின் ரோல் ஃபார்மேஷன் பெயருக்கும்கூட எதுவும் மாறாது இதுகூடப் பரவாயில்லை ஆனால் `இதைத்தான் செய்வேன்39 என்று வெளிப்படையாகச் சொல்வது ரொம்பவுமே மோசம் 4 தொடர்களில் விளையாடிவரும் ஓர் அணி முன்னாள் பிரீமியர் லீக் சாம்பியன்ஸ் லீக் தொடர்களின் சாம்பியன் ஒரேயொரு திட்டத்தோடு ஆடுவதெல்லாம் ஏற்கத்தக்கதா சர்ரிமோசமான வீரர்கள்மோசமான வீரர்கள் என்று திறமையின் அடிப்படையில் சொல்லவில்லை வீரர்களின் மனநிலை அப்படி கடந்த 4 ஆண்டுகளாக இந்த அணியின் பயிற்சியாளராக இருந்த ஒவ்வொருவருமே இவர்களைப் பற்றித் தவறாகப் பேசியிருக்கிறார்கள் மொரினியோ கான்டே சர்ரி யாரையுமே இவர்களுக்குப் பிடிக்கவில்லை அணியின் மேனேஜராக இருந்தாலும் தங்களைக் குறைசொல்லக்கூடாது என்ற மனப்பான்மையை வளர்த்திருக்கிறார்கள் பார்சிலோனா ரியல் மாட்ரிட் வீரர்கள்கூட தங்கள் பயிற்சியாளர்களுக்குக் கொஞ்சம் கூடுதல் மரியாதை அளிப்பார்கள் ஆனால் இந்த அணி படுமோசம்அதிலும் ஹசார்ட் வில்லியன் போன்ற முன்னணி வீரர்கள் `ஏண்டா இந்த கிளப்புக்கு ஆடுறோம்39 என்ற எண்ணத்தில்தான் விளையாடுகிறார்கள் கோல் அடித்தால்கூட சம்பிரதாயத்துக்குத்தான் கொண்டாடுகிறார்கள் எந்த வீரரின் முகத்தைப் பார்த்தாலும் செல்சீ ரசிகர்களுக்கே வெறுப்பு வந்துவிடும் கொஞ்சம்கூட உற்சாகம் இருக்காது ஆட்டத்தில் ஒருவர்கூட `கமாண்ட்39 செய்ய மாட்டார்கள் வெற்றிபெறும் ஆட்டங்களிலேயே இப்படி என்றால் தோற்கும் ஆட்டங்களில் சொல்லவா வேண்டும்குறிப்பாக ஈடன் ஹசார்ட் செல்சீ அணியைப் பல போட்டிகளில் இவர்தான் காப்பாற்றுகிறார் ஆனால் அதற்காக 1794-வது முறையாக `நான் ரியல் மாட்ரிட்39 போகவேண்டும் என்று பேட்டி கொடுப்பதை என்னவென்று சொல்ல ஒன்றரை ஆண்டுகள் இதைப் பார்த்த கேலம் ஹட்சன் ஒடோய் கடந்த மாதம் தன் பங்குக்குக் கொடி பிடித்துவிட்டார் கால்பந்தின் அழகே `கிளப் லாயல்டி39 என்பதுதான் ஜான் டெர்ரி லாம்பார்ட் ட்ரோக்பா பீட்டர் செக் ஆஷ்லி கோல் போன்ற ஜாம்பவான்கள் ஆடிய இந்த செல்சீ அணியில் இப்போது ஒரு வீரரிடம் அந்த கிளப் லாயல்டி இருந்தாலும் ஆச்சர்யம்தான் அணிக்காக விளையாடுவதில்லை போராட்ட குணம் இல்லை இளம் வீரர்களை ஊக்கப்படுத்துவதில்லை மேனேஜர்களை மதிப்பதில்லை இதற்குமேல் ஓர் அணி வீழ்வதற்கு வேறென்ன வேண்டும்இதற்குப் பெயரா கிளப் மேனேஜ்மென்ட்முன்பு அலெக்ஸ் ஃபெர்குசன் காலத்தில் மேனேஜர்களுக்கு உச்சபட்ச மரியாதை இருக்கும் மேனேஜர்களுக்கு அடுத்துதான் வீரர்களெல்லாம் அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி ஆனால் இப்போது அப்படி இல்லை வீரர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றன அதன் விளைவு மேனேஜர்கள் அணி நிர்வாகத்தால் சுழற்றியடிக்கப்படுகிறார்கள் வீரர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 ஆண்டுகளில் மொரினியோ (இரண்டாவது முறையாக) கான்டே என இரண்டு மேனேஜர்களை வெளியேற்றியிருக்கிறது செல்சீ நிர்வாகம் ஒவ்வொரு முறையும் வீரர்களிடம் பிரச்னை இருந்தும் நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததெல்லாம் மேனேஜர்கள் மீதுதான் அதேபோல் இளம் வீரர்களைக் கையாளும் முறை செல்சீ இந்த விஷயத்தில் மோசம் என்பது உலகுக்கே தெரியும் ஆனால் இப்போதாவது அதை மாற்றிக்கொள்ள முயற்சி செய்திருக்கவேண்டும் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் இடத்தில் 18 வயது வினிசியஸ் ஜூனியரை மாட்ரிட் டெர்பியில் களமிறக்குகிறது ரியல் மாட்ரிட் நட்சத்திர வீரர்களுக்காக ஆயிரம் ஆயிரம் கோடிகள் கொட்டும் அந்த அணியே இந்த ஆண்டு ஒருவரையும் வாங்காமல் தங்கள் அகாடெமி வீரர்களை வளர்க்க முடிவெடுக்கும்போது ஹட்சன் ஒடோய் லோஃப்டஸ் சீக் என பல வீரர்களை வீணடித்துக்கொண்டிருக்கிறது செல்சீ ஏற்கெனவே சலா டி புருய்னே லுகாகு நாதன் அகே எனப் பல வீரர்களை இழந்துள்ளபோதும் இன்னும் தங்களின் எந்த அணுகுமுறையையும் மாற்றிக்கொள்ள இவர்கள் தயாராக இல்லைஇப்படி இந்த கிளப்புக்குள் எக்கச்சக்க பிரச்னைகள் ஆனால் இவர்கள் எதையும் சரிசெய்வதாகத் தெரியவில்லை மிஞ்சிப்போனால் பயிற்சியாளரை மாற்றுவார்கள் ஒரு சீசன் பட்டம் வெல்வார்கள் கடைசியில் அவரோடும் வீரர்களுக்குப் பஞ்சாயத்து வரும் தோல்விகள் தொடரும் மேனேஜரை மாற்றுவார்கள் பின்பு இந்த சைக்கிள் தொடர்ந்துகொண்டே இருக்கும் ஏசிமிலன் கால்பந்து அணிக்கு நிகழ்ந்ததுபோல் இலங்கை கிரிக்கெட் அணிக்கு நடந்துகொண்டிருப்பதுபோல் நிச்சயம் செல்சீ பாதாளம் தொட வாய்ப்பிருக்கிறது

Leave A Reply

Your email address will not be published.