இந்தியாவை `ஸ்வீப்’ செய்த 2 ஆஸி பேட்ஸ்மேன்கள்… சாம்பியன்ஸ் ஆர் பேக்..! #INDvAUS

0 4

ஒரு வாரம் முன்புவரை இங்கிலாந்தும் இந்தியாவும் மட்டும்தான் உலகக் கோப்பைக்கான ஃபேவரிட்களாகக் கருதப்பட்டன கடந்த 20 ஆண்டுகளாக ஒவ்வோர் உலகக் கோப்பையையும் ஃபேவரிட்டாகவே எதிர்கொண்ட ஆஸ்திரேலிய அணியை யாரும் பரிசீலனை செய்யவே இல்லை பாகிஸ்தான் இந்தியா அணிகளுடனான ஒருநாள் தொடர் தோல்விக்குப் பிறகு `ஆஸ்திரேலியாவுக்கு அரையிறுதி வாய்ப்பே இல்லை’ என்றார்கள் பலர் ஆனால் அனைவரின் கருத்தையும் மாற்ற அவர்களுக்குத் தேவைப்பட்டது வெறும் ஒரு வாரம்தான் INDvAUS 3 ஆண்டுகளாக வெற்றி மேல் வெற்றி பெற்று கோலி அண்ட் கோ சம்பாதித்திருந்த நம்பிக்கையை வெறும் மூன்றே வெற்றிகளில் பெற்றிருக்கிறது ஆஸ்திரேலியா டெல்லியில் நேற்று பெற்ற வெற்றி இந்தத் தொடரை வெல்வதற்கானது மட்டுமல்ல `சாம்பியன்ஸ் ஆர் பேக்39 என்று இங்கிலாந்து மைதானங்களுக்கு அறைகூவல் விடுப்பதற்காக ஆஸ்திரேலியாவின் இந்த கம்பேக் யாரும் எதிர்பாராத இந்தத் தொடருக்கு முன் ஒருநாள் போட்டிகளில் சதமடித்திடாத இரண்டு பேட்ஸ்மேன்களால் சாத்தியப்பட்டுள்ளது உஸ்மான் கவாஜா பீட்டர் ஜேண்ட்ஸ்கோம்ப் – இந்தியாவின் பிடியிலிருந்து இந்தத் தொடரை அபகரித்துவிட்டனர்ராஞ்சி மொஹாலி போட்டிகளில் கடைசிவரை சென்றுதான் தோல்வியடைந்தது இந்தியா ஆனால் 20-வது ஓவர் முடிவதற்கு முன்பே நேற்று சரண்டர் ஆகிவிட்டது இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்குமான வித்தியாசம் ஷமி – புவி வீசிய முதல் ஸ்பெல்லிலிருந்தே தொடங்கிவிட்டது முதல் 10 ஓவர்களில் அவர்கள் வீசிய லென்த் முழுக்க முழுக்க ஆஸி பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமைந்தது பெரிதாக பௌன்ஸ் இல்லாத அந்த ஆடுகளத்தில் பெரும்பாலான பந்துகளை குட் லென்த்திலேயே பிட்ச் செய்தனர் ஃபுல் லென்த்தில் வீசவேயில்லை ஸ்விங் ஆகும் ஃபுல் லென்த் பந்துகளுக்கு ஃபின்ச் தொடர்ந்து தடுமாறிக்கொண்டிருக்கும்போது அவருக்குக்கூட நேற்று அப்படியான பந்துகளை நம் வேகப்பந்துவீச்சாளர்கள் வீசவில்லை நம் வேகப்பந்துவீச்சாளர்கள் முதல் 13 ஓவர்களில் ஃபுல் லென்த்தில் பிட்ச் செய்தது மொத்தம் 5 பந்துகளே அதிலும் ஒரு பந்துகூட ஸ்டம்புக்கு 4 மீட்டர் இடைவெளிக்குள் பிட்ச் செய்யப்படவில்லைபந்து கூடுதலாக பௌன்ஸ் ஆகும் என்று எதிர்பார்த்து ஷார்ட் மற்றும் குட் லென்த்தில் வீசினார்கள் ஆனால் அப்படி ஆகவில்லை சரி லைனையாவது சரியாக மாற்றிக்கொண்டார்களா என்றால் அதுவும் இல்லை மிடில் லெக் ஸ்டம்ப் லைனில் ஒரு பந்து அடுத்து முழுக்க முழுக்க ஆஃப் சைட் வெளியே ஒரு பந்து முதல் பந்து ஸ்கொயர் லெக் திசையில் பௌண்டரியானால் அடுத்த பந்து கவர் திசையில் பறக்கிறது நல்ல ஃபார்மில் இருக்கும் கவாஜாவுக்கு அவர் இன்னிங்ஸை கட்டமைக்கு ஏதுவான பந்துகளை முதல் ஸ்பெல்லிலேயே வாரிவழங்கினர் இந்திய பௌலர்கள் அதற்காக கவாஜாவின் ஆட்டத்தையும் குறைத்து மதிப்பிடமுடியாது மிகச் சிறப்பாக விளையாடினார் மைதானத்தின் ஒவ்வொரு திசையிலும் ரன் சேர்த்தார் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்துகளுக்கு முழு பேட்டையும் ஓப்பன் செய்து டிரைவ் செய்தது லெக் ஸ்டம்புக்கு நேரே வந்து பந்துகளுக்கு மணிக்கட்டை வளைத்து ஃபைன் லெக்கில் சிங்கிள் எடுத்தது லூஸ் பால்களை தூக்கி அடிக்காமல் அழகாக புல் செய்தது பெர்ஃபெக்டான ஆட்டம் அவுட்டான பந்தைத் தவிர்த்து அந்த 106 பந்து இன்னிங்ஸில் ஒரு பிழை இல்லைஇந்திய பௌலர்களை லெக் ஸ்டம்ப் லைனிலேயே பந்துவீச ஸ்கொயர் மிட்விக்கெட் திசைகளில் எளிதாக ஆடினார் கவாஜா ஃபைன் லெக் முதல் மிட் விக்கெட் வரையிலான ஏரியாவில் மட்டும் அவர் அடித்த ரன்கள் 47 அந்த அளவுக்கு அவருக்கு பேட்டிங்கை எளிதாக்கினர் இந்திய பௌலர்கள் ஆனால் பௌண்டரிகளை மட்டும் குறிவைக்காமல் நிறைய சிங்கிள்களும் எடுத்தார் குறிப்பாகத் தொடக்க ஓவர்களில் டாட் பால்களை வெகுவாகக் குறைத்தார் ஸ்ட்ரைக் ரொடேட் செய்துகொண்டே இருந்ததால் ரன்ரேட் சீரானது ஓவருக்கு ஒரு பௌண்டரியும் அடித்துக்கொண்டிருக்க ஃபின்ச் மீதான நெருக்கடியும் குறைந்தது இந்தியா ஆட்டத்தில் பின்தங்கியதும் இந்த இடத்தில்தான் ஆஸ்திரேலியாவைப் போல் ஸ்ட்ரைக் ரொடேட் செய்யவில்லை ஒரு பெரிய ஓவர் ஆடினால் அடுத்த ஓவரில் அப்படியே ரன்ரேட்டை முடக்கினார்கள் 17-வது ஓவரில் 10 ரன்கள் எடுத்தால் 18-வது ஓவரில் 1 ரன்தான் இந்திய பௌலர்கள் யாரும் நேற்று மெய்டன் வீசவில்லை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் சிங்கிள்களில் அவ்வளவு குறியாக இருந்தனர் ஆனால் இந்தியா 3 மெய்டன் ஓவர்கள் ஆடியது 18-வது ஓவர் வரை இரண்டு அணிகளின் ரன்ரேட்டும் ஓரளவு சீராகவே இருந்தன ஆனால் அதன்பின் இந்தியாவின் ரன்ரேட் அப்படியே கீழ்நோக்கிப் பயணிக்கத் தொடங்கிவிட்டது ரன்ரேட் நெருக்கடி இல்லாமல் இருந்திருந்தால் ஜாதவ் – புவி ஜோடி இன்னும் நிதானமாக ஆடியிருக்கும் ஆட்டம் மாறியிருக்கலாம் சிங்கிள்களின் அருமையை இந்திய அணி எப்போது உணரப்போகிறது தெரியவில்லை இந்தியாவின் இந்தத் தொடர் வெற்றியைப் பறித்த இன்னொரு ஆஸி பேட்ஸ்மேன் – ஹேண்ட்ஸ்கோம்ப் ஸ்பின்னர்களை இவர் எதிர்கொண்ட விதம் அட்டகாசம் 1987 உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்து அணி ஒரேயொரு திட்டத்தோடுதான் இந்தியாவை எதிர்கொண்டது கபில் சேத்தன் ஷர்மா மனோஜ் பிரபாகர் ஓவர்களிலெல்லாம் அடக்கி வாசித்துவிட்டு மனிந்தர் சிங் ரவி சாஸ்திரி என ஸ்பின்னர்களை மட்டும் கட்டம் கட்டினார்கள் ஸ்வீப் ஸ்வீப் ஸ்வீப் இந்தியாவை ஸ்வீப் செய்தது இங்கிலாந்து இந்தியச் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக எப்போதெல்லாம் இந்த ஆயுதம் கையில் எடுக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது மற்ற அணிகள் இதை உணராமல் இருந்தபோது இன்றைய இங்கிலாந்து அணியின் தூண் ஜோ ரூட் கடந்த இந்தியச் சுற்றுப்பயணத்தில் அதைச் சிறப்பாகச் செய்தார் முதல் போட்டியில் 6 விக்கெட்டுகள் வீழ்த்திய குல்தீப் அடுத்த இரண்டு போட்டிகளிலும் தடுமாறினார் இப்போது அஸ்திரத்தைக் கையில் எடுத்துள்ளார் ஹேண்ட்கோம்ப் குல்தீப் சஹால் ஜடேஜா கேதர் ஜாதவ் என அனைத்து ஸ்பின்னர்களையும் சிறப்பாகக் கையாண்டார் கிரீஸின் பின்னால் இருந்து ஆடக்கூடியவர் என்பதால் அது அவருக்கு எளிதாக அமைந்துவிட்டது அவர் மட்டுமல்ல கவாஜாவும் எக்கச்சக்க ஸ்வீப் ஷாட்கள் ஆடினார் அதிலும் ரிவர்ஸ் ஸ்வீப்கள் ஏராளம் தேர்ட் மேன் பாயின்ட் திசைகளில் அவர் அடித்த சிங்கிள்களில் பெரும்பாலானவை ரிவர்ஸ் ஸ்வீப்களால் ஆடப்பட்டவையேஅதீத நம்பிக்கையோடு இருந்த ஹேண்ட்ஸ்கோம்ப் நேற்றைய போட்டியில் கிரீஸுக்கு வெளியே வந்தும் குல்தீப்பை அட்டாக் செய்யத் தொடங்கினார் 10 ஓவர்களும் பதிலில்லாமல் பந்துவீசிய குல்தீப்பைப் பார்ப்பது இந்தியப் பந்துவீச்சின் மீதான பயத்தை அதிகரித்தது அதுவரை பெரிதாக பௌன்ஸ் ஆகாத ஆடுகளம் ஷமி வீசிய அந்தப் பந்தில் சரியாக பௌன்ஸானது நிதானமாகவும் சரியான வேகத்திலும் ஆடிவந்த ஹேண்ட்ஸ்கோம்ப் அந்த ஒரு பந்தை சரியாகக் கவனிக்கத் தவறி விக்கெட்டை இழந்தார் இல்லையேல் கவாஜா போல் அவரும் தன் இரண்டாவது ஒருநாள் சதத்தை அடித்திருப்பார் இவர்கள் ஒருபுறம் மிரட்டல் ஆட்டம் ஆட பந்துவீச்சில் கம்மின்ஸ் ஆடம் ஜாம்பா ஜை ரிச்சர்ட்சன் ஆகியோர் பழைய ஆஸி பௌலிங் அட்டாக்கை நினைவுபடுத்திவிட்டனர் ஸ்டார்க் கூல்டர்நைல் ஹேசில்வுட் என சீனியர்கள் யாருமே இல்லை ஆனால் அதெல்லாம் தெரியாத அளவுக்குச் சிறப்பாக இருந்தது அவர்களின் பந்துவீச்சு சரியாக உலகக் கோப்பைகு முன்பாக மொத்த அணியும் சேர்ந்து க்ளிக்காகியுள்ளது இப்போதே இந்த ஆட்டம் ஆடுகிறது ஆஸ்திரேலியா இனி வார்னர் ஸ்மித் ஸ்டார்க் போன்றவர்கள் அணிக்குத் திரும்பினால் சாம்பியன்ஸ் ஆர் பேக் 

Leave A Reply

Your email address will not be published.