மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரைத் திருவிழா… கேரள வனத்துறை கெடுபிடிகள் தளருமா?

0 12

சித்திரைப் பௌர்ணமி நெருங்கினாலே மங்கல தேவி கண்ணகி கோயில் திருவிழா களைகட்டிவிடும் பாண்டிய மன்னனின் அவைக்கே சென்று தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகப் போராடி நியாயம் பெற்றவள் கண்ணகி மதுரையை எரித்துவிட்டு அங்கிருந்து 14 நாள்கள் நடந்து மலையுச்சியிலிருந்து மேலுலகம் சென்றாள் அவள் மேலுலகத்துக்குச் சென்றதைப் பார்த்த மலைவாழ் மக்கள் சேர வேந்தன் செங்குட்டுவனிடம் தெரிவித்தார்கள் கண்ணகிக்கு மரியாதை செலுத்தும்விதமாகச் சேர வேந்தன் செங்குட்டுவன் வடக்கே படையெடுத்து வெற்றிபெற்று இமயத்திலிருந்து கல் கொண்டு வந்து கோயில் கட்டினான் அவன் கட்டிய கோயில்தான் ‘மங்கலதேவி கண்ணகி கோயில்’ என்று அழைக்கப்படுகிறது தற்போது கேரளாவின் இடுக்கி மாவட்டம் குமுளியிலிருந்து 14 கிமீ தொலைவில் மலை மீது 5000 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது ஒரு காலத்தில் நினைத்தபோதெல்லாம் தமிழக மக்கள் சென்று 39சிலப்பதிகார முற்றோதல்39 செய்து வழிபட்டு வந்த கோயில் இது ஆனால் தற்போது சித்திரைப் பௌர்ணமியன்று மட்டுமே கண்ணகியைத் தரிசிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது இது மட்டுமல்லாமல் கேரள வனத்துறையினரின் கெடுபிடியும் அதிகமாகிவிட்டதாகக் குற்றம் சாட்டுகிறார்கள் கண்ணகி பக்தர்கள் இங்க மலைல வாழற பளியர் பழங்குடியின மக்களுக்கு மட்டுமல்லாம எங்களுக்கும் குல தெய்வம் கண்ணகிதான் 20 வருஷத்துக்கு மேல கோயிலுக்குப் போய்ட்டு வந்துகிட்டு இருக்கேன் ஒவ்வொரு வருஷமும் கெடுபிடி அதிகமாகிக்கிட்டுதான் இருக்கு முதல்முதல்ல போனப்போ கோயில் சந்நிதில எந்த சிலையும் இல்ல பீடம் மட்டும்தான் இருந்தது நாங்க பீடத்து மேல துணி விரிச்சி மலர்கள பரப்பி வச்சி தீபம் காட்டி வழிபட்டு சந்தோஷமா திரும்பி வருவோம் அப்பல்லாம் பிரச்னையில்லாம போய்ட்டு வந்துடுவோம் கோயிலுக்குப் போறதுக்கு அப்ப பளியன்குடி வழியா போன காட்டுப் பாதை மட்டும்தான் இருந்துச்சு கேரள அரசு குமுளியிலேருந்து பாதை அமைச்சதுக்கு அப்புறம்தான் கெடுபிடியெல்லாம் பெண்கள் மலையேறி வர்றது கஷ்டம் அதனால அன்னைக்கு மட்டும் குமுளி பாதை வழியா ஜீப் போக அனுமதிக்கறாங்க அதுவும் காலைல 6 மணிக்குதான் அனுமதி அந்த ஜீப்ல போக எல்லாரும் அஞ்சு ஆறுமணி நேரம் வரிசைல காத்திருக்கணும் குடும்பத்தோட வரவுங்க பாடு பெரும்பாடா இருக்கும் எல்லாரும் அடிச்சி புடிச்சிகிட்டு போய்தான் ஜீப்ல ஏறணும் அதுல கணவன் ஒரு ஜீப்லையும் மனைவி ஒரு ஜீப்லையும் குழந்தைகள் இன்னொரு ஜீப்லையும் ஏறிப்போற அவலம்லாம் நடக்கும் மதியம் மூணு மணிக்கே எல்லாத்தையும் அங்கேருந்து விரட்ட ஆரம்பிச்சுடுறாங்க இது மட்டுமல்லாம கண்ணகி கோயில்ல விநாயகர் மங்கலதேவிங்கற பேர்ல துர்கை சிலைங்களை கேரள நம்பூதிரிகள் வச்சி பூஜை செய்றாங்க அதனால இங்கேருந்து போற மக்கள் மங்கலதேவி யாருன்னு குழம்பிடறாங்க சில நேரத்துல ஏன்டா கோயிலுக்கு வந்தோம்னுகூட பக்தர்கள் புலம்பிக்கிட்டு போவாங்க அந்த அளவுக்கு கெடுபிடிகள் அதிகமா இருக்கும் கண்ணகிய தரிசிக்கணும்கிற ஒரே காரணத்துனாலதான் எல்லாத்தையும் சகிச்சிகிட்டு போய்ட்டு வர்றோம் கேரள வனத்துறையினர் செய்யற ஒரே நல்ல காரியம் பிளாஸ்டிக்க தடுக்கிறது மட்டும்தான் கோயில்ல எல்லாரையும் வரிசையா அனுமதிக்கறாங்க மத்தபடி அவுங்களோட செயல்பாடுகள் ‘இங்க எல்லாரும் எதுக்கு வரீங்கண்ணு39 கேள்வி கேக்கற மாதிரிதான் இருக்கும் எல்லாரும் எந்தவித பிரச்னையும் இல்லாம கண்ணகித் தாயை வழிபடற காலம் எப்ப வருமோ தெரில” என்று தமது ஆதங்கத்தைத் தெரிவித்தார் தேனி மாவட்டம் ஊஞ்சாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கண்ணகி பக்தரான ஜெயகாந்தன் கண்ணகி கோயில் கேரளா மாநிலம் இடுக்கியிலிருந்து 14 கிமீ தொலைவிலும் தமிழகத்தில் தேனி மாவட்டம் பளியன்குடி கிராமத்திலிருந்து சுமார் 6 கிமீ தொலைவிலும் இருக்கிறது கோயில் இருப்பதோ தமிழக எல்லையில் ஆனால் கட்டுப்பாடு கேரள தொல்லியல் துறையிடம் இதுதான் பிரச்னைக்குக் காரணம் சங்க காலத்திலிருந்தே தமிழக மக்களால் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் வழிபடப்பட்டு வந்த மங்கலதேவியைத் தற்போது வருடத்துக்கு ஒருநாள் மட்டுமே வழிபட முடியும் என்ற நிலை இருக்கிறது 1905-லேயே இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்ட கோயில் முறையான சாலை வசதி இல்லாததால் பராமரிக்க முடியாமல் விட்டுவிட்டது 1965 வரை இந்தக் கோயிலில் இருப்பது மங்கலதேவி என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள் ஆனால் அதே வருடம் பேராசிரியர் கோவிந்தராசனார் என்பவர்தான் 39சேரன் செங்குட்டுவன் கட்டிய கண்ணகி கோயில்தான் இது39 என்று ஆய்வு செய்து கண்டுபிடித்தார் பிறகு மங்கலதேவி கோயில்தான் கண்ணகி கோயில் என்று 1971-ல் அதிகாரபூர்வமாக்கத் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டதுஇதைத் தொடர்ந்து1976-ல் தமிழக அரசு பளியன்குடியிலிருந்து கண்ணகி கோயிலுக்கு சாலை அமைக்கத் திட்டம் தீட்டியது இந்தத் திட்டம் நிறைவேறுவதற்கு முன்னரே அவசரகாலப் பிரகடனம் செய்யப்பட்டு தமிழக அரசு கலைக்கப்பட்டதால் சாலை அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது ஆனால் இதே காலகட்டத்தில் கேரளா அரசு அவசர அவசரமாக குமிளியிலிருந்து கண்ணகி கோயிலுக்குச் சாலை அமைத்தது இந்த சாலை அமைக்கப்படுவதற்கு முன்பு கண்ணகி கோயிலுக்குப் பளியன்குடி வழியாகவே சென்று வழிபட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது இதன் பிறகு சாலை வசதி ஏற்பட்டதால் கண்ணகி கோயிலை நிர்வகிக்கும் உரிமையைக் கேரள அரசின் கட்டுப்பாட்டில் விட்டது மத்திய தொல்லியல் துறை தமிழக எல்லையில் கோயில் இருந்தும் கோயில் உரிமை கேரள அரசிடம் சென்றுவிட்டது அப்போது தொடங்கியதுதான் பிரச்னை1982-ல் கண்ணகி கோயிலுக்கு வழிபடச் சென்ற தமிழக பக்தர்கள் மீது `வேட்டையாட வந்திருக்கிறார்கள்’ என்று குற்றம் சாட்டப்பட்டு கேரள வனத்துறை கைது செய்தது அதன் பிறகு 1986-ல் இரு மாநில அரசுகளும் மத்திய அரசும் கலந்து பேசி வருடத்தில் ஒருநாள் மட்டும் சித்திரைப் பௌர்ணமியன்று தமிழக பக்தர்கள் கோயிலுக்குச் சென்று கண்ணகி வழிபாட்டை நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது வருடம் முழுவதும் நினைத்த நேரத்தில் வழிபட்டுக்கொண்டிருந்த கண்ணகி கோயில் உரிமை ஒரு நாள் மட்டும் என்று மாறிப்போனது இப்படித்தான் இந்த ஒரு நாளும் தமிழக பக்தர்கள் பல்வேறு இன்னல்கள் மற்றும் கட்டுப்பாட்டைக் கடந்தே கண்ணகியை வழிபட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதுஒவ்வொரு வருடமும் கண்ணகி கோயில் சித்திரைப் பௌர்ணமி திருவிழாவுக்கு ஏற்பாடு செய்து கண்ணகி கோயில் பிரச்னை தொடர்பாக நீண்ட நாள்களாகவே சட்டப் போராட்டம் நடத்திவரும் 39மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை39யின் பொருளாளர் முருகனிடம் பேசினோம்1880-ல் முல்லைப் பெரியாறு அணை கட்டும்போது ஆங்கிலேய ஆட்சியாளர்களிடம் கோயிலுக்குச் செல்வதற்குப் பாதை அமைத்துத் தர வேண்டும் என்று தமிழகத்தைச் சேர்ந்த மக்கள் கேட்டார்கள் இதை ஏற்றுக்கொண்ட ஆங்கிலேய ஆட்சியாளர்கள் 1935-ல் 12 அடி அகலத்தில் பாதை அமைத்துக் கொடுத்தார்கள் காலப்போக்கில் இந்தப் பாதை மறைந்துபோனது அதன் பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களிடம் இன்று வரை அந்தப் பாதையை அகலப்படுத்தி தார்ச்சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று போராடிக்கொண்டிருக்கிறோம் பளியன்குடியிலிருந்து கண்ணகி கோயிலுக்குத் தமிழக அரசால் இதுவரை பாதை அமைக்கப்படவில்லை அந்தச் சாலை அமைந்தால் மட்டுமே இந்த உரிமைப் பிரச்னை முடிவுக்கு வரும் என்று போராடிக்கொண்டிருக்கிறோம் ஆங்கிலேயர்கள் காலத்தில் கிடைத்த உரிமை மக்களாட்சியில் பறிபோன கொடுமை எங்களுக்கு மட்டுமே நிகழ்ந்திருக்கிறதுஅன்றிலிருந்தே பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறோம் கண்ணகி கோயிலைக் கேரள தொல்லியல் துறையிடம் ஒப்படைத்தது தவறு என்று 1984-ல் எங்கள் அறக்கட்டளையால் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்றுவரை நிலுவையில் இருக்கிறது கண்ணகி கோயிலை மீட்க வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம் கோயிலைப் புனரமைத்துப் பாதுகாக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம் அதைத் தொடர்ந்து கேரள முதல்வரையும் சந்தித்து கோரிக்கை வைத்தோம் இதன் அடிப்படையில் நிதி ஒதுக்கி கோயிலைப் புனரமைக்க அரசாணை வழங்கப்பட்டிருக்கிறது பணி தொடங்கியிருக்கிறது இன்னும் மூன்று ஆண்டுகளில் நிறைவேறும் என்று எதிர்பார்க்கிறோம் கோயில் புனரமைக்கப்பட்டாலும் பளியன்குடியிலிருந்து சாலை அமைக்கப்பட்டால் மட்டுமே தமிழக பக்தர்கள் எந்தவித பிரச்னையும் இல்லாமல் கண்ணகியை வழிபட்டுவிட்டுத் திரும்ப முடியும் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்துக்கு முன்பு மங்கல தேவி கண்ணகி கோயிலில் பௌர்ணமி நவராத்திரி சிவராத்திரி தமிழ் மற்றும் கேரள வருடப்பிறப்பு என்று வருடத்தில் 24 நாள்கள் திருவிழாக்கள் நடந்திருக்கின்றன அந்த நிலை மீண்டும் ஏற்படும் கோயில் உரிமையும் தமிழர்கள் கைக்கு மாறும் என்று நம்புகிறோம்” என்று நம்பிக்கையுடன் பேசினார் முருகன் வரும் 19-ம் தேதி சித்திரைத் திருவிழா கண்ணகி கோயிலில் கொண்டாடப்பட உள்ளது தமிழக பக்தர்கள் எந்தவித பிரச்னையும் இல்லாமல் சென்று வழிபட்டுத் திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது

Leave A Reply

Your email address will not be published.