சந்திராஷ்டமம் எந்த ராசிக்காரருக்குச் சாதகம்…? – ஒரு ஜோதிட வழிகாட்டல்!

0 7

ராகுகாலம் எமகண்டம் போல் சந்திராஷ்டமம் நாள்களிலும் சிலர் எந்தக் காரியத்தையும்  செய்யாமல் தவிர்க்கிறார்கள் கொடுக்கல் வாங்கல் புதிய திட்டங்களைச் செயல்படுத்துவது போன்றவற்றை எல்லாம் தள்ளிப் போடுகிறார்கள் இது சரியான விஷயம்தானா இந்த அளவுக்கு பயப்படலாமா என்பது பற்றி திருவண்ணாமலை ஜோதிடர் ஆனந்தாழ்வாரிடம் கேட்டோம்3939ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொருவரும் ஒரு நட்சத்திரத்தில் பிறந்திருப்பார் கோசாரப்படி ஒருவரின் ராசிக்கு 8 – ம் இடத்துக்குச்  சந்திரன் வரும்போது சந்திராஷ்டமம் ஏற்படுகிறது அப்படி வரும் சந்திரன் ஒரு ராசியில் இரண்டரை நாள்கள் இருக்கும் 39இந்தக் காலகட்டத்தில் செய்யும் செயல்கள் எதுவும் தவறாகிவிடுமோ39 என அஞ்சி  செயல் புரியாமல் இருந்து விடுகிறோம் பயணத்தின்போது சாலையின் வேகத்தடைகளை நிதானமாகக் கடந்து சங்கடம் நேராமல் தவிர்த்துக்கொள்வதைப் போலத்தான் சந்திரா‌ஷ்டமம் சந்திரன் மனோகாரன் என்பதால் சந்திராஷ்டம நாள்கள் நமக்கு நிதானத்தை ஏற்படுத்தும் இந்த நிதானம் நம் சிந்தனையை மேம்படுத்தவும் மனதின் உத்வேகத்தை அதிகப்படுத்தவும் செயலின் வேகத்தைக் கூட்டவும் உதவும்  சந்திராஷ்டமத்தைக் கண்டு எல்லா ராசிகளும் ஒதுங்கத் தேவையில்லை எந்தெந்த ராசிக்கு என்ன வகையான பலன் கிடைக்கும் எத்தனை சதவிகிதம் பலனளிக்கும் என்பதைப் பார்ப்போம்மேஷ ராசிக்காரர்கள் முக்கியமான காரியம் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது  அந்த நாள்களில் வழக்கமான காரியங்களை மட்டுமே செய்யலாம் உதாரணமாக காரிய முயற்சிக்குரிய விண்ணப்பம் செய்தல் நேர்முகத் தேர்வுக்குச் செல்லுதல் பரீட்சை எழுதுதல் ஏர் உழுதல் பெண் பார்க்கச் செல்லுதல் டாக்டர் ஆலோசனை பெறுதல் போன்றவற்றைச் செய்யலாம் ஆனால் புதிய வேலையில் சேருவது பயணங்கள் மேற்கொள்ளுதல் போன்றவற்றைத் தள்ளிப்போடுவது நல்லது ரிஷபத்தில் சந்திரன் உச்சம் என்பதால் இந்த ராசிக்காரர்கள் சந்திராஷ்டமத்தைக் காரணம் காட்டி எதையும் தள்ளிப்போட வேண்டியதில்லை ரிஷபம் சுக்கிரனுடைய வீடாகவும் இருப்பதால் இவர்கள் எந்தக் காரியத்தையும் செய்யலாம் எந்தத் தடையுமில்லை ஆனால் கரும காரியங்களில் முழுமையாகப் பங்கேற்றல் கொள்ளிப் போடுதல் போன்றவற்றைச் செய்யக்கூடாது சுபகாரியங்களில் தடையின்றிப் பங்கேற்கலாம் மிதுன ராசிக்காரர்களும் சந்திராஷ்டம நாளில் எல்லா வேலைகளையும் செய்யலாம் குறிப்பாக அவர்களின் ஜன்ம நட்சத்திரத்தை அறிந்து அதற்கேற்ப செயல்படலாம் எந்தவிதத் தடையுமில்லை ரிஷப ராசிக்காரர்களுக்குச் சொன்னது போலவே தீட்டுக் காரியங்கள் கரும காரியங்களில் பங்கேற்காமல் இருப்பது நல்லது மற்றபடி எல்லா வேலைகளையும் செய்யலாம் கடக ராசி சந்திரனுக்கு ஆட்சி வீடு எந்த கிரகமும் தன்னுடைய ராசிக்காரர்களுக்கு உதவிகரமாகவே இருக்கும் எதிராகச் செயல்படாது அதனால் எல்லா வேலைகளையும் செய்யலாம் ஆனால் நீண்ட நாள் வங்கியில் போட்டு வைத்திருந்த வைப்புத்தொகையைக் கணக்கை முடித்து எடுத்தல் நகைகளை அடமானம் வைத்தல் விற்பனை செய்தல் போன்றவற்றைச் செய்யக்கூடாது  சிம்ம ராசியின் அதிபதி சூரியனிடமிருந்து ஒளியை வாங்கி குளிர்ச்சியைத் தரும் கிரகம் சந்திரன் எனவே சிம்ம ராசிக்காரர்கள் இந்த நாளில் ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளுதல் அறுவை சிகிச்சை செய்து கொள்ளுதல் குழந்தைகளின் படிப்புக்குச் செலவு செய்தல் வீட்டின் மேல்தளத்தை விரிவுபடுத்துதல் போன்றவற்றை செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் கன்னி ராசிக்காரர்கள் தொழில் அபிவிருத்திக்குரிய காரியங்களை மட்டும் தடையின்றிச் செய்யலாம் மற்ற காரியங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது மிதுனத்துக்கும் கன்னிக்கும் அதிபதி புதன் என்றாலும் இடையில் வேறு கிரகங்கள் வருவதால் பலன்கள் மாறும்துலாம் ராசிக்கு அதிபதி சுக்கிரன் சுக்கிரனும் சந்திரனும் நண்பர்கள்தானென்பதால் இவர்கள் எல்லாவிதமான காரியங்களையும் செய்யலாம் ஆனால் மனைவி குழந்தைகளின் நகைகளை மாற்றி புதிதாக வாங்குதல் பழுது நீக்குதல் அடமானம் வைத்தல் போன்றவற்றைச் செய்யக்கூடாது பிறருக்குக் கடன் கொடுப்பது பிறரிடம் கடன் வாங்குவது ஆகியவற்றையும் செய்யக்கூடாது வாகனப்பழுது பார்க்க வாகனங்களை விடக்கூடாது மற்றபடி எல்லா காரியங்களையும் செய்யலாம் விருச்சிக ராசிக்கு அதிபதி செவ்வாய் இந்த வீட்டில்தான் சந்திரன் நீசமாகிறார் அதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் அதிகம் சிரமத்தைத் தராது அலைச்சல் திரிச்சலாக இருந்த வேலைகளை இந்த நாளில் செய்யலாம் கட்டட கான்ட்ராக்டரைப் பார்த்து வேலையை முடுக்கிவிடுதல் வழக்கறிஞரைச் சந்தித்தல் போன்ற வேலைகளைச் செய்யலாம்   முடியாமலிருந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும்  தனுசு ராசிக்காரர்கள் குழந்தைகளை கல்விக்கான பயிற்சி வகுப்புகளில்  இசை நடன வகுப்புகளில் சேர்ப்பது போன்றவற்றைத் தள்ளிப்போடுவது நல்லது அதே சமயம் கம்ப்யூட்டர் செல்போன் போன்றவற்றில் வீட்டிலிருந்தபடியே பணிபுரியலாம் நல்லவிதமாகவே முடிந்து வெற்றியைத் தரும்மகர ராசிக்கு அதிபதி சனி பூர்வீகச் சொத்தில் பங்கு பிரியாமல் பங்காளித் தகராறில் இருந்த பிரச்னை  மனமுறிவு காரணமாக விவாகரத்து போன்ற பிரச்னைகள் சந்திராஷ்டம நாளில் வந்தால் அவை அன்றோடு முடிந்து போய்விடும் முடிவுறாமல் காலை சுத்திய பாம்பைப்போல் தொந்தரவு கொடுத்த பிரச்னைகளை இந்த மகரராசிக்காரர்கள் அணுகினால் அவர்களுக்கு அந்தப் பிரச்னை அத்துடன் தீர்ந்து போய் நிம்மதி கிடைக்கும் சனீஸ்வரர் இப்படியொரு பாக்கியத்தை மகரராசிக்காரர்களுக்கு வழங்குகிறார் கும்ப ராசிக்காரர்கள் கோயில் திருப்பணி ஹோமம் யாகம் வளர்த்தல் கோயிலின் கும்பாபிஷேகம் புனர் நிர்மாணம் ஆகியவற்றுக்கு நன்கொடை வசூலிக்கப் போனால் பெரிய அளவில் நிதி சேரும் ஒரு மடங்கு கேட்டால் இரு மடங்கு கிடைக்கும்மீன ராசிக்காரர்கள் சந்திராஷ்டம  நாள்களில் எது செய்தாலும் தடங்கலே ஏற்படும் முன்னெச்சரிக்கை மிக்க  இவர்கள் பெரும்பாலும் சந்திராஷ்டம நாளில் எதுவும் செய்யமாட்டார்கள் காரணம் இவர்கள் மனமும் அதற்கு ஒப்பாது அதனால் இவர்கள் இயல்பாகவே சந்திராஷ்டம நாளில் எதையும் செய்யாமல் தள்ளிப் போட்டு விடுவார்கள்3939 என்றார் 

Leave A Reply

Your email address will not be published.