இந்த வார ராசிபலன் மே 27 முதல் ஜூன் 2 வரை!

0 5

மேஷராசி அன்பர்களே பண வரவு திருப்தி தரும் செலவுகளும் அவசியமான செலவுகளாகவே இருக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருக்கெடுக்கும் தந்தையுடன் கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை காப்பது அவசியம் சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும் கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும் உறவினர்கள் வருகை மகிழ்ச்சியுடன் செலவுகளும் ஏற்படுத்துவதாக இருக்கும் அலுவலகத்தில் அதிகரிக்கும் பணிச்சுமையின் காரணமாக அவ்வப்போது சோர்வாகக் காணப்படுவீர்கள் எதிர்பார்த்த சலுகைகள் சற்று இழுபறிக்குப் பிறகு கிடைக்கும் சக ஊழியர்கள் அனுசரணையாக இருப்பார்கள்வியாபாரத்தில் விற்பனை சற்று மந்தமாகத்தான் இருக்கும் சக வியாபாரிகளுடன் இணக்கமாக நடந்துகொள்வது அவசியம் வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவைகலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடியே வாய்ப்புகள் கிடைக்கும் வருமானமும் மகிழ்ச்சி தருவதாக இருக்கும் மூத்த கலைஞர்கள் ஆதரவாக இருப்பார்கள்மாணவர்களுக்கு மேற்கொண்டு படிப்பதில் ஆர்வம் அதிகரிக்கும் எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைப்பதால் மகிழ்ச்சி உண்டாகும்குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் சற்று பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் கணவரின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தரும் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்அதிர்ஷ்ட நாள்கள் 27 28 31 ஜூன் 1அதிர்ஷ்ட எண்கள் 4 5 6வழிபட வேண்டிய தெய்வம் விநாயகர்பரிகாரம் தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்ஐந்து கரத்தனை ஆனை முகத்தனைஇந்தின் இளம்பிறை போலும் எயிற்றனைநந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைபுந்தியில் வைத்தடி போற்றுவனே ரிஷபராசி அன்பர்களே எதிர்பார்த்ததைவிட பணவரவு அதிகமாக இருக்கும் தேவையற்ற செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை வராது என்று நினைத்த பணம் கைக்குக் கிடைக்கும் உடல் ஆரோக்கியம் மேம்படும் பணியின் காரணமாகப் பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேரும் வாய்ப்பு ஏற்படும் வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும் பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்அலுவலகத்தில் பணிச்சுமையிலிருந்து விடுபடுவீர்கள் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும் அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள் சக  ஊழியர்கள் உங்களிடம் ஆலோசனை கேட்டு வருவார்கள்வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே திருப்தியாக இருக்கும் பற்று வரவு சுமுகமாக நடைபெறும் கடையை விரிவுபடுத்துவது போன்ற முயற்சிகளை இந்த வாரம் மேற்கொள்ளலாம்கலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடியே வாய்ப்புகள் கிடைக்கும் வருமானத்துக்கும் குறைவிருக்காது சக கலைஞர்களால் அனுகூலம் உண்டாகும்மாணவர்களுக்கு அவர்கள் விரும்பியபடியே மேற்படிப்பில் சேரமுடியும் படிப்பதற்குத் தேவையான வங்கிக் கடனுதவியும் கிடைக்கும் முயற்சிகளுக்குப் பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள் குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மனதுக்கு உற்சாகம் தரும் வகையில் இருக்கும் உறவினர் வருகை மகிழ்ச்சி தரும் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை திருப்தி தருவதாக இருக்கும்அதிர்ஷ்ட நாள் 27 28 29 30 ஜூன் 2அதிர்ஷ்ட எண்கள் 2 5 7வழிபட வேண்டிய தெய்வம் முருகப் பெருமான்பரிகாரம் தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்துதிப்போர்க்கு வல்வினை போம் துன்பம்போம் நெஞ்சில்பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும்நிஷ்டையுங் கைகூடும் நிமலரருள் கந்தர் சஷ்டி கவசம்தனைஅமர ரிடர்தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி மிதுனராசி அன்பர்களே  பணவரவு திருப்தி தருவதாக இருக்கும் பிள்ளைகளால் மதிப்பும் மரியாதையும் கூடும் வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி உண்டாகும் உடன்பிறந்தவர்களின் வருகை மனதுக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கும் தடைப்பட்டு வந்த சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான சூழ்நிலை கனிந்து வரும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை சிலருக்கு திடீர்ப் பயணங்களால் அலைச்சலும் சோர்வும் உண்டாகும்அலுவலகத்தில் தங்கள் பணிகளில் மட்டுமே கவனமாக இருக்கவும் உயர் அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும் சிலருக்கு இடமாற்றம் ஏற்படவும் வாய்ப்பு உண்டுவியாபாரத்தில் கடுமையாக உழைத்தால் மட்டுமே விற்பனையை அதிகரிக்க முடியும் சக வியாபாரிகளுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும் பற்று வரவில் கூடுதல் கவனமும் கனிவான அணுகுமுறையும் அவசியம்கலைத்துறையினருக்கு திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் வருமானத்தைப் பொறுத்தவரை ஓரளவு திருப்தி தருவதாக இருக்கும் சக கலைஞர்கள் உதவிகரமாக இருப்பார்கள்மாணவர்களுக்கு மேற்கொண்டு படிக்க வேண்டும் என்பதில் ஆர்வம் குறைவதற்கான சாத்தியம் உள்ளது அடிக்கடி மனக்குழப்பம் ஏற்பட்டு நீங்கும் குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் ஏற்படும் வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்அதிர்ஷ்ட நாள்கள் 29 30 31 ஜூன் 1அதிர்ஷ்டம் தரும் எண்கள் 6 9வழிபட வேண்டிய தெய்வம் சிவபெருமான்பரிகாரம் தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்நிழலார் சோலை நீல வண்டினம்குழலார் பண் செய் கோலக் காவுளான்கழலால் மொய்த்த பாதம் கைகளால்தொழலார் பக்கம் துயரம் இல்லையே கடகராசி அன்பர்களே பணவரவு ஓரளவு திருப்தி தரும் வீண் செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை விலகிச் சென்ற உறவினர்கள் உங்களைப் புரிந்துகொண்டு அன்பு பாராட்டுவார்கள் திருமண முயற்சிகள் சாதகமாக முடியும் அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும் சிலருக்கு புதிய ஆடை ஆபரணங்களின் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக சில முயற்சிகளை முன்னெடுப்பீர்கள் அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும் சிலருக்கு விரும்பத்தகாத இடமாற்றம் ஏற்படக்கூடும் அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும் சக ஊழியர்களின் விஷயத்தில் தலையிட வேண்டாம்வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும் பற்று வரவில் பிரச்னை எதுவும் இருக்காது வியாபாரம் விஷயமாக சிலருக்குத் தொலைதூரப் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும்கலைத்துறையினருக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வதில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும் சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்மாணவர்களுக்கு அடிக்கடி மனதில் குழப்பம் ஏற்படக்கூடும் படிப்பில் கவனம் செலுத்த முடியாது போட்டித் தேர்வுகளுக்கு சற்று சிரத்தை எடுத்துப் படித்தால் மட்டுமே பலன் கிடைக்கும்குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரம் கணவர் வழி உறவினர்கள் வருகை உற்சாகம் தரும் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும்அதிர்ஷ்ட நாள்கள் 31 ஜூன் 1 2அதிர்ஷ்ட எண்கள் 3 5 சந்திராஷ்டம நாள்கள் மே 27 28வழிபட வேண்டிய தெய்வம் தட்சிணாமூர்த்திபரிகாரம் தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்மெய்யராகி பொய்யை நீக்கி வேதனையைத் துறந்துசெய்யரானார் சிந்தையானே தேவர்குலக் கொழுந்தேநைவனாயேன் உந்தன் நாமம் நாளும் நவிற்றுகின்றேன்வையம் முன்னே வந்து நல்காய் வலிவல மேயவனேசிம்மராசி அன்பர்களே தேவையான அளவுக்குப் பணவரவு இருந்தாலும் சேமிக்க முடியாதபடி செலவுகள் ஏற்படும் சிலருக்குச் சிறிய அளவில் மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும் கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும் மற்றவர்கள் உங்களைப் பற்றி அவதூறாகப் பேசினாலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம் தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை தாய்வழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படும்அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும் சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்துகொள்வது அவசியம் உங்கள் வேலைகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம் அதிகாரிகள் கண்டிப்பு காட்டினாலும் பொறுமை அவசியம்வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே நடைபெறும் சக வியாபாரிகளுடன் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக நடந்துகொள்ளவும் பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லதுகலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தடைகள் ஏற்படக்கூடும் மூத்த கலைஞர்களின் அறிவுரை மனதுக்கு ஆறுதல் தரும் பணவரவு திருப்தி தருவதாக இருக்கும்மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும் படிப்பதற்குத் தேவையான உதவிகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும் ஆசிரியர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு செலவுகள் அதிகரிப்பதால் சிரமம் ஏற்படும் என்றாலும் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படாது வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பணிகளில் மிகுந்த கவனம் தேவை சலுகைகள் கிடைக்கும்அதிர்ஷ்ட நாள்கள் 27 28 ஜூன் 2அதிர்ஷ்ட எண்கள் 2 3 6சந்திராஷ்டம நாள்கள் மே 29 30வழிபடவேண்டிய தெய்வம் அம்பிகைபரிகாரம் தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்காத்தவளே பின் கரந்தவளே கறைகண்டனுக்குமூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளேமாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே கன்னிராசி அன்பர்களே பணவரவு திருப்தி தருவதாக இருக்கும் ஆனால் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும் என்பதால் சிறிது கடன் வாங்கவும் நேரிடும் கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிரச்னைகள் மறைந்து மகிழ்ச்சி உண்டாகும் கடன்கள் விஷயத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது இளைய சகோதரர்களால் உதவி உண்டு தந்தையுடன் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்அலுவலகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும் பணி நிரந்தரமாகும் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லதுவியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்க சற்று கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும் உழைப்புக்கேற்ற லாபம் கிடைப்பதால் உற்சாகம் உண்டாகும் பங்குதாரர்கள் உதவிகரமாக இருப்பார்கள்கலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடியே வாய்ப்புகள் கிடைக்கும் பெரிய நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள்மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை உடனுக்குடன் புரிந்துகொள்வீர்கள் மேற்படிப்புக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும்குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு சிரமம் எதுவும் ஏற்படுவதற்கில்லை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அனுசரணையாக இருப்பார்கள் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரம்அதிர்ஷ்ட நாள் 27 28 29 30அதிர்ஷ்ட எண்கள் 3 7 9சந்திராஷ்டம நாள்கள் மே 31 ஜூன் 1வழிபட வேண்டிய தெய்வம் வள்ளி தேவசேனா சமேத முருகக்கடவுள்பரிகாரம் தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்உருவாய் அருவாய் உளதாய் இலதாய்மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்குருவாய் வருவாய் அருள்வாய் குகனே துலா ராசி அன்பர்களே வருமானம் திருப்தி தருவதாக இருந்தாலும் தேவையற்ற செலவுகளால் கடன் வாங்க நேரிடும் திருமண முயற்சிகள் சாதகமாக முடியும் கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும் வழக்குகளில் இருந்து வந்த பிற்போக்கான நிலை மாறி சாதகமான தீர்ப்பு கிடைக்கும் பிள்ளைகளால் பெருமை உண்டாகும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லதுஅலுவலகத்தில் உங்களின் திறமை வெளிப்படும் உயர்ந்த பதவி தேடி வரும் சம்பள உயர்வும் கிடைக்கும் ஆனால் சக ஊழியர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும் நிர்வாகத்தினரின் பாராட்டுகள் மகிழ்ச்சி தரும்வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும் பற்று வரவு சுமுகமாக நடை பெறும்வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் பிரச்னை எதுவும் இல்லை ஆனால் வருமானம் எதிர்பார்த்தபடி கிடைக்காது சக கலைஞர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்மாணவர்களுக்குப் பாடங்களில் ஆர்வம் அதிகரிக்கும் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறுவீர்கள் விரும்பிய கல்வி நிறுவனத்தில் சேர சிலரின் சிபாரிசு தேவைப்படும்குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு வீட்டுச் செலவுகள் அதிகரித்தாலும் தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிட முடியும் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவல கத்தில் சலுகைகள் கிடைக்கும்அதிர்ஷ்டம் தரும் நாள்கள் 29 30 31அதிர்ஷ்ட எண்கள் 2 5 6சந்திராஷ்டம நாள் ஜூன் 2வழிபடவேண்டிய தெய்வம் பெருமாள்பரிகாரம் தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்குலம்தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயராயினவெல்லம்நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும் அருளொடுபெருநிலமளிக்கும்வலந்தரும்மற்றுந்தந்திடும் பெற்ற தாயினு மாயினசெய்யும்நலந்தருஞ்சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணாவென்னும்நாமம் விருச்சிகராசி அன்பர்களே பண வரவுக்குக் குறைவில்லை ஆனால் சில தேவையற்ற செலவுகளும் ஏற்படக் கூடும் அவசியத் தேவை என்றாலும்கூட  இப்போது கடன் வாங்குவதைத் தவிர்த்துவிடுவது நல்லது உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை பால்ய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியும் ஆறுதலும் தருவதாக இருக்கும் கணவன் – மனைவிக்கிடையே வீண் விவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லதுஅலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை இப்போதைக்கு சலுகைகள் எதையும் எதிர்பார்க்கமுடியாது சிலருக்கு இட மாறுதல் கிடைக்கக்கூடும் என்றாலும் அதனால் நன்மையே உண்டாகும்வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்காது வியாபாரம் அபிவிருத்தி அடைய கூடுதலான முயற்சியும் உழைப்பும்  தேவை பணியாளர்கள் முரண்டு பிடித்தாலும் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லதுகலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகளும் அதனால் தாராளமான பணவரவும் கிடைக்கும் சக கலைஞர்கள் உங்களுடன் இணக்கமாகப் பழகுவார்கள் மாணவர்களுக்குப் படிப்பில் கூடுதல் ஆர்வம் உண்டாகும் பாடங்களை நன்றாகப் புரிந்து கொள்ளும் திறன் அதிகரிக்கும் நண்பர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு செலவுகளால் சற்று சிரமப்படவேண்டி இருக்கும் வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் சலுகைகள் எதையும் எதிர்பார்க்கமுடியாதுஅதிர்ஷ்டம் தரும் நாள்கள் 31 ஜூன் 1 2அதிர்ஷ்டம் தரும் எண்கள்  1 2 7வழிபடவேண்டிய தெய்வம் தட்சிணாமூர்த்திபரிகாரம் தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றிக் கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்மாசில் வீணையும் மாலை மதியமும்வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்மூசு வண்டறை பொய்கையும் போன்றதேஈசன் எந்தை இணையடி நீழலே தனுசுராசி அன்பர்களே பணவரவுக்குக் குறைவில்லை தேவையற்ற செலவுகள் இருக்காது திருமண வயதில் உள்ள பிள்ளை அல்லது பெண்ணுக்கு வரன் தேடும் முயற்சியில் ஈடுபட லாம் நல்ல வரன் அமைவ தற்கு வாய்ப்பு உள்ளது கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் உடனே சரியாகிவிடும் தந்தையுடன் ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி சுமுகமான உறவு ஏற்படும் அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும் அலுவலகத்தில் இதுவரை இருந்த பணி நெருக்கடி இப்போது சற்று குறையும் அதனால் மனதில் உற்சாகம் ஏற்படும் வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல பதில் கிடைக்கும் சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கக்கூடும்வியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும் கடையை வேறு இடத்துக்கு மாற்ற நினைத்தால் அதற்கான முயற்சிகளில் இந்த வாரம் ஈடுபடலாம் முயற்சிகளுக்குப் பங்குதாரர்களின் ஆதரவு கிடைக்கும்கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் சக கலைஞர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி இணக்கமான சூழ்நிலை நிலவும் வருமானத்துக்கும் குறைவில்லைமாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும் பாடங்களை உடனுக்குடன் புரிந்து கொள்வதால் ஆசிரியர்களின் பாராட்டுகள் கிடைக்கும் குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரம் மற்றவர்களுடன் இணக்க மான சூழ்நிலை நிலவும் அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும் சலுகைகளும் கிடைக்கும்அதிர்ஷ்ட நாள்கள் 27 28 ஜூன் 2அதிர்ஷ்டம் தரும் எண்கள்  2 4  வழிபடவேண்டிய தெய்வம்   சூரியன்பரிகாரம்  தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்திங்கள் தங்கிய சடை உடையானை தேவதேவனை செழுங் கடல் வளரும் சங்க வெண்குழைக் காது உடையானை சாம வேதம் பெரிது உகப்பானை மங்கை நங்கை மலை மகள் கண்டு மருவி ஏத்தி வழிபடப் பெற்ற கங்கையாளனை கம்பன் எம்மானை காணக் கண் அடியேன் பெற்றவாறே மகரராசி அன்பர்களே பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருப்பதாலும் தேவையற்ற செலவுகள் இல்லை என்பதாலும் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும் கணவன் -மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும் ஆரோக்கியம் சிறிதளவு பாதித்தாலும் உடனே சரியாகிவிடும் சிலருக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டுவேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும் அதற்கேற்ற ஆதாயமும் கிடைக்கும் என்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள் சக ஊழியர்களால் மறைமுகத் தொல்லைகள் ஏற்பட்டு நீங்கும்வியாபாரத்தில் லாபம் குறைவாகத்தான் இருக்கும் கடையை விரிவுபடுத்தவோ அல்லது வேறு இடத்துக்கு மாற்றவோ சாதகமான சூழ்நிலை இல்லை சக வியாபாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லதுகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் சில தடைகள் ஏற்பட்டு நீங்கும் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது நன்கு யோசித்துச் செய்யவும் மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும் பழைய நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும் படிப்புக்குத் தேவையான உதவி கிடைக்கும்குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு தேவையான பணம் கிடைக்கும் என்பதால் பிரச்னை இருக்காது அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகளும் அதற்கேற்ற சலுகைகளும் கிடைக்கும்அதிர்ஷ்டம் தரும் நாள்கள் 29 30அதிர்ஷ்டம் தரும் எண்கள்  1 3 6வழிபடவேண்டிய தெய்வம் சிவபெருமான்பரிகாரம் தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்மன்னானவன் உலகிற்கொரு மழையானவன் பிழையில்பொன்னானவன் முதலானவன் பொழில்சூழ்புள மங்கைஎன்னானவன் இசையானவன் இளஞாயிறின் சோதிஅன்னானவன் உறையும்மிடம் ஆலந்துறை யதுவே கும்பராசி அன்பர்களே வருமானம் திருப்திகரமாக இருக்கும் செலவுகளும் அவசிய செலவுகளாகவே இருக்கும் கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும் எதிர்பார்த்த நல்ல செய்தி இந்த வாரம் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காகக் கொஞ்சம் அலைச்சலும் அதனால் சோர்வும் உண்டாகும் தந்தையின் உடல் நலனில் கூடுதல் அக்கறை தேவைப்படும் அரசாங்க வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்அலுவலகத்தில் சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள் மற்றபடி பதவி உயர்வோ சலுகை உயர்வோ எதிர்பார்க்கமுடியாது வேறு வேலைக்குச்  செல்ல முயற்சி செய்யவேண்டாம்வியாபாரத்தில் விற்பனை இருந்தாலும்கூட அதற்கேற்ற லாபம் கிடைக்காது எனவே பொறுமையை விடாமல் வியாபாரத்தில் கவனமாக இருப்பது நல்லது பங்குதாரர்கள் முரண்டு பிடித்தாலும் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லதுகலைத்துறையைச் சேர்ந்த அன்பர்கள் கடினமாக முயற்சி செய்தால் மட்டுமே வாய்ப்புகளைப் பெற முடியும் வருமானம்கூட ஓரளவுக்குத்தான் இருக்கும்மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது அவசியம் படிப்பு தொடர்பாக எதிர்பார்க்கும்  சிபாரிசு மற்றும் உதவி கிடைத்துவிடும்குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு போதிய அளவு பண வசதி கிடைப்பதால் மனநிறைவு உண்டாகும் அலுவலகத்துக்குச் செல்லும் பெண்கள் தங்கள் பணிகளில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்அதிர்ஷ்டம் தரும் நாள்கள் 27 28 31 ஜூன் 1அதிர்ஷ்டம் தரும் எண்கள்  1 2 5வழிபடவேண்டிய தெய்வம் பெருமாள்பரிகாரம் தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்இறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய்மறையாய் மறைப்பொருளாய் வானாய் – பிறைவாய்ந்தவெள்ளத் தருவி விளங்கொலிநீர் வேங்கடத்தான்உள்ளத்தி னுள்ளே உளன் மீனராசி அன்பர்களே பொருளாதார வசதி சுமாராகத்தான் இருக்கும் செலவுகளும் குறைவாகவே இருக்கும் உறவி னர்களுடன் வீண் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உண்டு குடும்பம் தொடர்பான எந்த ஒரு முடிவையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது சிலருக்குக் குடும்ப விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரும் தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும் அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்அலுவலகத்தில் நீண்டநாள்களாக எதிர்பார்த்த சலுகை இப்போது கிடைக்கும் சிலருக்கு அவர்கள் விரும்பிய இடத்துக்கு மாற்றல் கிடைக்கும் சக ஊழியர்கள் பணிகளில் உதவி செய்வார்கள்வியாபாரத்தில் விற்பனை நல்லபடியாக இருப்பதுடன் எதிர்பார்த்ததை விட லாபம் கூடுதலாகக் கிடைக்கும் பணியாளர்களின் ஒத்துழைப்பும் நன்றாக இருக்கும் கொடுக்கல் வாங்கல் சுமுகமாக நடைபெறும்கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைப்பதுடன் வருமானமும் கூடுதலாகக் கிடைக்கும் ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உண்டாகும்மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் சக நண்பர்களால் பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் நண்பர்களுடன் பழகுவதில் கவனம் தேவைகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு குடும்ப நிர்வாகத்தில் சிறிது சிரமங்கள் ஏற்படும் என்றாலும் சமாளித்துவிடுவீர்கள் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்அதிர்ஷ்டம் தரும் நாள் 29 30 ஜூன் 2அதிர்ஷ்டம் தரும் எண்கள் 2 7சந்திராஷ்டம நாள்கள் மே  27 28வழிபடவேண்டிய தெய்வம் அம்பிகைபரிகாரம் தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றிக் கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை என்றும் வணங்குவது உன்மலர்த்தாள் எழுதாமறையின் ஒன்றும் அரும் பொருளே அருளே உமையே இமயத்து அன்றும் பிறந்தவளே அழியாமுத்தி ஆனந்தமே  

Leave A Reply

Your email address will not be published.