திடீரெனப் பொங்கிய சந்திர தீர்த்தம் – புனித நீராடிய திருவாவடுதுறை ஆதீனம்!

0 10

கும்பகோணம் அருகே திருமாந்துறையில்  ஸ்ரீயோகநாயகி சமேத ஸ்ரீ அக்ஷய நாத சுவாமி கோயிலில் உள்ள சந்திரக் கிணறு தீர்த்தத்தில் திடீரெனத் தண்ணீர் பொங்கி ஆர்ப்பரித்துவந்ததைக் கண்டு பக்தர்கள் பரவசமடைந்தனர் இதையறிந்த திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் சந்திர தீர்த்தத்தில் நீராடி சிறப்பு வழிபாடு நடத்தினார்கும்பகோணம் அருகே உள்ள திருமாந்துறையில்  ஸ்ரீயோகநாயகி சமேத ஸ்ரீ அக்ஷய நாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது இந்தக் கோயில் செம்பியன்மாதேவியரால் திருப்பணி செய்யப்பட்டது சுமார் 1200 ஆண்டுகள் பழைமைவாய்ந்தது திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான இக்கோயில் ரோகிணி நட்சத்திரத்திற்கும் விருச்சிக ராசிக்கும் உரிய பரிகாரத் தலமாகும் முன்னொரு காலத்தில் காலமா முனிவருக்கும் நவகிரகங்களுக்கும் தொழுநோய் ஏற்பட்டதால் தங்களது ரோக நிவர்த்திக்காக திருமாந்துறை வெள்ளெறுக்குக் காட்டில் பூஜைசெய்து 15 தினங்கள் சந்திரக்கிணறு தீர்த்தத்தில் நீராடி உடல் நோய் நீங்கி மனக்குறை அகன்றதாகத் தல வரலாறு கூறுகிறது இதனருகே அரை கிலோ மீட்டர் தொலைவில்தான் சூரியனார் கோயில் உள்ளது காலமாமுனிவரும்  நவகிரகங்களும் சூரியனார் கோயிலில் தங்கி இருந்து திருமாந்துறை ஸ்ரீ அட்சயநாதரைத் தரிசித்து நலம் அடைந்தார்கள் என்பதால் நலமுடன் வாழ திருமாந்துறை அட்சயநாதரை தரிசித்த பின்பு சூரியனார் கோயில் சென்று வழிபடுவது இன்றைக்கும் வழக்கமாக இருக்கிறதுஅட்சயநாதர் ஆலயத்திற்குள் அரை சந்திர வடிவில் சந்திர தீர்த்தக்கிணறு அமைந்திருக்கிறது இதில் வளர்பிறை நாள்களில் தண்ணீர் அதிகரிப்பதும் தேய்பிறை நாள்களில் தண்ணீர் குறைவதும் காலங்காலமாக நடைபெறும் நிகழ்வாகும் இந்நிலையில் இன்று கார்த்திகை அமாவாசை நாளில் காலை 8 மணி அளவில் திடீரென சந்திர தீர்த்தத்தில் தண்ணீர் பெருக்கெடுத்துப் பொங்கியது கங்கையே அட்சயநாதரை தரிசிக்க வந்திருக்கிறாள் என்றெண்ணி பக்தர்கள் திரள ஆரம்பித்தனர்இதுபற்றி ராஜி சிவாச்சியாரிடம் கேட்டபோது “ தேய்பிறையின்போது அதுவும் அமாவாசை நாளில் சந்திரக் கிணற்றில் தண்ணீர் ரொம்பவும் கீழே இருக்கும் ஆனால் இன்று அபிஷேகத்திற்கு தண்ணீர் எடுக்கப்போனபோது மேலே ததும்பி வழிந்தது இதைக் கண்ட பக்தர்கள் புனித நீராட ஆரம்பித்துவிட்டார்கள் இதுபற்றி திருவாவடுதுறை ஆதீனத்திற்கு தகவல் அனுப்பினேன் அவர்களும் வருகை தந்து புனித நீராடி சிறப்பு பூஜைகள் செய்தார்கள் காலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீராடியும் இதுவரை சந்திரக் கிணற்றில் தண்ணீர் குறையவில்லை என்பதுதான் ஆச்சர்யம் எல்லாம் இறைவன் செயல் என்றார்

Leave A Reply

Your email address will not be published.