பொங்கும் மங்கலம் எங்கும் தங்கிட சூரியனைப் போற்றி வழிபடுவோம்! #Pongal

0 5

உலகில் பழைமையான வழிபாடுகளில் சூரிய வழிபாடு முதன்மையானது கண்கண்ட தெய்வமாக  உலகில் யாவர்க்கும் ஒளிகொடுக்கும் இறைவன் சூரிய பகவான் நம் பாரத பூமியில் ஒரு காலத்தில் சூரிய வழிபாடு ஒரு தனித்த மதமாகவும் விளங்கியது உண்டு வேதங்களும் இதிகாசங்களும் புராணங்களும் சூரியனைப் போற்றுகின்றன பழந்தமிழ் காப்பியமான சிலப்பதிகாரம் 39ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் 39 என்னும் தமிழர் மரபில் சிறப்புற்றிருந்த சூரிய வழிபாடு குறித்தும் சூரியக் கடவுளை 39உச்சிக்கிழான்39 என்று ஏத்திக் கூறியுள்ளது சங்கரணம் என்றால் நகர்தல் என்று பொருள் சூரியன் ஆடிமாதம் முதல் மார்கழி மாதம் வரை செய்யும் தனது தென்முகமான பயணத்தை வடதிசை நோக்கி மாற்றும் தை மாதத்தின் முதல் நாளில்தான் உத்தராயன புண்ய காலம் தொடங்குகிறது தை மாதம் மகர ராசிக்குரியது எனவே இந்த நாளை மகர சங்கராந்தி என்று குறிப்பிடுகின்றனர் நாடு முழுவதும் இந்தப் பண்டிகை வெவ்வேறு பெயர்களால் வழங்கப்பட்டாலும் அன்றைய தினத்தின் முக்கிய வழிபாடு சூரியனுக்கே பெரும்பாலான எல்லா ஆலயங்களிலும் நவகிரகங்களுக்குத் தனி சந்நிதி காணப்படும் சில கோயில்களில் சூரியனுக்குத் தனி மூர்த்தம் அமைத்து வழிபடுவதும் உண்டு ஆனால் சூரியனுக்கே தனி ஆலயங்களும் உண்டு வட இந்தியாவில் புகழ்பெற்ற கோனார்க் கோயிலும் தென் இந்தியாவில் சூரியனார் கோயிலும் பிரசித்திபெற்றவைஇதிகாசங்களில் சூரியனின் பெருமை மிகவும் போற்றப்பட்டுள்ளது ராமாயணத்தில் அகத்திய மாமுனி ராமனுக்கு 39ஆதித்திய ஹிருதய39த்தை உபதேசம் செய்தார் அன்னை பார்வதியிடமிருந்து அவர் பெற்ற இந்த மந்திர உபதேசத்தைப் பாராயணம் செய்வதன் மூலம் சகல சத்ருக்களையும் வெற்றிகொள்ளலாம் என்று உபதேசித்தார் ஆதித்திய ஹிருதயம் சூரியனின் தன்மைகளைப் போற்றும் மந்திரம் ராமபிரானும் ஆதித்திய ஹிருதயத்தை பாராயணம் செய்து சூரிய வழிபாட்டின் முக்கியத்துவத்தை நமக்கு விளக்கினார் இது குறித்து வால்மீகி ராமாயணம் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளதுகச்சபேச்வரர் கோயிலில் சூரியன் சந்நிதியில் கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருக்கும்  ‘மயூர சதகம்’ என்னும் நூறு ஸ்லோகம் கொண்ட சூர்ய ஸ்துதி முக்கியமானது என்றும் அதனைப் பாராயணம் செய்தால் பல்வேறு நன்மைகளும் கிட்டும் என்பது மகாபெரியவா வாக்குதமிழகத்தில் பொங்கல் பண்டிகை நான்கு நாள்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது பொங்கலுக்கு முதல் நாள் போகிப் பண்டிகை போக்கி என்பதே போகி ஆயிற்று என்பர் போகி என்றால் இந்திரனையும் குறிக்கும் இந்திரனே மழைக்கு அதிபதி எனவே சூரிய வழிபாட்டிற்குமுன் தினம் இந்திர வழிபாடு நடைபெறும் பழையன கழிதலும் செய்யும் நாளாகப் போகி தினத்தைக் கொண்டாடும் வழக்கம் நம்மிடையே உண்டு உழவுக்குப் பெருமை சேர்க்கும் பொங்கல்மழை கொடுத்த இந்திரனை வழிபடுவதைப் போலவே சூரியனை வழிபாடு செய்யும் முக்கியமான தினம் பொங்கல் சூரிய ஒளிதான் தாவரங்களில் உணவை உற்பத்தி செய்கிறது என்கிறது அறிவியல் எனவே சூரிய வழிபாடு பிரதானமான வழிபாடாக இந்த அறுவடைக்குப் பின்னான நாள்களில் கொண்டாடப்படுகிறது  உழவர்கள் கதிரவனுக்கு நன்றி சொல்லும் விதமாகத் தை முதல் நாள் பொங்கல் இட்டு வழிபாடு செய்வது வழக்கம் உழவர்களுக்கும் சூரியனுக்கும் மரியாதை செய்யும் விதமாக மக்கள் அனைவரும் இந்தப் பண்டிகையைக் கைக்கொள்ள ஆரம்பித்தனர்பொங்கல் பண்டிகை நாளன்று அதிகாலையில் எழுந்ததும் நீராடவேண்டும் இந்த நன்னாளில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் வழக்கம் இல்லை குளித்து முடிந்தது மங்களகரமான  ஒரு நல்ல நேரத்தில் பொங்கல் வைக்க வேண்டும் கிழக்கு முகமாகப்  புது பொங்கல் பானையை வைத்து அதில் கிழங்குகளுடன் கூடிய மஞ்சள் இலை இஞ்சி இலை ஆகியவற்றைச் சேர்த்துக் கட்ட வேண்டும் பொங்கல் பானையின் மேல் மாவினால் கோலமிட்டு அலங்கரிக்கலாம் சூரிய சந்திர வடிவங்களைக் கோலமிடுவது சிறப்புபால் பொங்கி வழியும் போது 39பொங்கலோ பொங்கல்39 என்று சொல்வது வழக்கம் பொங்கல் பொங்குவதுபோல நம் வாழ்வில் மங்கலமும் பொங்கும் என்பது நம்பிக்கை அதனால் தான் அன்றைய தினத்தில் பெரியவர்கள் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக்கொள்ளும்போது 39பொங்கல் பொங்கியதா39 என்று கேட்பது உண்டு பொங்கல் தயாரானதும் சூரியனுக்குப் பூஜை செய்ய வேண்டும்   சூரிய பூஜை மிக எளிதாகச் செய்யலாம் வழக்கம் போல முதலில் சிறு கணபதி செய்து முடித்துக்கொண்டு அதன் பிறகு சூரிய பூஜையைத் தொடங்க வேண்டும் சூரிய ஒளிபடும் இடங்களில் தண்ணீர் தெளித்துக் கோலமிடவேண்டும் வடக்குப் பக்கம் சூரிய பிம்பத்தையும் தெற்குப் பக்கம் சந்திர பிம்பத்தையும் வரைந்துகொள்ள வேண்டும் பின்பு பொங்கல் பானையோடு கரும்பு முதலியனவற்றையும் நமக்கு உணவளித்த சூரியக் கடவுளுக்குப் படைத்துப் பின் கற்பூரம் காட்ட வேண்டும் சூரியனுக்குப் படையலிடும்போதும் பொங்கலோ பொங்கல் என்று சொல்லிக் குலவை இடும் வழக்கமும் உண்டுஇந்த நாளில் செய்த பொங்கல் முழுவதையும் தீர்த்துவிடாமல் கொஞ்சம் மிச்சம் வைக்கவேண்டும்  காரணம் மறுநாள் கணுப்பொங்கல்கணுப்பொங்கல்கணுப்பொங்கல் பெண்களுக்கானது தங்களின் புகுந்த வீடும் பிறந்த வீடும் செழிக்க அவர்கள் கனுப்பிடி வைக்கும் சடங்குகளைச் செய்யும் நாள்கணுப்பிடி நாளில் பெண்கள் பொங்கல் பானையில் கட்டியிருந்த மஞ்சள் கிழங்கெடுத்து வீட்டுப் பெரிய சுமங்கலிப் பெண்களிடம் கொடுத்து உரசிப் பூசிக்கொண்டு நீராடுவர் நீராடிப் பின் கணுப்பிடி வைத்து வழிபடுவர் முன்தினம் செய்த பொங்கலை எடுத்துக்கொள்வர் அதில் குங்குமம் மஞ்சள் கலந்து ஏழு சிறுசிறு பிடிகளாக வைப்பர் கணுப்பிடி வைக்கும் முறை இரண்டு மஞ்சள் இலைகள் (அல்லது) வாழை இலைகளை நுனி கிழக்கு முகமாக இருக்கும்படி வைத்து நதிக்கரையிலோ திறந்த வெளியிலோ மொட்டை மாடியிலோ கணுப்பிடி வைப்பார்கள் கூடவே பூஜைக்குத் தேவையான வெற்றிலை-பாக்கு பழம் தேங்காய் கரும்புத் துண்டுகள்  மஞ்சள் அட்சதை பூக்கள் ஆகியவை ஒரு தட்டிலும் மற்றொரு தட்டில் ஆரத்தியும் (மஞ்சள் சுண்ணாம்பு குங்குமம் கலந்து கரைத்த நீர்) தயாராக வைத்துக்கொள்வர்காலையில் நல்ல நேரத்தில் இந்தப் பூஜைகளைச் செய்து கற்பூரம் காட்டி  39காக்கைக்கும் குருவிக்கும் கல்யாணமாம் கல்யாணம்39 என்று பாடுவர் இந்தச் சடங்கைச் செய்வதன் மூலம் உடன் பிறந்தவர்கள் நலமுடன் இருப்பர் என்பது நம்பிக்கை  இதைத்தான்  ‘கார்த்திகை எண்ணெயும் கணுப்பழையதும் கூடப் பிறந்தவர்களுக்கு’ என்று பழமொழியாகச் சொல்வதுண்டுபொங்கல் வழிபாடு இத்தோடு நிறைவடைவதில்லை இன்னும் இரு முக்கியமான பண்டிகைகள் உண்டு ஒன்று மாட்டுப் பொங்கல் மற்றொன்று காணும் பொங்கல்  பொங்கல் பானை வைக்க நல்ல நேரம்   காலை 745 லிருந்து 8 40 சூர்ய ஹோரையிலும்  –                                                                                  840  லிருந்து 940 ம் வரையிலுமான சுக்ர ஹோரை  சூரிய வழிபாடு செய்ய உகந்த நேரம்         1110 -1140  சந்திர ஹோரை படைக்கலாம்  

Leave A Reply

Your email address will not be published.