ராகு காலத்தில் தேர்தல் அறிவிப்பு… யாருக்குப் பாதகம், யாருக்கு பலம்? – ஜோதிட அலசல்! #Astrology

0 6

ஒரு நல்ல செயலை அல்லது புதிய முயற்சி ஒன்றை நாம் தொடங்கும்போது நல்ல நேரம் பார்த்தே செய்வார்கள் ஒவ்வொரு நாளும் வரக்கூடிய ராகுகாலம் எமகண்டம் போன்ற நேரங்களில் புதிய முயற்சிகள் எதையும் தொடங்குவதில்லை ஆனால் இந்தியா முழுவதுக்குமான மக்களவைத் தேர்தல் நடைபெறும் தேதியை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் கடந்த 10-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு வெளியிட்டார் ஞாயிற்றுக்கிழமை மாலை 430 மணி முதல் 6 மணி வரையிலான காலம் ராகு காலம் இந்த நேரத்தில் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டதால் பல கட்சிகள் கலக்கத்தில் இருக்கின்றன ஒரு நாளில் சரியில்லாத நேரம் என்று ராகு காலம் மற்றும் எமகண்ட நேரங்களைச் சொல்லுவார்கள் ஜோதிட சாஸ்திரத்தை வகுத்த ரிஷிகள் நவகிரகங்களில் சூரியன் முதல் சனி வரையிலான ஏழு கிரகங்களுக்கு ஏழு நாள்களை ஏற்படுத்தினர் ராகு கேது ஆகிய சாயா கிரகங்களுக்கு நாள்களை ஒதுக்க முடியவில்லை எனவே ஒவ்வொரு நாளும் பகல் 1 மணி 30 நிமிடம் இரவு 1 மணி 30 நிமிடம் என்று ராகு கேதுக்களுக்கு ஒருநாளுக்குத் தலா 3 மணி நேரம் ஒதுக்கித் தந்தனர்ஜாதகத்தில் ராகு கேது என்பவை சர்ப்ப கிரகங்கள் என்பதால் அவற்றை விஷக் காலமாகக் கருதுகின்றனர் அதனால் சுபகாரியங்களுக்கு ஏற்ற காலமாகக் கருதப்படவில்லை இதில் ராகு காலத்தில் எந்தச் செயலையும் செய்யலாம் பாதிப்பு இல்லை எமகண்டத்தில்தான் எந்தக் காரியத்தையும் செய்யக் கூடாது அழிவை நோக்கிப்போகும்ஞாயிற்றுக்கிழமை முதல் சனிக்கிழமை வரை பகல் 12 மணி நேரத்துக்கும் இரவு 12 மணி நேரத்துக்கும் 1 மணி 30 நிமிடம் என்ற கணக்கில் அந்த நாளில் கோள்கள் எந்த வரிசையில் செல்லும் என்பதைக் கணித்து வைத்துள்ளனர் உதாரணமாக ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் 730 மணிவரை உள்ள காலம் அந்த நாளின் கோளான சூரியனுக்கும் அதற்கு அடுத்த ஒரு மணி முப்பது நிமிடத்தை அதாவது 730 மணிமுதல் 9 மணிவரை சந்திரனுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது அதற்கு அடுத்த ஒரு மணி முப்பது நிமிடம் செவ்வாய் அதற்கு அடுத்து புதன் அடுத்து குரு அடுத்து சுக்கிரன் அடுத்து சனி அடுத்து ராகு கேது எனப் பகிர்ந்து கொடுத்தார்கள் ராகு காலத்தில் செய்யப்படும் செயல் எந்த வகையான எதிர்மறை பலன்களை ஏற்படுத்தும் என ஜோதிட நிபுணர் ஆஸ்ட்ரோ கிருஷ்ணனிடம் கேட்டோம் ராகு காலத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டதால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது சில தொகுதிகளுக்கு வேண்டுமானால் தேர்தல் தள்ளிப்போய் சஞ்சலத்தை ஏற்படுத்தலாம் ஒரு சில இடங்களில் குழப்பங்களை உண்டு பண்ணலாம் மற்றபடி வேறு எந்தப் பாதிப்புமிருக்காது மேலும் வேட்புமனுத்தாக்கல் செய்யும்போது நல்ல நேரம் பார்த்துதான் செய்வார்கள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருந்தாலும் அவரவர்களின் சுயஜாதகத்தைப் பொறுத்தே பலன்கள் அமையும் வேட்பாளரின் ஜாதகத்தில் மிதுனத்திலோ தனுசிலோ சூரியன் இருந்தால் மட்டுமே பாதிப்பு ஏற்படும் ராகு காலத்தில் எதையும் செய்யக் கூடாது என்பதற்குக் காரணம் கிரகங்களிடையே ஏற்படும் ஒளிச்சிதறல் மனிதனின் மனதில் தெளிவற்ற நிலையை ஏற்படுத்தும் என்பதால்தான் இது தொன்றுதொட்டு வந்த ஒருவிதமான மூடநம்பிக்கைதான் தமிழ்நாட்டில் காலையில் ஏறுபொழுதில் அதாவது பகல் 12 மணிக்கு முன்பாக திருமணம் செய்வார்கள் ஆந்திராவில் மாலையில் திருமணம் செய்கிறார்கள் இங்கே செவ்வாய்க்கிழமை திருமணம் செய்யமாட்டார்கள் ஆந்திராவில் செவ்வாய்க்கிழமைதான் திருமணம் செய்வார்கள்’’ என்கிறார் அவர்இதே கேள்வியை ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியிடம் கேட்டோம் “ராகு காலம் என்பது எல்லோருக்கும் தீமையைத்தான் செய்யும் என்று சொல்ல முடியாது ஒன்பது கிரகங்களும் நல்லதும் செய்யும் கெட்டதும் செய்யும் ராகு காலம் என்பது சிலருக்கு நல்லதையே செய்யும் அதை அவரவர்களின் ஜாதகத்தில் கிரகங்கள் இருக்கும் நிலை தசா புக்தியில் தற்போது நடக்கும் தசை இவற்றை வைத்தே முடிவு செய்ய முடியும்தேர்தல் நடைபெறும்போது எவருடைய ஜாதகத்தில் ராகு வலுத்திருக்கிறாரோ எவருக்கு ராகு தசையோ ராகு புக்தியோ நடக்கிறதோ அவர்கள் இந்தத் தேர்தல் அறிவிப்பால் நிச்சயம் நற்பலன்களை அடைவார்கள் அந்த அரசியல்வாதிகள் வெற்றி பெறுவார்கள் மைசூர் இளவரசரின் திருமணம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ராகு காலத்தில்தான் நடைபெற்றது ராகு காலம் ராகுலுக்குக் கை கொடுக்குமா மோடிக்குக் கை கொடுக்குமா என்பதை அவரவர்களின் உண்மையான ஜாதகத்தை வைத்துதான் சொல்ல முடியும்’’ என்று கூறினார்  

Leave A Reply

Your email address will not be published.