உலகம் பலவிதம்

0 20

ஏ… செல்பி புள்ள!: காங்கோ நாட்டின் விரங்கா தேசிய உயிரியல் பூங்காவில் வனத்துறை அதிகாரி மேத்யூ சமாவு தனது செல்போனில் செல்பி எடுக்க, அருகிலிருந்து கொரில்லாக்கள் ஒய்யாரமாக போஸ் தருகின்றன.துப்பாக்கி எடு… சுட்டுத்தள்ளு!: அமெரிக்காவின் இண்டியானாபோலீசில் தேசிய ரைபிள் அசோசியேசன் சார்பில் துப்பாக்கி கண்காட்சி நடத்தப்பட்டது. இதில் பல்வேறு நவீன ரக துப்பாக்கிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. ஏஆர்-15 துப்பாக்கியை ஏந்தி  குறிபார்த்து மகிழ்கிறார் பெண் பார்வையாளர் ஒருவர்.இதப்பாத்து மேக்கப்பா…?பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கலை நிபுணர் டேனியல் ஹோர்டேவின் கைவண்ணம் இந்த கண்ணாடி. இருபக்கமும் எலும்பு கூடுகள் பிடித்துக் கொண்டிருக்கும் இந்த முகம் பார்க்கும் கண்ணாடியை அவர் தனது ஸ்டூடியோவில்  வைத்துள்ளார். நிச்சயம் இந்த கண்ணாடியை பார்த்து மேக்கப் செய்து கொள்ள யாருக்குமே மனசே வராது.ஐரோப்பாவில் கோடைக்காலத்தின் நடுவில் ரேப்சீட் மலர்களின் சீசன் தொடங்குவது வழக்கம். ஜெர்மனியின் லெம்மி பகுதியில் மஞ்சள் நிறத்தில் பூத்துக்குலுங்கும் ரேப்சீட் மலர் விவசாய நிலங்களுக்கு நடுவில் ரயில் பயணிப்பது  ரம்மியமாக காட்சி அளிக்கிறது.மியான்மரின் யாங்கோன் நகரில் உள்ள 2500 ஆண்டுகள் பழமையான ஸ்வேதகான் பகோடா புத்தர் கோயில் தங்க கோபுரங்களை கொண்ட பொற்கோயிலாகும். இக்கோயிலில் பிரார்த்தனை செய்ய இளம்பெண்கள் செல்போனில்  புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.