பாதுகாப்பான பயணம் வழங்கும் டாப் 5 கார்கள்

0 10

பயணம் – என கூறும்போது நம்மில் பலருக்கு இனம் புரியாத ஆனந்தம் ஏற்படும். அதேசமயம், குடும்பத்துடன் பயணிப்பது என்பது அலாதியான சந்தோஷத்தை ஏற்படுத்தும். இத்தகைய பயணத்தை வெறுப்பவர்கள் இந்த உலகில்  யாரேனும் இருந்தால் அவர்கள் வேடிக்கையான மனிதர்களாகத்தான் பார்க்கப்படுவார்கள். ஏனென்றால், பயணம் என்பது மன நிம்மதி, சந்தோஷம் உள்ளிட்டவற்றை தரும் இயற்கையின் வரப்பிரசாதம் ஆகும். பெரும்பாலான பயணிகள் சுற்றுலா செல்வதற்கு காரைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். இது, நாம் விரும்பிய இடத்தில் இறங்கி, சுற்றிப்பார்க்க உதவும். அதனால், காரில் பயணிப்பதையே பலர் விரும்புகின்றனர். அவ்வாறு, நாம்  பயன்படுத்தும் கார்கள், எந்த அளவிற்கு நம் பயணத்தை பாதுகாப்பாக மேற்கொள்ள உதவுகிறது எனவும் ஆராயப்பட வேண்டும். ஆகையால், கார் வாங்கும்போது, அந்த கார் எந்த அளவிற்கு பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது என பார்த்து வாங்கவேண்டும். இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து கார்களையும், ‘’குளோபல் என்சிஏபி’’ என்ற  அமைப்பு, கிராஷ் டெஸ்ட் செய்து, அதுகுறித்த தகவலை வெளியிட்டு வருகிறது. அந்த தகவலின் அடிப்படையில், இந்தியாவில் விற்பனையாகும் பாதுகாப்பு நிறைந்த ஐந்து கார்கள் குறித்த தகவலை அந்நிறுவனம்  பதிவுசெய்துள்ளது. அதன் விவரம்:டொயோட்டா எட்டியோஸ் லிவா: இந்த காரை, என்சிஏபி அமைப்பு கடந்த 2016ம் ஆண்டு கிராஷ் டெஸ்ட் செய்தது. அதில், எட்டியோஸ் லிவா கார்கள் 4 ஸ்டார் ரேட்டிங் பெற்று அசத்தியது. அவ்வாறு, இந்த கார் 16 புள்ளிகளுக்கு 13 புள்ளிகளை பெற்றது. மேலும்,  மலிவான விலையில் கிடைக்கும் இந்த காரில் ட்யூவல் ஏர் பேக்ஸ், இபிடி-யுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி மற்றும் ஐசோபிக்ஸ் சைல்ட் சீட் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. இந்த கார், ரூ.5.63 லட்சம் ஆன்ரோடு  விலையில் சென்னையில் விற்பனையாகி வருகிறது.மஹிந்திரா மராஸ்ஸோ:  இந்த கார், பெரியவர்களுக்கான பாதுகாப்பு அம்சத்தில் அதிகபட்சமான 17 புள்ளிகளுக்கு 12.85 புள்ளிகளை பெற்றுள்ளது. சிறியவர்களுக்கான பாதுகாப்பில் அதிகபட்சமான 40 புள்ளிகளுக்கு 22.22 புள்ளிகளை பெற்றுள்ளது. இதன்படி,  பெரியவர்களுக்கான பாதுகாப்பு தரத்தில் 4 ஸ்டார் ரேட்டிங்கும், சிறியவர்களுக்கான பாதுகாப்பு தரத்தில் 2 ஸ்டார் ரேட்டிங்கும் பெற்றுள்ளது. இந்த காரில் இரண்டு ஏர்பேக், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், சீட் பெல்ட் ரிமைன்டர்  உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் உள்ளன. இந்த கார் சென்னையில், ரூ.9.99 லட்சம் ஆன்ரோடு ஆரம்ப விலையில் விற்பனையாகி வருகிறது.மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா: இந்த கார், கிராஷ் டெஸ்டில் நான்கு ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது. அந்த வகையில், இந்த கார், 17 புள்ளிகளுக்கு 12.51 புள்ளிகளை பெற்று அசத்தியுள்ளது. இது, பெரியவர்களின் பாதுகாப்பில் 49-க்கு 17.93 புள்ளிகளையும்,  குழந்தைகளின் பாதுகாப்பில் 2 ஸ்டார் ரேட்டிங்கையும் பெற்றுள்ளது. இந்த காரில் பாதுகாப்பு வசதிகளாக முன்பக்கத்தில் இரண்டு ஏர்பேக், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி உள்ளது. இதைத்தொடர்ந்து, சீல்ட் பெல்ட்  ரிமைண்டர் மற்றும் சைல்ட் ஐசோபிக்ஸ் சீட் ஆகியவை இதில் இணைக்கப்பட்டுள்ளன. இது, ரூ. 7.52 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.போக்ஸ்வேகன் போலோ: இந்தியாவில் மிகவும் பிரபலமான காராக போக்ஸ்வேகன்  போலோ உள்ளது. வாடிக்கையாளர்களை அதிகம் கவரும் காராகவும் இது உள்ளது. அந்த அளவுக்கு இந்த காரில் நிறைய சிறப்பம்சங்கள் உள்ளன. இந்த காரை கிராஷ்  டெஸ்டிற்கு உட்படுத்தியபோது 4 ஸ்டார் ரேட்டிங்கை பெற்று அசத்தியது. இந்த கார் சென்னையில், ரூ.5.72 லட்சம் ஆன்ரோடு ஆரம்ப விலையில் விற்பனையாகி வருகிறது.டாடா  நெக்ஸான்: நாட்டின் முக்கிய வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டாடா நிறுவனம், நெக்ஸான் என்ற எஸ்யூவி ரக கார் மாடலை விற்பனை செய்து வருகிறது. கிராஷ் டெஸ்ட் சோதனையில் இந்த கார், 5-க்கு 5 என்ற பாதுகாப்பு  ரேட்டிங் பெற்று அசத்தியது. 17 புள்ளிகளுக்கு 16.06 என்ற புள்ளிகளை எடுத்து, 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. இதற்கு முன்பாக நடத்தப்பட்ட சோதனையில் 13.56 புள்ளிகளை மட்டுமே இது பெற்றிருந்தது. தற்போது  பெற்றிருக்கும் இந்த ரேட்டிங் டாடா நிறுவனத்தின் மைல் கல்லாக பார்க்கப்படுகிறது. டாடாவின் இந்த சாதனைக்கு பல்வேறு நிறுவனங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளன. இந்த கார் ரூ.6.53 லட்சம் ஆன்ரோடு விலையில்  சென்னையில் விற்பனையாகி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.