டீசல் கார்களை வாங்குவதில் வாடிக்கையாளர்கள் ஆர்வம் குறையாது: வல்லுநர்கள் கணிப்பு

0 12

மும்பை: பி.எஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலானாலும், SUV மற்றும் மினி வேன் உள்ளிட்ட MUV ரக, டீசல் கார்களை வாங்குவதில், வாடிக்கையாளர்கள் ஆர்வம் குறையாது என வல்லுநர்கள் கணித்திருக்கின்றனர். மாசுக் கட்டுப்பாட்டு தர நிர்ணய கொள்கையின்படி, BS எனப்படும் பாரத் ஸ்டேஜ், மாசு உமிழ்வு விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. கடந்த 2017ஆம் ஆண்டு முதல், பி.எஸ்-4 மாசு உமிழ்வு விதிகள், நடைமுறையில் உள்ளன. இந்நிலையில் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் முதல், பி.எஸ்-6 மாசு உமிழ்வு விதிகள், நாடு முழுவதும் அமலாக்க பட உள்ளன.இந்நிலையில் இந்த மாசு உமிழ்வு விதிகளின்படி தான் கார் எஞ்சின்களை தயாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டிருக்கிறது. மிக குறைவான மாசை வெளியேற்ற வேண்டும் என, பி.எஸ் விதிகளுக்கு ஏற்றவாறு, டீசல் எஞ்சின்களை மேம்படுத்தினால், அதிக செலவு பிடிக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த குறிப்பிட்ட பி.எஸ் விதிகளின்படி தயாராகும் என்ஜின்களோடு விற்பனைக்கு வரும் காரின் விலையும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது. பி.எஸ்-6 விதிகள் அமலானாலும், டீசல் என்ஜின்கள் பொருத்தப்பட்ட, எஸ்.யூ.வீ., மினி வேன் உள்ளிட்ட எம்.யூ.வீ கார்களை வாங்குவதையே, வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்புவர் எனவும்  வல்லுநர்கள் கணித்திருக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.