களமிறங்கும் சக்தி வாய்ந்த இரு பைக்குகள்

0 31

இருசக்கர வாகன தயாரிப்பில் ஜாம்பவனாக திகழ்ந்து வரும் ஹீரோ நிறுவனம், அதன் தயாரிப்பில் இரண்டு புதிய மாடல் மோட்டார் சைக்கிள்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது. அந்த வகையில், எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் எக்ஸ்பல்ஸ் 200டி ஆகிய இரண்டு மாடல்களை ஹீரோ நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. எக்ஸ்பல்ஸ் 200 மோட்டார் சைக்கிள் கான்செப்ட் மாடல், கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற இஐசிஎம்ஏ வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து, இந்த மாடலின் உற்பத்தி வெர்ஷனை கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்தது. இதேபோல், டூரிங் மாடலான எக்ஸ்பல்ஸ் 200டி வேரியண்டை, 2018ம் ஆண்டு நடைபெற்ற இஐசிஎம்ஏ வாகன கண்காட்சியில் ஹீரோ நிறுவனம் அறிமுகம் செய்தது. இதைத்தொடர்ந்து, இந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களையும், ஹீரோ நிறுவனம் அவ்வப்போது சாலைகளில் சோதனை செய்து வந்தது. நீண்ட நாட்களுக்கு பின் இந்த இரண்டு இருசக்கர வாகனங்களையும் விற்பனைக்கு வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்விரண்டு மாடல் மோட்டார் சைக்கிள்களும் இம்மாதம் (மே 2019) மாதத்திற்குள் விற்பனைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த இரு மோட்டார் சைக்கிள்களையும் ஒப்பிடுகையில், எக்ஸ்பல்ஸ் 200 மாடலில் சற்று உயரமாக சைலென்சர் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த மோட்டார் சைக்கிளின் முன்பக்கத்தில் 21 இன்ச் கொண்ட ஸ்போக்ஸ் வீலும், பின்பக்கத்தில் 18 இன்ச் கொண்ட ஸ்போக்ஸ் வீலும் பொருத்தப்பட்டுள்ளன. இதேபோல், டூரிங் வெர்ஷனான எக்ஸ்பல்ஸ் 200டி மோட்டார் சைக்கிளில் 17 இன்ச் கொண்ட அலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 30mm-ஆக உள்ளது.ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் 200டி மோட்டார் சைக்கிள்களில், 199.5 சிசி ஏர் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இவ்விரண்டு மோட்டார் சைக்கிள்களின் விலை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை.

Leave A Reply

Your email address will not be published.