புதிய மைல் கல்லை எட்டிய மஹிந்திரா

0 16

மஹாராஷ்டிர மாநிலம் புனேவிற்கு அருகே உள்ள சகான் என்னும் நகரில்,  மஹிந்திரா நிறுவனத்தின் தொழிற்சாலை செயல்படுகிறது.  தற்்்்்போது 10 லட்சம் (1 மில்லியன்) வாகனங்கள் உற்பத்தி என்ற புதிய மைல்கல்லை இந்த பிளாண்ட் தற்போது எட்டியுள்ளது. இந்த தொழிற்சாலை சுமார் 700 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. இங்கு எல்சிவி எனப்படும் இலகு ரக வர்த்தக வாகனங்கள், எக்ஸ்யூவி500, டியூவி300, கேயூவி100 மற்றும் அல்டுராஸ் ஜி4 உள்ளிட்ட கார்கள், 49 டன்கள் வரையிலான கன ரக வர்த்தக வாகனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 பிரீமியம் எஸ்யூவி ரக கார்தான் இந்த  தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட 10 லட்சமாவது வாகனம் ஆகும். அப்டேட் செய்யப்பட்ட புதிய டியூவி 300  கார், சில நாட்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிதில் இருந்த வரவேற்பு தற்போது மஹிந்திரா டியூவி300 காருக்கு இல்லை. என்றாலும், கிராமப்புற பகுதிகளில் இன்னும் ஓரளவிற்கு வரவேற்பு இருக்கவே செய்கிறது. இந்த சூழலில் புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட  உள்ளதால், டியூவி300 காரின் விற்பனை இனி அதிகரிக்கும் என மஹிந்திரா நிறுவனம்  நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறது. இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட உடன் மாருதி சுஸுகி  விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான் உள்ளிட்ட மாடல்களுடன் மஹிந்திரா டியூவி300 பேஸ்லிப்ட் போட்டியிடும். தற்போது சகான் தொழிற்சாலையின் பேஸ்-II விரிவாக்க பணிகளில் மஹிந்திரா நிறுவனம்  ஈடுபட்டுள்ளது. இதன்மூலம், இத்தொழிற்சாலையின் உற்பத்தி திறனை ஒரு ஆண்டுக்கு 7.5 லட்சம்  யூனிட்களாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மஹிந்திரா நிறுவனம் சுமார்  4,500 கோடி ரூபாயை முதலீடு செய்கிறது. அடுத்த தலைமுறை எக்ஸ்யூவி500 கார்  2020ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இனி, இத்தொழிற்சாலை  இன்னும் பிஸி ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.