திருவனந்தபுரம்- ஷார்ஜா விமானத்தில் மாரடைப்பு பயணி பரிதாப சாவு

0 17

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் இருந்து ஷார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் மாரடைப்பால் பயணி இறந்தார். திருவனந்தபுரம் அருகே பாய்ச்சல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார்(56). இவர் ஷார்ஜாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். சமீபத்தில் விடுமுறையில் ஊருக்கு வந்த இவர் நேற்று முன்தினம் மீண்டும் ஷார்ஜா திரும்பினார். திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வழியாக ஷார்ஜா செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் நேற்று முன்தினம் இரவு 8.10 மணியளவில் சந்தோஷ்குமார் பயணம் செய்தார். விமானம் 9 மணியளவில் சென்னையை அடைந்தது. அங்கிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு விமானம் ஷார்ஜா ேநாக்கி புறப்பட்டது. அப்போது திடீரென சந்தோஷ்குமாருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.இதனால் விமானம் திருவனந்தபுரம் திரும்பியது. சந்தோஷ்குமாரை உடனடியாக விமானத்தில் இருந்து கீழே இறக்கி விமான நிலையத்தில் அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி சந்தோஷ்குமார் சிறிது நேரத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனால் பயணிகள் அனைவரும் சோகமடைந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.