பெர்பார்மென்ஸ் கார்களை களமிறக்கும் ஹூண்டாய்

0 16

இந்தியாவில் செயல்திறன்மிக்க கார்களுக்கான வரவேற்பு மெல்ல அதிகரித்து வருகிறது. இதனை மனதில் வைத்து, வர்த்தக விரிவாக்க முயற்சியாக ‘என்’ பிராண்டில் தனது செயல்திறன்மிக்க கார்களை விரைவில் இந்தியாவில் களமிறக்குவதற்கான முயற்சிகளை ஹூண்டாய் மேற்கொண்டுள்ளது. ஹூண்டாய் ‘என்’ பிராண்டில் வர இருக்கும் புதிய கார்கள், சாதாரண கார் மாடல்களைவிட தோற்றத்தில் மிக வசீகரமாகவும், சற்றே கூடுதல் செயல்திறன் பெற்றதாகவும் இருக்கும். அதாவது, மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி அளவுக்கு மிக அதீத செயல்திறன் பெற்ற மாடல்களாக இருக்காது. ஆனால், சிறப்பு ஆக்சஸெரீகளுடன் வெகுவாக கவரும் வகையில் தோற்றத்துடன் இந்த கார்கள் வர இருக்கின்றன.ஏற்கனவே, ‘என்’ பிராண்டு கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்காக வாடிக்கையாளர் சிலரிடம் கருத்துக்கேட்பு படலத்தையும் நிகழ்த்தி இருக்கிறது ஹூண்டாய். இதில், சாதகமான முடிவு கிடைத்துள்ளது. இதையடுத்து, இத்திட்டத்தை செயல்படுத்த முனைந்துள்ளது ஹூண்டாய் நிறுவனம். முதல் மாடலாக, ஹூண்டாய் ஐ30 ‘என்’ கார் வர இருக்கிறது. இந்த காரில் இருக்கும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 278.8 பிஎச்பி பவரையும், 353 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.இந்த செயல்திறன் மிக்க ஹேட்ச்பேக் கார் மாடலானது 0-100 கி.மீ வேகத்தை 6.1 வினாடிகளில் எட்டிவிடும். இந்த கார், வரும் 2020ம் ஆண்டு நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ‘என்’ பிராண்டு மாடல்கள் ‘என்’ பெர்பார்மென்ஸ் மற்றும் ‘என்’ லைன் என்ற இரண்டு மாடல்களில் விற்பனை செய்யப்படுகின்றன. ஐ30 மற்றும் டூஸான் ஆகிய இரண்டு கார்களின் ‘என்’ பிராண்டு கார்கள் விற்பனையில் உள்ளன. இந்த இரண்டு மாடல்களுமே இந்தியாவிற்கு சாத்தியமானதாக கருதப்படுகிறது. விலை விவரம் அறிவிக்கப்படவில்லை.

Leave A Reply

Your email address will not be published.