களம் இறங்கியது க்ளான்சா

0 23

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் ஆவலை தூண்டியுள்ள டொயோட்டா க்ளான்சா கார், இந்தியாவில் ஜூன் 6ம்தேதி விற்பனைக்கு களம் இறங்கியுள்ளது. மாருதி சுஸுகி பலேனோ காரின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன்தான் டொயோட்டா க்ளான்சா. அத்துடன், டொயோட்டா-சுஸுகி கூட்டணியில் வெளிவரும் முதல் காரும் இதுவே. இந்தியாவில் உள்ள டொயோட்டா டீலர்ஷிப்களில், க்ளான்சா காருக்கான முன்பதிவு அதிகாரப்பூர்வமாக துவக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் ₹11 ஆயிரம் முன்பணம் செலுத்தி புக்கிங் செய்து கொள்ளலாம். இந்த காரில் மொத்தம் 2 பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட உள்ளன. அத்துடன் இரண்டு வேரியண்ட்களில் டொயோட்டா க்ளான்சா கார் கிடைக்கும். இதில், டாப் எண்ட் வேரியண்ட்டான வி வேரியண்ட்டில் பல்வேறு வசதிகள் வழங்கப்பட உள்ளன. எல்இடி ஹெட்லேம்ப்ஸ், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ சப்போர்ட் வசதிகளுடன் கூடிய டச் ஸ்கிரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் 16 இன்ச் அலாய் வீல் ஆகியவை குறிப்பிடத்தகுந்த வசதிகள் ஆகும். இந்த காரில், 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட உள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 83 பிஎச்பி பவர் மற்றும் 115 என்எம் டார்க் திறனை உருவாக்கும். இதில், 5 ஸ்பீடு மேனுவல்/சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட உள்ளது. அதே நேரத்தில், 1.2 லிட்டர் டியூயல்ஜெட் ஹைப்ரிட் ஆப்ஷனும் வழங்கப்பட உள்ளது. இது, அதிகபட்சமாக 89 பிஎச்பி பவர் மற்றும் 113 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். இதில், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்பட உள்ளது. பீரிமியம் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டில், ஹோண்டா ஜாஸ், போக்ஸ்வேகன் போலோ மற்றும் ஹூண்டாய் எலைட் ஐ20 உள்ளிட்ட கார்களுடன் டொயோட்டா க்ளான்சா போட்டியிடும். மாருதி சுஸுகி பலேனோவும் இதற்கு போட்டியாளர்தான். 7.25 லட்சம் முதல் 9.25 லட்சம் வரையிலான எக்ஸ் ஷோரூம் விலையில் டொயோட்டா க்ளான்சா எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.