சபரிமலை கோயிலில் நாளை நடை திறப்பு

0 8

திருவனந்தபுரம்: ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்கப்படுகிறது. 21ம் தேதி வரை நடை திறந்திருக்கும். ஆடி மாத பூஜைகளை முன்னிட்டு சபரிமலை நடை நாளை மாலை 5 மணிக்கு திறக்கப்படும். பின்னர் நிர்மால்ய தரிசனம் நடைபெறும். 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை ஐந்து நாட்களும் காலை 5.15 மணி முதல் நெய்யபிஷேகம் நடைபெறும். 21ம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். மீண்டும் நிறைபுத்தரிசி பூஜைகளுக்காக ஆகஸ்ட் 6ம் தேதி நடை திறக்கப்படும்.

Leave A Reply

Your email address will not be published.