ரத்தப் பரிசோதனைக்கு உதவும் விளையாட்டு பொம்மை!

0 8

நன்றி குங்குமம் முத்தாரம் குழந்தைகளுக்கு போர டிக்கிறபோது அந்த வெறுமையை விரட்டுவதற்கு மூன்று நீட்சிகளைக் கொண்ட ஃபிட்ஜெட் ஸ்பின்னர் பொம்மையைக் கையில் வைத்துச் சுற்றி விளையாடுவதை நாம் பார்த்திருப்போம். இப்போது பெரியவர்களும் தங்கள் பதற்றத்தைத் தணிக்க அதை அலுவலகத்தில் வைத்திருப்பதைப் பார்க்கலாம். இந்த சாதாரண விளையாட்டுப் பொருளைப் பயன்படுத்தி ரத்தப் பரிசோதனையை விரை வாகச் செய்ய முடியும் என்று தைவானைச் சேர்ந்த மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.பால் பியரிங்கை மையமாக வைத்துச் சுழலும் அந்த பொம்மையின் மூன்று நீட்சிகளிலும் சிறிய குழாய்களில் ரத்தத்தை  ஊற்றி அடைத்து வேகமாக சுற்றிப் பார்த்தனர் விஞ்ஞா னிகள். நான்கு முதல் ஏழு நிமிடங்கள் வரை இப்படிச் சுற்றியபோது,  ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவும், செல்களும் தனியே பிரிந்து மிதந்தன. இதில் ரத்தப் பரிசோதனைக்குத் தேவையானதை எடுத்து  சோதித்துப் பார்த்ததில் 30 சதவீத பிளாஸ்மா பிரிந்து வந்திருந்தது. அது 99 சதவீத தூய்மையுடன் இருந்தது. இது மருத்துவர்களுக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது.மின்சாரத்தில் இயங்கும் விலை உயர்ந்த மையவிசைச் சுழற்சி மோட்டார்களை வைத்துதான் இதுவரை உலகெங்கும் ரத்தத்தைப் பிரித்து பரிசோதனை செய்துவந்தனர். இதற்காக கணிசமாக ஒரு தொகையையும் வசூலித்தனர். அதே நேரத்தில் ரத்தப் பரிசோதனை மையங்கள் நகரத்தில் மட்டுமே செயல்பட்டு வந்தன.இப்போது எந்தவிதமான வசதியுமில்லாத குக்கிராம மருத்துவமனையில்கூட, இந்த விளையாட்டுப் பொம்மையை ஓர் கருவியாகப் பயன்படுத்தி ரத்தப் பரிசோதனையை விரைவில் நடத்தலாம் என்று ‘அனலிட்டிகல் கெமிஸ்ட்ரி’ என்ற ஆய்விதழ் தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வு மருத்துவ உலகில் பெரும்  பரபரப்பைக் கிளப்பி யுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.