உச்ச நீதிமன்றம் மீது ஆர்எஸ்எஸ் பாய்ச்சல்ராமர் கோயில் விஷயத்தில் இந்துக்களை அவமதிக்கிறது: அவசர சட்டம் இயற்ற கோரிக்கை

0 34

உத்தன்: ‘ராமர் கோயில் வழக்கு விசாரணைக்கு முன்னுரிமை தராமல், இந்துக்களின் உணர்வை உச்ச நீதிமன்றம் அவமதிக்கிறது’ என ஆர்எஸ்எஸ் குற்றம்சாட்டி உள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேசிய செயற்குழு கூட்டம் மகாராஷ்டிராவின் உத்தன் பகுதியில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற பாஜ தேசிய தலைவர் அமித்ஷா, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்து பேசினார். கூட்டம் முடிந்த பின், அமைப்பின் பொதுச் செயலாளர் பையாஜி ஜோஷி அளித்த பேட்டி: ராமர் கோயில் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து மோகன் பகவத்திடம் அமித் ஷா ஆலோசனை நடத்தினார். ராமர் கோயில் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்காக நீண்ட ஆண்டுகளாக காத்திருக்கிறோம். நில பங்கீடு தொடர்பான அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்த மேல்முறையீடு மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த 29ம் தேதி பட்டியலிட்டது. இந்த விஷயத்தில் தீபாவளிக்கு முன்பாக இந்துக்களுக்கு நல்ல செய்தி வரும் என எதிர்பார்த்திருந்தோம்.ஆனால், விசாரணையை ஜனவரி மாதத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்து விட்டது. இந்துக்களின் நம்பிக்கை, உணர்வு சம்மந்தப்பட்ட இந்த விஷயத்துக்கு உச்ச நீதிமன்றம் முக்கியத்துவம் தராதது வேதனையையும் வலியையும் தருகிறது. இதன் மூலம் இந்துக்கள் அவமதிக்கப்பட்டுள்ளனர்.  ராமர் கோயில் தொடர்பாக போராட்டம் நடத்த நாங்கள் தயங்கவில்லை. ஆனால், உச்ச நீதிமன்றத்திற்கு கட்டுப்பட்டு நிற்கிறோம். வேறு வழியே இல்லாத பட்சத்தில், ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக அரசு அவசர சட்டம் இயற்ற வேண்டும். அதற்காக நாங்கள் அரசுக்கு நெருக்கடி தர மாட்டோம். ஒருமித்த கருத்த ஏற்படவே விரும்புகிறோம். சட்டத்திற்கும் அரசியலமைப்புக்கும் நாங்கள் மதிப்பளிப்பதால்தான், தொடர்ந்து தாமதம் செய்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.