கேடிஎம் ட்யூக் 200 ஏபிஎஸ் மாடல்

0 24

ஆரம்ப ரக ஸ்போரட்ஸ் பைக் மார்க்கெட்டில் கேடிஎம் ட்யூக் 200 பைக் அதீத வரவேற்பை பெற்ற மாடலாக விளங்குகிறது. கேடிஎம் ட்யூக் 200 பைக் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் அறிமுகம்  செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில், டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, இரண்டு சக்கரங்களிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இடம்பெற்றிருக்கிறது. இந்த ஏபிஎஸ்  பிரேக்கிங் சிஸ்டம் பாஷ் நிறுவனத்திடமிருந்து கேடிஎம் நிறுவனம் சப்ளை பெறுகிறது. இதன் 199.5சிசி லிக்யூடு கூல்டு இன்ஜின் அதிகபட்சமாக 24 பிஎச்பி பவரையும், 19.6 என்எம் டார்க்  திறனையும் வெளிப்படுத்தும். இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலானது ட்ரெல்லிஸ் பிரேமில் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. முன்புறத்தில்  அப்சைடு டவுன் அமைப்பிலான போர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பர் அமைப்பும் இடம்பெற்றுள்ளது. இந்த பைக்கில் 17 அங்குல சக்கரங்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. முன்சக்கரத்தில் 300 மி.மீ விட்டமுடைய டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 230 மி.மீ டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டு  இருக்கிறது. முதலில் ஆரஞ்சு வண்ண கலவையிலும், பின்னர் வெள்ளை மற்றும் கருப்பு ஆகிய வண்ணத்தேர்வுகளும் வழங்கப்பட்டன. எனினும், ஆரஞ்சு வண்ணத்தேர்வு தொடர்ந்து  வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. அதிக செயல்திறன்மிக்க இந்த பைக்கில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு வசதியாக வழங்கப்படுவது, இந்த பைக்கின் பாதுகாப்பை  மேலும் வலுப்படுத்தும் என நம்பலாம். இந்த மாடலுக்கு ₹1.60 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.