புதிய வண்ணத்தில் பஜாஜ் பல்சர் 150 கிளாசிக்

0 31

பஜாஜ் பல்சர் 150 பைக்கில் கிளாசிக் எடிசன் மாடல் புதிய வண்ணத்தேர்வுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மூன்று புதிய வண்ணத்தேர்வுகள் அறிமுகம்  செய்யப்பட்டு இருக்கிறது. முழுவதுமான கருப்பு, சிவப்பு அலங்காரத்துடன் கருப்பு வண்ணத்தேர்வு மற்றும் சில்வர் வண்ண அலங்காரத்துடன் கருப்பு வண்ணம் என 3 புதிய வண்ணங்களில்  கிடைக்கும். ஹெட்லைட்டுக்கு மேல்புறம், சக்கரம், பக்கவாட்டில் உள்ள ஏர்வென்ட் ஆகிய மூன்று இடங்களில் சில்வர் அல்லது சிவப்பு வண்ணம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர, லோகோவும்,  இருக்கைகளில் தையல்களும் சிவப்பு அல்லது சில்வர் வண்ணத்தில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது, தனித்துவமான பல்சர் 150 மாடலாக வேறுபடுகிறது. இப்புதிய பஜாஜ் பல்சர் 150 கிளாசிக் பைக்கில் 149சிசி ஏர்கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 14 எச்பி பவரையும், 13.4 என்எம் டார்க் திறனையும்  வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் போர்க்குகளும், பின்புறத்தில் கேஸ் சார்ஜ்டு ஷாக் அப்சார்பர்களும் உள்ளன. இந்த  பைக்கில் முன்சக்கரத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 130 மிமீ டிரம் பிரேக்கும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது, பழைய பல்சர் 150 மாடலின் அடிப்படையில் வந்திருப்பதால்,  ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் அவசியப்படாது. ₹65,500 எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.