மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 வெற்றி ரகசியம்

0 40

பிரிமீயம் எஸ்யூவி ரக கார் மார்க்கெட்டில் சந்தைப்போட்டியை அதிகப்படுத்த மிக சிறப்பான மாடலாக மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 காரை களமிறக்கியுள்ளது மஹிந்திரா. இப்புதிய கார்,  டொயோட்டா பார்ச்சூனர், போர்டு எண்டெவர் மாடல்களை போன்று பிரம்மாண்டமாக இருக்கிறது. ஆனால், முரட்டுத்தோற்றமாக இல்லாமல், இது சொகுசு எஸ்யூவி ரக கார்களை போன்று சாப்ட் ரோடர்  எஸ்யூவி ரக மாடலாக மென்மையான தோற்றத்துடன் பிரிமீயமாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இதன் 2.2 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் வாடிக்கையாளர்களை நிச்சயம் சமரசம் செய்யும். இந்த இன்ஜின் 178 பிஎச்பி பவரையும், 420 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த  கார், யூரோ-6 மாசு தர உமிழ்வுக்கு இணையானது. இந்த காரில், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. 2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல்  டிரைவ் சிஸ்டம் ஆப்ஷனிலும் கிடைக்கிறது. டொயோட்டா பார்ச்சூனர், போர்டு எண்டெவர் என்ற இரு ஜாம்பவான்களை கடந்து, மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி ரக காரை வாடிக்கையாளர்கள் தேர்வுசெய்வதற்கு விலை நிர்ணயம்தான்  முக்கிய கருவியாக இருக்கப்போகிறது. டொயோட்டா பார்ச்சூனர் பேஸ் மாடல் ₹27.30 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், போர்டு எண்டெவர் எஸ்யூவி ரக பேஸ் மாடல் ₹26.30 லட்சம்  எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கிறது. மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி ரக காரின் பேஸ் மாடல் ₹20 லட்சம் என்ற சவாலான ஆரம்ப விலையில் வந்தால், நிச்சயம் ஜாம்பவான்களை ஒரு  கை பார்க்க முடியும் என்கிறார்கள் மஹிந்திரா வாடிக்கையாளர்கள். இந்த கார், நிச்சயம் வாடிக்கையாளர்களை கவரும் என்கிறது மஹிந்திரா நிறுவனம்.

Leave A Reply

Your email address will not be published.