வந்தாச்சு அடுத்த ரேஸ் பைக் – யமஹா YZF R3

0 18

இளைஞர்களை கவரும் ரேஸ் பைக் தயாரிப்பு நிரூபணமான யமஹா, தனது அடுத்த தயாரிப்பான யமஹா YZF R3 பைக்கை வரும் நவம்பரில் அறிமுகம் செய்ய இருக்கிறது. சமீபத்தில் யமஹா நிறுவனம் எப்இசட் ரக  பைக்குகளை அறிமுகம் செய்துள்ள நிலையில் தற்போது யமஹா YZF R3 பைக் நவம்பரில் விற்பனைக்கு வரும் என யமஹா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால், யமஹா வாடிகையாளர்கள் மகிழ்ச்சியில்  உள்ளனர். இந்த பைக், யமஹாவின் மற்ற பைக்குகளைவிட டிசைனில் மாறுபட்டுள்ளது. இதன் கூர்மையான முன்பக்க டிசைன், சாய்வான எல்இடி முன்பக்க விளக்கு போன்றவை இந்த பைக்கின் முக்கிய அம்சமாக உள்ளது. இந்த  பைக்கில், இந்திய சாலைகளை கருத்தில் கொண்டு சாதாரண டெலெஸ்கோபிக் போர்க்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கில், மேம்படுத்தப்பட்ட பல இயக்கங்களை கொண்ட தகவல் டிஸ்ப்ளேயில், கியர் பொஸிசன், எரிபொருள் நிலை, நேரம், வெப்பநிலை ஆகியவை தெளிவாக தெரியும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. பைக்  ஓட்டுபவரின் வசதிக்கு ஏற்ப, பெட்ரோல் டேங்க் மிக தாழ்வாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில், அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 321CC இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 41.4 BHP பவரையும், 29.6 NM டார்க்  திறனையும் தருகிறது. மேலும், 6 கியர்களுடன், ஏபிஎஸ் பிரேக் சிஸ்டத்துடன் வருகிறது. மேலும், இதில் டூயல் சைலென்சர் பொருத்தப்பட்டுள்ளது. இதனால், பைக் ஓட்டும்போது புதிய உணர்வை தரும் என்கிறது யமஹா  நிறுவனம். இதற்கு முன் கடந்த 2015ல் இருந்து 2018ம் ஆண்டு வரை உற்பத்தி செய்யப்பட்ட யமஹா YZF R3 பைக்குகளில் ரேடியேட்டர் ஹோஸ் மற்றும் ஸ்பிரிங் டார்சன் ஆகியவற்றில் பாதிப்பு ஏற்பட்டதால் யமஹா நிறுவனம் தானாக  முன்வந்து அதனை சரிசெய்தது. அந்த தவறு, இம்முறை நடந்துவிடக்கூடாது என கச்சிதமாக புதிய யமஹா YZF R3 பைக்கை வடிவமைத்துள்ளனர். இந்த பைக், தற்போது விற்பனையாகும் YZF R3 மாடலின் விலையை விட  ரூபாய் 10,000 முதல் 15,000 வரை கூடுதலாக இருக்கும் என யமஹா நிறுவனம் அறிவித்துள்ளது. ஆர்.எக்ஸ் 100 முதல் FZ பைக் வரை இளைஞர்களிடையே வெற்றிநடை போட்டுவரும் யமஹா நிறுவனம் யமஹா YZF-R3  பைக் விற்பனையிலும் தனது தரத்தை நிருபித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.