காதலர் தினத்தில் கால் பதிக்கும் ‘மஹிந்திரா எக்ஸ்யூவி 300’

0 18

மஹிந்திரா நிறுவனத்தின் புதிய ‘மஹிந்திரா எக்ஸ்யூவி 300’ வரும் பிப்ரவரி 14ம் தேதி விற்பனைக்கு வருகிறது. மஹிந்திரா நிறுவனத்தின் குவான்டோ, டியூவி 300, நுவோஸ்போர்ட் போன்ற எக்ஸ்யூவி ரக கார்களின்  வரிசையில் தனது 4வது தயாரிப்பான மஹிந்திரா எக்ஸ்யூவி 300 காரினை விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது. இந்த காருக்கு முதலில் எஸ்201 என பெயரிடப்பட்டது பின்னர், மஹிந்திரா நிறுவனம், எக்ஸ்யூவி 300 என  பெயர் மாற்றி அறிமுகம் செய்தது. இது, சாங்யாங் டிவோலி காரின் டிசனை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.இந்த காரில் அசத்தலான இன்டீரியர் அமைப்புடன், மிக நேர்த்தியான டிசைனிங் மற்றும் நவீன  தலைமுறையினர் விரும்பும் பல்வேறு வசதி உள்ளது. குறிப்பாக, 4 மீட்டருக்கு குறைந்த நீளத்தை பெற்றதாக வந்துள்ள இந்த மாடலில், இடம்பெற உள்ள தொடுதிரை இன்போடெயின்மென்ட் சிஸ்டத்தில் புளூடூத் தொடர்பு, வாய்ஸ் கமான்ட், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு  ஆட்டோ உள்ளிட்ட வசதிகளும் உள்ளன. இதன் 4 டயர்களுக்கும் டிஸ்க் பிரேக் வசதி உள்ளது. 7 பாதுகாப்பு ஏர் பேக் உள்ளது. நீண்ட வீல் பேஸ் மற்றும் புதிய சக்தி வாய்ந்த இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. போர்டு ஈக்கோ  ஸ்போர்ட், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் டாட்டா நெக்ஸான் ஆகிய கார்களுக்கு போட்டியாக களம் இறங்குகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரு தேர்வுகளில் கிடைக்கிறது. இந்த மாடல், 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும்  1.5 லிட்டர் டீசல் இன்ஜினுடன் வருகிறது. இரு இன்ஜின்களிலும் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் விலையில் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.