அசத்தலான டாடா ஹாரியர் அறிமுகம்

0 20

கடந்த ஆண்டு நடந்த சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில், டாடா எச்5எக்ஸ் என்ற பெயரில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த எஸ்யூவி ரக கான்செப்ட் கார் இப்போது டாடா ஹாரியர் என்ற பெயரில் தயாரிப்பு நிலை மாடலாக  வந்துள்ளது. இப்புதிய கார், லேண்ட்ரோவர் நிறுவனத்தின் டி-8 பிளாட்பார்மின் அடிப்படையிலான ஒமேகா பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.   இது, 4,598 மி.மீ நீளமும், 1,894 மி.மீ அகலமும், 1,706 மி.மீ உயரமும்  கொண்டதாக உள்ளது. 2,741 மி.மீ வீல் பேஸ் பெற்றிருக்கிறது. 5 சீட்டர் மாடலாக வந்திருக்கும் இப்புதிய கார், சிறப்பான உட்புற இடவசதியை அளிக்கிறது. இந்த காரில் 425 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதி உள்ளது.  50 லிட்டர் கொள்ளளவு உடைய பெட்ரோல் டேங்க் உள்ளது. இந்த காரில், 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 138 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் 2  வீல் டிரைவ் சிஸ்டத்தில் மட்டுமே வந்துள்ளது. அதேநேரத்தில், டெர்ரெயின் ரெஸ்பான்ஸ் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. சிட்டி, ஸ்போர்ட் மற்றும் ஈக்கோ ஆகிய மூன்று டிரைவிங் மோடு கொடுக்கப்பட்டுள்ளன. 8.8 அங்குல  தொடுதிரையுடன்கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஜேபில் நிறுவனத்தின் 9 ஸ்பீக்கர் கொண்ட மியூசிக் சிஸ்டம் உள்ளது. இந்த இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும்  ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகிய செயலிகளையும், ஸ்மார்ட்போன் மிரர் லிங்க் இணைப்பு வசதியையும் வழங்கும். இந்த காரில் மல்டி பங்ஷன் ஸ்டீயரிங் வீல், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, ஆட்டோமேட்டிக் ஹெட்லைட், ஆட்டோமேட்டிக் வைப்பர், க்ரூஸ் கன்ட்ரோல், ஓட்டுனர் இருக்கைய அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் வசதி,  7.0 அங்குல திரையுடன்கூடிய செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இந்த காரில், 6 ஏர்பேக், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஹில் ஹோல்டு மற்றும் டிசென்ட் அசிஸ்ட்,  ரோல்ஓவர் மிட்டிகேஷன், கார்னர் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம் மற்றும் எலெக்ட்ரானிக் டிராக்க்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகிய பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன. XE, XM, XT மற்றும்  XZ ஆகிய நான்கு வேரியண்ட்டுகளில் வெளிவருகிறது. ரூ.12.69 லட்சம் முதல் ரூ.16.25 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. இந்த ஆண்டிலேயே இதன் 7 சீட்டர் மாடலும் விற்பனைக்கு வர இருப்பது  குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.