ஏப்ரல் மாதத்தில் 5ஜி வசதி கொண்ட ஸ்மார்ட் போன்கள் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என தகவல்

0 31

புதுடெல்லி: வரும் ஏப்ரல் மாதத்தில் 5ஜி வசதி கொண்ட ஸ்மார்ட் போன்கள் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் மற்றும் எல்.ஜி. நிறுவனங்கள் 5ஜி வசதியுடன் கூடிய மொபைல் போன்களை தயாரித்துள்ளன. அண்மையில் சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எஸ்10(Galaxy S10) மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இதில் 4ஜி மற்றும் 5ஜி என இரண்டு மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இந்த ஸ்மார்ட்போன் தொழில்நுட்ப மாநாடுகளில் காட்சிப்படுத்தப்பட்டாலும் இன்னும் இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான விற்பனையை தொடங்கவில்லை. இந்த நிலையில், 5ஜி கேலக்ஸி எஸ்10 மாடல் ஸ்மார்ட்போனானது வரும் ஏப்ரல் மாதம் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. அதேபோல் எல்ஜி நிறுவனமும் 5ஜி வசதி கொண்ட வி50 திங்க் (V50 ThinQ) மாடலை ஏப்ரல் மாதம் மத்தியில் வெளியிடும் என்று எதிர்பார்க்கபடுகிறது. தொலைத்தொடர்புத்துறையில் அடுத்த மிகப்பெரிய வளர்ச்சி என்றால் அது 5ஜிதான். எனவே, 5ஜி தொழில்நுட்பமானது உரிய நேரத்தில் வருமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால் இந்தியாவில் 5ஜி இணையதள சேவை இன்னும் அமலுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.