தென் கொரியாவுக்குள் கால்பதித்த வடகொரிய அதிபர் – முடிவுக்கு வருமா 65 ஆண்டு பனிப்போர்?

0 12

கொரிய போர் நடைபெற்று 65 ஆண்டுகளுக்குப் பின்னர், முதல்முறையாக வட கொரிய அதிபர் தென் கொரியா சென்றுள்ளார். இது, வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வாகக் கருதப்படுகிறது.

கொரிய போருக்குப் பிறகு, தற்போது வரை இரு நாடுகளுக்கும் இடையே பனிப்போர் தொடர்ந்து நடைபெற்றுவந்தது. வடகொரிய அதிபராக கிம் ஜாங் உன் பதவியேற்ற பிறகு, மீண்டும் கொரியப் போர் உருவாகும் என்ற அபாயம் ஏற்பட்டது. ஏனெனில், வடகொரியாவின் அணு ஆயுதச் சோதனையால் உலக நாடுகள் மிரண்டன. இந்தச் சோதனை, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை மிகவும் பாதித்தது. வடகொரியாவின் இந்தச் செயலுக்கு, ஐ.நா நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துவந்தன. மேலும், வடகொரியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன் வடகொரிய அதிபர், இனி அணு ஆயுதச் சோதனை நடத்தப்போவதில்லை எனக் கூறினார். இந்த முடிவு, கொரிய நாடுகளின் நலனை கருத்தில்கொண்டு எடுக்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தார். இதற்கு, அனைத்து நாட்டுத் தலைவர்களும் வரவேற்பளித்திருந்தனர்.

இந்நிலையில் 1953-ம் ஆண்டு நிறைவடைந்த கொரிய போருக்குப் பின்னர், சுமார் 65 ஆண்டுகளுக்குப் பிறகு தென் கொரியா எல்லைக்குள் சென்றார், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன். இந்தச் சந்திப்பு, வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வாகக் கருதப் படுகிறது. தென் கொரியாவின் எல்லைக்கே சென்று, அந்நாட்டு அதிபர் மூன் ஜியே இன், வட கொரிய அதிபரை வரவேற்றார். வட மற்றும் தென் கொரியாவின் எல்லைக் கோடுகளாகக் கருதப்படும் கான்கிரீட் சுவர் பகுதியில் இரு நாட்டு அதிபர்களும் கை குலுக்கிக்கொண்டனர். அதன் பின்னர், கான்கிரீட் சுவரைக் கடந்து, வட கொரிய அதிபர் தென் கொரியவுக்குள் சென்றார். பிறகு, தென் கொரிய அதிபரை ஜிம் ஜாங் உன், தன் நாட்டு எல்லைக்குள் கைப்பிடித்து அழைத்துச்சென்றார். அதைத் தொடர்ந்து, அங்கிருந்த வருகைப் பதிவேட்டில், “புதிய வரலாறு தற்போது தொடங்கியுள்ளது. நாங்கள் தற்போது சமாதானத்தின் தொடக்கத்தில் உள்ளோம்.” என எழுதினார். தொடர்ந்து, தென் கொரியாவின் ராணுவ மரியாதையை இரு நாட்டு அதிபர்களும் ஏற்றனர். இரு தலைவர்களின் ஆலோசனைக்குப் பின்னர், விருந்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்த சந்திப்பு, இரு நாடுகளின் உறவை மேம்படுத்தும் என நம்பப்படுகிறது. சர்வதேச உச்சி மாநாடு பற்றிய இறுதி விவரங்கள் வெளியாகியுள்ள நிலையில், இவர்களின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. வரும் மே மாதத்தில், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Credits : ZDF Morgenmagazin

Historisch, was in diesen Stunden an der Grenze zwischen #Nordkorea und #Südkorea passiert: Erstmals seit dem Korea-Krieg hat mit #KimJonUn ein nordkoreanischer Staatschef die Grenze zum Süden übertreten. pic.twitter.com/apACQoNFHm

— ZDF Morgenmagazin (@morgenmagazin) April 27, 2018

Leave A Reply

Your email address will not be published.