உலகில் சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியல் வெளியீடு; மோடிக்கு எத்தனையாவது இடம்?

0 13

உலகின் சக்தி வாய்ந்த மனிதர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டிருக்கிறது. முதல் 10 இடங்களுக்குள் பிரதமர் மோடி இடம்பெற்றிருக்கிறார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்திருக்கிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங். இதனால் ரஷ்ய அதிபருக்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.

அமெரிக்காவின் பிரபல இதழான ஃபோர்ப்ஸ், வர்த்தகம், தொழில், முதலீடு, விற்பனை, உடல்நலம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களைத் திறமைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து பட்டியல் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், 2018-ம் ஆண்டுக்கான உலகின் சக்தி வாய்ந்த தலைவர்கள் பட்டியலை இன்று வெளியிட்டிருக்கிறது.

உலகின் மிகவும் சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியலில் 75 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில், ஒன்பதாவது இடத்தைப் பிரதமர் மோடி பிடித்திருக்கிறார். உலகில் இரண்டாவது மக்கள் தொகையைக்கொண்ட இந்தியாவில், ‘மிகவும் பிரபலமான மனிதராக மோடி திகழ்கிறார் என்றும், கடந்த 2016-ம் ஆண்டில் கறுப்புப் பணம் மற்றும் ஊழலுக்கு ஏதிராக மோடி அரசு எடுத்த நடவடிக்கைகள் துணிச்சலானது என்றும், பிரதமர் மோடியின் செயல்பாட்டுக்கு புகழாரம் சூட்டியுள்ளது ஃபோர்ப்ஸ். மேலும், ஃபேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸக்கர்பெர்க் 19 வது இடத்தையும் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே 14 வது இடத்தையும் பிடித்திருக்கிறார்கள்.

`உலகில், கிட்டத்தட்ட 7.5 பில்லியின் மனிதர்கள் உள்ளனர். ஆனால், இந்த 75 இடங்களைப் பிடித்திருக்கும் தலைவர்கள், உலகை மாற்றியமைக்கும் சக்தியைக் கொண்டுள்ளனர்’ என ஃபோர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.