தேர்தல் நாளில் நீண்ட நேரம் பூஜை செய்த பிரதமர் மோடி!

0 46

அரசு முறை பயணமாக நேபாளம் சென்றுள்ள பிரதமர் மோடி காத்மாண்டு அருகிலுள்ள முக்திநாத் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேபாளம் சென்றுள்ளார். நேற்று காலை ஜானக்பூர் விமான நிலையம் சென்றடைந்த அவரை நேபாள ராணுவ மந்திரி ஈஸ்வர் போக்ரெல் வரவேற்றார். அதன்பின் சீதையின் பிறப்பிடமாகக் கருதப்படும் ஜானக்பூரில் உள்ள ஜானகி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின் ஜானக்பூர் நகரின் வளர்ச்சிக்காக ரூ.100 கோடி நிதி உதவி அறிவித்தார். இதைத் தொடர்ந்து இன்று காலை காத்மாண்டு அருகில் உள்ள முக்திநாத் கோயிலுக்குச் சென்று ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து பிரார்த்தனை செய்து வந்தார். இதற்காகக் கோயிலில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

`இன்று கர்நாடகாவில் நடைபெறும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே பிரதமர் மோடி நேபாளத்தில் பூஜை செய்கிறார்’, என்றும் `அவருக்குத் தோல்வி பயம் வந்துவிட்டது’ என்றும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்ஸ் விமர்சித்து வருகின்றனர்.

#WATCH Prime Minister Narendra Modi offered prayers at #Nepal’s Muktinath Temple. pic.twitter.com/ZwixAllkiW

— ANI (@ANI) May 12, 2018

Leave A Reply

Your email address will not be published.