பிரான்ஸில் மாயமான இன்டர்போல் தலைவர்! – சர்வதேச அளவில் பரபரக்கும் விசாரணை

0 30

சர்வதேச அளவில் செயல்படும் இன்டர்போல் அமைப்பின் தலைவர் மெங் ஹாங்க்வி (Meng Hongwei) மாயமானது குறித்து பிரெஞ்சுப் போலீஸார் விசாரணையைத் தொடங்கியிருக்கிறார்கள் சர்வதேச அளவில் நடைபெறும் விசாரணைகளுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இன்டர்போல் (Interpol) அமைப்பின் தலைவராக சீனாவைச் சேர்ந்த மெங் 2016-ம் ஆண்டு நவம்பரில் தேர்வு செய்யப்பட்டார் சீனா அரசில் இணை அமைச்சராகப் பதவி வகித்துவரும் மெங் இன்டர்போல் அமைப்பின் தலைவராக வரும் 2020-ம் ஆண்டு வரை பதவி வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது இன்டர்போல் அமைப்பின் தலைவராக 4 ஆண்டுகள் பதவி வகிக்கும் சீனாவைச் சேர்ந்த முதல் நபர் என்ற பெருமையை அவர் பெற்றிருந்தார் அதேபோல் அவர் பதவியேற்றபோது சீன அரசில் அவருக்குள்ள தொடர்புகளைச் சுட்டிக்காட்டி பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் கலகக் குரல் எழுப்பியிருந்தன பிரான்ஸின் லியான் நகரின் மனைவி மற்றும் குழந்தைகளுடன் அவர் வசித்து வந்தார் இந்தநிலையில் தன் கணவரைக் காணவில்லை என மெங்கின் மனைவி பிரான்ஸ் போலீஸாரிடம் புகார் அளித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன இதுகுறித்து விசாரணையைத் தொடங்கியிருப்பதாகப் பிரான்ஸ் போலீஸார் தெரிவித்துள்ளனர் `சீனாவில் உள்ள தனது சொந்த ஊருக்குச் செல்வதாகக் கூறி கடந்த செப்டம்பர் 29-ல் புறப்பட்டுச் சென்ற மெங்கிடமிருந்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை’ என்று அவரின் குடும்பத்தினர் தெரிவித்திருக்கிறார்கள் அதேநேரம் மெங் மாயமானது குறித்து இன்டர்போல் தரப்பிலிருந்து இதுவரை எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது  

Leave A Reply

Your email address will not be published.