மேக்ரோ எகனாமிக்ஸ் ஆய்வு… பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை வென்ற அமெரிக்க ஆய்வாளர்கள்

0 28

2018-ம் ஆண்டின் பொருளாதாரத்கான நோபல் பரிசு அமெரிக்க பொருளாதார நிபுணர்களான பால் எம் ரோமர் (வயது 62) வில்லியம் நொர்தாஸ் (வயது 77) இருவருக்கும் கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளதுஆரோக்கியமான பொருளாதார வளர்ச்சியைப் பொருளாதார வல்லுநர்கள் எவ்வாறு எட்டுவது என்பது குறித்த ஆய்வுக்காக பால் எம் ரோமரும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சேதம் குறித்த ஆய்வுக்காக வில்லியம் டி நொர்தாஸும் இந்த ஆண்டுக்காக பொருளாதார நோபல் பரிசைப் பெற்றுள்ளார்கள் உலகளாவிய பெரிய பிரச்னைகளை மேக்ரோ எகனாமிக்ஸ் மூலம் சமாளிக்க அவர்கள் எடுத்த முயற்சிக்காக இருவருக்கும் கூட்டாக நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் பரிசுக் கமிட்டி அறிவித்துள்ளது நோபல் பரிசை வென்றுள்ள வில்லியம் நொர்தாஸ் யேல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராவார் பால் எம் ரோமர் உலக வங்கியின் முன்னாள் தலைமைப் பொருளாதார நிபுணராக இருந்துள்ளார் கடந்த ஆண்டுக்கான நோபல் பரிசை அமெரிக்கரான ரிச்சர்ட் தலெர் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது நோபல் பரிசு பெற்றுள்ள இருவரும் 101 மில்லியன் டாலர் பரிசுத்தொகையைப் பகிர்ந்துகொள்கிறார்கள் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட 1969-ம் ஆண்டிலிருந்து 2017-ம் ஆண்டுவரை 79 பேர் இப்பரிசை வென்றுள்ளார்கள் 

Leave A Reply

Your email address will not be published.