இஸ்ரேல் – பாலஸ்தீன நாடுகளின் 100 ஆண்டுச் சிக்கல்.. விதை போட்ட `பால்ஃபர் தீர்மானம்’!

0 16

சமகால உலக வரலாற்றில் இஸ்ரேல் பாலஸ்தீனம் என்கிற இருநாட்டுப் பெயர்களைச் சுற்றி அன்றாடம் பல செய்திகள் நிறைந்திருப்பதை நம்மால் பார்க்கமுடியும் கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த இரண்டு தேசங்களுக்கு இடையேயான சிக்கல் நெருப்பாக இன்றுவரை எரிந்துவருகிறது ஆனால் இதற்கான விதையைத் தூவியது சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட ஒரு கடிதம் `பால்ஃபர் தீர்மானம்39 (Balfour Declaration) என்கிற பெயரில் 1917-ம் ஆண்டு நவம்பர் 2-ம் தேதி வெளியிடப்பட்டுப் பிரகடனம் செய்யப்பட்ட அந்தக் கடிதம்தான் இஸ்ரேல் – பாலஸ்தீனச் சிக்கலின் தொடக்கப்புள்ளியாக இருந்ததுஉலக வரைபடத்தில் இரண்டாம் உலகப் போருக்கு முன்பாக இஸ்ரேல் என்கிற ஒரு தேசம் கிடையாது பாலஸ்தீனம் உலகப்போர்வரை துருக்கி ஒட்டமான் பேரரசின்கீழும் அதன்பின்னர் 1948 வரை பிரிட்டனின் காலனியாகவும் இருந்துவந்தது இங்கு இரண்டு விஷயங்களை நினைவுகூர்வது அவசியம் ஒன்று இதே காலகட்டத்தில் யூதர்கள் சந்தித்த ஒடுக்குமுறைகள் மற்றொன்று பிரிட்டன் அமெரிக்காவில் யூதர்களுக்கு இருந்த செல்வாக்கு20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஐரோப்பாவில் யூத வெறுப்புஉணர்வு (Anti-Semitism) மேலோங்கி இருந்த காலகட்டத்தில் யூதர்கள் பல நாடுகளிலும் ஒடுக்குமுறையைச் சந்தித்தனர் குறிப்பாக ஜெர்மனியில் ஹிட்லரின் எழுச்சிக்குப் பிறகு `ஹோலோகாஸ்ட்39 (யூதர்கள் இனப்படுகொலை) தீவிரமடைந்ததுஅதே சமயத்தில் அமெரிக்கா பிரிட்டன் போன்ற நாடுகளில் வசித்துவந்த யூதர்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருந்தாலும் அந்தந்த நாடுகளின் சமூகச் சூழலிலும் அரசியலிலும் ஆதிக்கம் செலுத்தக்கூடிய வலுவான நிலையில் இருந்தனர் யூதர்கள் செல்வாக்கு பொருந்தியவர்களாக இருந்தபோதிலும் பல்வேறு நாடுகளிலும் சிதறி இருந்தனர் யூதர்களுக்கு அவர்களுக்கெனச் சொந்த நாட்டை உருவாக்க வேண்டும் என்கிற எண்ணம் இருந்துவந்ததுஇதே காலகட்டத்தில் `யூதர்களுக்கான ஒரு நாட்டை உருவாக்க வேண்டும்39 என்கிற நோக்கத்தில் தியோடர் ஹெர்சல் என்பவரால் ஜியோனிச அமைப்பு 1896-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது அதற்கான இடமாக பாலஸ்தீனம் தேர்வு செய்யப்பட்டிருந்ததுஅந்த நேரத்தில் முதலாம் உலகப் போர் முடிவுறும் சமயத்தில் ஒட்டமான் சாம்ராஜ்ஜியம் வீழ்ந்து பாலஸ்தீனப் பகுதி பிரிட்டனின் ஆட்சியின்கீழ் வந்தது அப்போது பிரிட்டனின் வெளியுறவுச் செயலாளராக இருந்த ஆர்த்தர் பால்ஃபர் பிரிட்டன் யூதர்களின் பிரதிநிதிகளில் ஒருவராக இருந்த வால்டர் ராத்ஷில்ட் என்பவருக்குக் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்அதில் “பாலஸ்தீனத்தில் யூதர்களுக்குத் தாய்நாட்டை உருவாக்கித் தர வேண்டும் என்கிற யூத ஜியோனிச இயக்கத்தின் கோரிக்கைக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது இந்த லட்சியத்தை அடைவதற்கான அனைத்து உதவிகளையும் பிரிட்டன் செய்து கொடுக்கும்” என்று எழுதியிருந்தார் அதுவே பிரிட்டன் அரசின் பாலஸ்தீனத்துக்கான கொள்கையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது இந்தக் கடிதம்தான் பின்னர் நிகழ்ந்த பெரும் பிரச்னைகளுக்கு வினையூக்கியாகவும் இருந்ததுஇந்த பால்ஃபர் தீர்மானம் குறித்து பிரிட்டன் பத்திரிகையாளர் ஆர்த்தர் கோயெஸ்ட்லர் குறிப்பிடுகையில் “ஒரு நாடு (பிரிட்டன்) தனக்கு முற்றிலும் தொடர்பில்லாத அந்நிய நிலத்தில் (பாலஸ்தீனம்) புதிய தேசம் (இஸ்ரேல்) ஒன்றை உருவாக்கித் தருவதாக உறுதியளித்தது” என்றார்இந்த ஒப்பந்தத்தைப் பற்றி பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் முகமது அப்பாஸ் குறிப்பிடுகையில் “பால்ஃபர் தனக்குச் சொந்தம் இல்லாத ஒரு நிலத்தை அந்நிலத்தில் ஏற்கெனவே வசித்துவந்தவர்களின் உரிமைகளைப் புறக்கணித்து மற்றொருவருக்குச் சொந்தமாக்கித் தருவதாகச் சத்தியம் செய்துகொடுத்தார் அதற்கான விலையை நூறு ஆண்டுகள் கடந்தும் நாங்கள் இன்னமும் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்” என்றார்1917 முதல் 1948 வரை பாலஸ்தீனம் பிரிட்டன் கட்டுப்பாட்டில் இருந்தது இந்த இடைப்பட்ட காலத்தில்தான் யூதர்கள் பாலஸ்தீனத்தில் குடியேறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன பின்னாளில் இஸ்ரேல் என்கிற தேசம் உருவாவதற்கும் `பாலஸ்தீனப் பகுதியை இரண்டாகப் பிரிக்க வேண்டும்39 என ஐநாசபை தீர்மானம் நிறைவேற்றியதற்கும் இந்த பால்ஃபர் தீர்மானம் காரணமாக அமைந்தது 1948-ம் ஆண்டு மே 14-ம் தேதி பிரிட்டன் அதிகாரபூர்வமாக பாலஸ்தீனிலிருந்து வெளியேறியது அதற்கு அடுத்த நாளே இஸ்ரேல் என்கிற தேசம் உருவாவதாக அறிவிக்கப்பட்டதுபால்ஃபர் எழுதிய அந்தக் கடிதத்தில் உள்ள மற்றுமொரு வாக்கியத்தையும் இங்கு நினைவுகூர வேண்டியிருக்கிறது அது “பாலஸ்தீனத்தில் வசிக்கும் யூதரல்லாத சமூகத்தினரின் சிவில் மற்றும் மத உரிமைகளுக்கு ஊறு விளைவிக்கும் எந்த ஒரு செயலையும் செய்யக் கூடாது” என்பதே ஆனால் 1947-1949-ம் ஆண்டு இடைப்பட்ட காலத்தில் 750000 பாலஸ்தீனியர்கள் அகதிகளாக வெளியேற்றப்பட்டனர்தற்போது 70 ஆண்டுகளுக்கும் மேலாகக்கூட அண்டை நாடுகளின் அகதிகள் முகாமில் லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் வசித்து வருகின்றனர் இஸ்ரேல் ஐநா தீர்மானத்தின்படி தனக்குக் கொடுக்கப்பட்ட எல்லைகளையும் மீறி ஆக்கிரமித்து வைத்துள்ள நிலத்தின் மீதும் உரிமை கொண்டாடி வருகிறது இரு நாடுகளுக்கும் இடையேயான சிக்கல் தீர்வில்லாமல் இன்றுவரை தொடர்ந்து வருகிறதுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் பால்ஃபர் எழுதிய கடிதத்தின் மூலம் பற்றவைக்கப்பட்ட சிறு தீப்பொறி எரிதணலாய் இன்றுவரை எரிந்துகொண்டிருக்கிறது அதன் விளைவை அவர் யோசித்திருப்பாரா என்பது தெரியவில்லை ஆனால் அதற்கான விலை இந்த நொடிவரை கொடுக்கப்பட்டு வருகிறது2017-ம் ஆண்டு `பால்ஃபர் பிரகடன39த்தின் நூற்றாண்டைக் கொண்டாட பிரிட்டன் இஸ்ரேல் முடிவெடுத்திருந்த நேரத்தில் பாலஸ்தீனியர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து துக்கம் அனுஷ்டித்தனர் `பால்ஃபர் தீர்மானத்துக்காக பிரிட்டன் மன்னிப்பு கேட்க வேண்டும்39 எனப் பாலஸ்தீன மக்கள் விடுத்த கோரிக்கையை பிரிட்டன் பிரதமர் தெரேசா மே மறுத்துவிட்டார் `இஸ்ரேல்39 என்கிற தேசத்தில் பாலாறும் தேனாறும் ஓடுவதாக அமெரிக்காவும் அந்த நாட்டு அதிபர் ட்ரம்பும் புகழலாம் ஆனால் அந்த நாடும் அதன் வரலாற்றுப் பக்கங்களும் ரத்தக் கறைகளால் நிறைந்திருக்கின்றன என்பதற்கு வரலாறே சான்றாக நின்றுகொண்டிருக்கிறது

Leave A Reply

Your email address will not be published.