`மெதுவாகப் பிடி இறுகும்’ – இரானை எச்சரிக்கும் ட்ரம்ப்!

0 18

கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகாலமாக தொடரும் இரான் – அமெரிக்க இடையிலான சண்டை ட்ரம்ப் அதிபர் ஆன பிறகு உச்சத்தைத் தொட்டு வருகிறது அதிபராக ட்ரம்ப் வந்ததும் இரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா விலகியது இதேபோல் முஸ்லிம் அதிகம் வாழும் நாடுகளிலிருந்து அமெரிக்கா வருபவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது ஆனால் பின்னர் தடை நீக்கப்பட்டது மேலும் இரான் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று அறிவித்ததுடன் உலக நாடுகளும் இரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக் கூடாது மீறிச் செய்யும் நாடுகள் மீதும் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று எச்சரித்தது இதனால் இரு நாட்டு அதிபர்கள் மத்தியிலும் வார்த்தைப் போர் உருவானது இரான் அதிபர் ஹஸன் ரவுகானியும் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டனர் இதற்கிடையே கடந்த 4-ம் தேதி அதிகாரபூர்வமாக இரான் மீது பொருளாதாரத் தடையை விதித்தது அமெரிக்கா இரானிடமிருந்து அதிக அளவில் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடு இந்தியா அமெரிக்காவின் திடீர் பொருளாதாரத் தடையால் இரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி குறைக்க முடிவு செய்தது அதேநேரம் இந்தியாவுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் அமெரிக்காவுக்குக் கோரிக்கை விடுத்தது மத்திய அரசு இந்த நிலையில்தான் தற்போது இரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்துகொள்ள இந்தியா சீனா உள்ளிட்ட எட்டு நாடுகளுக்குத் தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த ட்ரம்ப் `இரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை முழுவதுமாக முடக்குவதே திட்டம் ஆனால் அவ்வாறு செய்தால் சர்வதேசச் சந்தையில் பொருளாதார பாதிப்பு ஏற்படும் கச்சா எண்ணெய் விலையைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியாது இதன்காரணமாகவே இந்த எட்டு நாடுகளுக்கு எண்ணெய் இறக்குமதியில் விதி விலக்கு அளிக்கப்படுகிறது எனினும் இரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் மெதுவாகப் பிடி இறுகும் எனக் கூறியுள்ளார்

Leave A Reply

Your email address will not be published.