“ரூ.600 கோடி மதிப்பிலான தீப்பெட்டி உற்பத்தி பாதிப்பு’ – கஜா புயலால் உற்பத்தியாளர்கள் கலக்கம்

0 19

கஜா புயலால் தீக்குச்சி தயாரிக்கப் பயன்படும் மரத்தடிகளின் வரத்து பாதிப்பு மற்றும் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக கடந்த 2 வாரங்களாக தீப்பெட்டி உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது இதனால் சுமார் ரூ600 கோடி மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது என கவலையில் ஆழ்ந்துள்ளனர் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள்தூத்துக்குடி நெல்லை விருதுநகர் தர்மபுரி வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் முழுநேர மற்றும் பகுதி நேர இயந்திர தீப்பெட்டி ஆலைகள் இயங்கி வருகிறது நேர்முகமாகவும் மறைமுகமாகவும் இத் தொழிலில் சுமார் 7 லட்சம் பேர் ஈடுபட்டு வருகின்றனர் இவற்றில் 80 சதவிகிதம் பெண்கள்தான் தீக்குச்சி உற்பத்தி செய்யப் பயன்படும் மரத்தடிகள் கேரளா தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்திலிருந்தும் கொண்டு வரப்படுகின்றன கஜா புயல் பாதிப்பாலும் மரத்தடிகளின் வரத்து குறைவினாலும் சுமார் ரூ600 கோடி மதிப்பிலான தீப்பெட்டி உற்பத்தி பாதிப்படைந்துள்ளன என்கின்றனர் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள்இதுகுறித்து நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கச் செயலாளர் சேதுரத்தினம் பேசுகையில்  “தீபாவளிப் பண்டிகைக்குப் பிறகு தீப்பெட்டி உற்பத்தி சுமாராக இருந்து வந்தது  கஜா புயலின் தாக்கத்தால் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன இதனால் அங்கிருந்து தீக்குச்சி தயாரிக்கப் பயன்படும் மரத்தடிகளைக் கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது இது தவிர மழை தொடர்ச்சியாகப் பெய்து வருவதால் கேரளாவிலிருந்தும் மரத்தடிகள் கொண்டு வரமுடியாத சூழலும் ஏற்பட்டுள்ளதுஇதனால் தீப்பெட்டி உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது இப்பகுதி முழுவதும் மானாவாரி விவசாயப் பகுதி எனவே தற்பொழுது மழை பெய்துள்ளதால் பெரும்பாலான பெண்கள் விவசாயப் வேலைகளுக்குச் சென்று விடுவதால்  தீப்பெட்டி ஆலைக்கு வரும் பெண்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது தீப்பெட்டி உற்பத்தி பாதிப்புக்கு இதுவும் ஒரு காரணம்  இதனால் தினசரி 40 கோடி ரூபாய் முதல் 50 கோடி ரூபாய் வரை தீப்பெட்டி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது  கடந்த 2 வாரங்களில் சுமார் ரூ600 கோடி தீப்பெட்டி பண்டல்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது  ஏற்கெனவே வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்காக பண்டல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் இனி தீப்பெட்டி உற்பத்தி செய்தால் மட்டுமே பண்டல்களை அனுப்ப முடியும் என்ற சூழல்  நிலவுகிறது ஏற்கெனவே தீப்பெட்டி தயாரிப்பு மூலப்பொருள்களின் விலை உயர்வு ஜிஎஸ்டிவரி விதிப்பு கட்டுப்படியாகாத பண்டல்களின் அடக்கவிலை ஆகிய காரணங்களால் நலிவடைந்துவிட்ட தீப்பெட்டித் தொழில் கஜா புயல் மழை பாதிப்பால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது” என்றார்

Leave A Reply

Your email address will not be published.