கத்தார் மண்ணில்தான் பிஃபா 2022 நடக்கும்! – அண்டை நாடுகளால் ஒதுக்கப்பட்ட அரபு தேசத்தின் எழுச்சி

0 6

2022 பிஃபா  உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்த உற்சாகமாகத் தயாராகிவருகிறது கத்தார் `இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாண்டா’ என்பதுபோல நாலா புறமும் நெருக்கடியைச் சந்தித்துவந்தாலும் ஆகவேண்டிய வேலைகளைக் கண்ணும் கருத்துமாகச் செய்துவருகிறது கத்தார் உலகக் கோப்பையை நடத்தும் முதல் வளைகுடா நாடு உலகக் கோப்பையை நடத்தும் குட்டி நாடு இப்படி பல்வேறு சிறப்பம்சங்களைத் தன்னுள் அடக்கியுள்ளது கத்தார் ஆனால் இந்த வாய்ப்பு அவ்வளவு எளிதில் கிடைத்துவிடவில்லை அமெரிக்கா ஜப்பான் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுடன் போராடி 2022 உலகக்கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பைப் பெற்றது முழுவீச்சில் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டது எதிர்பாராத விதமாக 2017-ம் ஆண்டு கத்தாருக்கு மிகப் பெரிய நெருக்கடி சூழல் ஏற்பட்டது அதுவும் தன் அண்டை நாடுகளால் ஆம் ஜூன் 5 2017 – கத்தாருடனான அனைத்து உறவுகளையும் சவுதி அரேபியா ஐக்கிய அரபு நாடுகள் பஹ்ரைன் எகிப்து ஆகிய அண்டை நாடுகள் துண்டித்துக்கொண்டன அரசியல் வர்த்தகம் போக்குவரத்து ஆகிய அனைத்து உறவுகளையும் துண்டித்து கத்தாரை தனிமைப்படுத்தினகத்தார் தீவிரவாதத்துக்கு ஆதரவளிக்கிறது இரானுடன் நெருக்கமாக இருக்கிறது” என்பதே கத்தார் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு `அல் ஜசீரா தொலைக்காட்சியை நிறுத்த வேண்டும் இரானுடனான உறவுகளைத் துண்டிக்க வேண்டும் உள்ளிட்ட சில நிபந்தனைகளை விடுத்து அதற்கு ஒப்புக்கொண்டால் அனைத்து தடைகளும் நீக்கப்படும் என்று அவை கத்தாருக்கு கெடு விதித்தன ஆனால் அண்டை நாடுகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக மறுத்த கத்தார் அவற்றின் நிபந்தனைகளையும் ஏற்க மறுத்துவிட்டது ‘உங்கள் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள முடியாது இது எங்கள் இறையாண்மைக்கு விடுக்கப்பட்ட சவால்’ என்று சூளுரைத்தது கத்தார் பதிலுக்கு சவுதி உள்ளிட்ட நாடுகள் `கத்தாருக்கு எதிராகப் புதிய அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை எடுக்கப்போகிறோம்’ என்று அச்சுறுத்தின கத்தார் கண்டுகொள்ளவில்லை விமானப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் கத்தாரிலிருந்து வெளியூர்களுக்குச் செல்பவர்களும் கத்தாருக்கு வருபவர்களும் சிரமத்துக்கு ஆளானார்கள் துபாயிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருள்கள் நிறுத்தப்பட்டதால் பால் காய்கறி உள்ளிட்ட பொருள்களுக்கு கத்தாரில் தட்டுப்பாடு நிலவியது ஆனால் அனைத்தையும் சில மாதங்களில் சரிசெய்துவிட்டது கத்தார் ஒரு சின்ன உதாரணம் 2017-ம் ஆண்டுக்கு முன்புவரை ஒரு பால் பண்ணைக்கூட இல்லாத நாட்டில் சில மாதங்களில் 10000 கால்நடைகள் இறக்குமதி செய்யப்பட்டன இப்போது தன் நாட்டு மக்களுக்கான பால் தேவையை வெளிநாடுகளை சார்ந்திராமல் கத்தாரே பூர்த்தி செய்கிறது  வான்வழி கடல்வழி போக்குவரத்தை அண்டை நாடுகள் துண்டித்தாலும் இரானின் வழியாகப் போக்குவரத்தை உருவாக்க முயன்று வருகிறது இப்போது ஃபிஃபா விஷயத்துக்கு வருவோம்   2022-ம் ஆண்டு நவம்பர் 21-ம் தேதி கத்தார் தலைநகர் தோகாவில் கால்பந்து உலகக் கோப்பை தொடங்குகிறது இதனிடையே `2022 ஃபிஃபா உலகக் கோப்பைத் தொடரில் 48 அணிகள் இடம்பெற வாய்ப்புள்ளது அதற்கான சாத்தியங்களைப் பார்த்து வருகிறோம்’ என்று ஃபிஃபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ கூறினார் இதனால் கத்தார் மீண்டும் நெருக்கடியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது அங்கு முன்னரே அறிவிக்கப்பட்டபடி சர்வதேச தரத்திலான 9 கால்பந்து மைதானங்கள் தயாராகிவிட்டதா அண்டை நாடுகள் விதித்த தடைகளிலிருந்து கத்தார் மீண்டு வந்ததா இல்லையா இந்தக் கேள்விகளுக்கு கத்தாரில் வசிப்பவர்களால்தான் சரியான பதிலளிக்க முடியும் எனவே கத்தார் தலைநகர் தோகாவில் வசித்து வரும் சென்னை இளைஞர் தினேஷை தொடர்புகொண்டு பேசினோம்`அண்டை நாடுகள் விதித்த தடைகள் கத்தாரில் எந்தவித பெரிய பாதிப்புகளையும் ஏற்படுத்தவில்லை விமானப் போக்குவரத்து மட்டும்தான் கொஞ்சம் பாதிக்கப்பட்டுள்ளது மற்றபடி இங்கு எந்தவித பிரச்னையும் இல்லை ஃபிஃபாவுக்காக முழுவீச்சில் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன மெட்ரோ வேலையும் முடியும் தருவாயில் உள்ளது சில நாள்களில் செயல்பாட்டுக்கு வந்துவிடும் உணவுப் பொருள்களுக்கும் எந்தத் தட்டுப்பாடும் இல்லை ஃபிஃபா ஏற்பாடுகளில்தான் சின்னச் சின்ன சிக்கல் ஏற்பட்டுள்ளது முன்னர் 36 அணிகள் பங்குபெறுவதாக இருந்தது அதற்கேற்றபடி ஸ்டேடியம் தங்கும் விடுதிகள் உள்ளிட்டவற்றை கத்தார் ஏற்பாடு செய்து வந்தது ஆனால் ஃபிஃபா அணிகளின் எண்ணிக்கையை 48 ஆக உயர்த்தத் திட்டமிட்டு வருகிறது 16 அணிகள் கூடுதலாகச் சேர்த்தால் போட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்   மைதானங்களின் தேவை எண்ணிக்கையும் அதிகரிக்கும் இங்கு 9 மைதானங்கள்தான் உள்ளன எனவே ஃபிஃபா மற்ற வளைகுடா நாடுகளுடன் போட்டி உரிமையைப் பகிர்ந்துகொள்ள கத்தாரிடம் பேசி வருகிறது அதாவது பாதி போட்டிகள் இங்கேயும் மீதி போட்டிகள் மற்ற வளைகுடா நாடுகளிலும் நடக்கும் ஃபிஃபாவின் இந்தத் திட்டத்துக்கு கத்தார் ஒப்புக்கொள்ளவில்லை 2022 உலகக் கோப்பை கத்தார் மண்ணில்தான் நடக்க வேண்டும் நாங்கள் புதிதாக மைதானம் கட்டத் தயார் போட்டி தேதிகளை மட்டும் கொஞ்சம் தள்ளிவையுங்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடிப்போம்” என்று சொல்லிவிட்டது என்ன நடக்கும் என்பதை யூகிக்க முடியவில்லை என்ன நடந்தாலும் கத்தார் அரசு சமாளித்துவிடும் என்று நினைக்கிறேன்” என்றார் நம்பிக்கையுடன் உலகக் கால்பந்து போட்டியில் பங்குபெறாத ஒரு சிறிய நாடு பணத்தை வாரி இரைத்து சர்வதேச தரத்தில் மைதானங்களை அமைக்கிறது உலகக் கோப்பை முடிந்ததும் அந்தப் பிரமாண்ட கால்பந்து மைதானங்களுக்கு வேலையில்லை ஆனாலும் புதிதாகக் கால்பந்து மைதானங்கள் அமைக்கவும் நாங்கள் தயார் என்கிறது கிடைத்த உரிமத்தை பங்குபோட மாட்டோம் என்றும் உறுதியாகக் கூறியிருக்கிறது கத்தாரின் தனித்துவம் இதுதான் எந்தச் சூழலிலும் யாருக்கும் தலைவணங்காது படிந்தும் போகாது இந்தத் தனித்துவம்தான் பிற வளைகுடா நாடுகளின் பிரச்னை ’கத்தாரில் உலகக் கோப்பை நடக்கும் இது வளைகுடா நாடுகளின் பெருமை உலக கால்பந்து ரசிகர்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான் 2022-ம் ஆண்டு கத்தாருக்கு வாருங்கள் சிறந்த அனுபவத்தைப் பெறுவீர்கள்’  என்று வாக்கு கொடுத்திருக்கிறார் கத்தாரின் அமிர் இந்த வாக்கை கத்தார் காப்பாற்றுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம் 

Leave A Reply

Your email address will not be published.