குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி – உறுதிசெய்யப்பட்ட ட்ரம்ப் – புதின் சந்திப்பு #G20Summit

0 28

ஜி-20 மாநாடு அர்ஜென்டினா தலைநகர் புனோஸ் ஐரிஸில் நடைபெற்று வருகிறது இந்த மாநாட்டின்போது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் ஆகியோர் சந்தித்துப் பேசத் திட்டமிட்டிருந்தனர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்ட இந்தச் சந்திப்பு ஏற்பாட்டை மாஸ்கோவில் சிறைவைக்கப்பட்ட உக்ரைன் மாலுமிகளை ரஷ்ய அரசு விடுதலை செய்யவில்லை என்பதைக் காரணமாகக் காட்டி டொனால்டு ட்ரம்ப் ரத்து செய்துவிட்டார்“எனக்குக் கிடைத்த தகவலின்படி மாஸ்கோவின் கப்பலும் அதிலிருந்த மாலுமிகளும் ரஷ்யாவிலிருந்து உக்ரைனுக்கு இன்னும் திருப்பி அனுப்பப்படவில்லை என்று தெரிகிறது அதனால் அர்ஜென்டினாவில் வைத்து ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினைச் சந்திக்கும் எனது திட்டத்தை இப்போதைக்குக் கைவிடுவதாக முடிவு செய்துள்ளேன் இந்த முடிவு எல்லாத் தரப்பினருக்கும் நல்லதாக அமையும் என்பதால் இப்படிச் செய்துள்ளேன்” என்று ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்மேலும் அவர் “இந்த நிலைமை சரியானவுடன் ரஷ்ய அதிபரைச் சந்திப்பதுதான் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும் அந்த நாளுக்காக நான் காத்திருக்கிறேன்” என்றும் கூறியுள்ளார்இதற்கிடையே “புதினுடனான சந்திப்பை வாஷிங்டன் உறுதி செய்துள்ளதாக அர்ஜென்டினா க்ரேம்லின்னின்  செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன

Leave A Reply

Your email address will not be published.